6ஆம் தேதி அறிமுகமாகிறது டாடாவின் புதிய மின்சார கார்! டீசர பாத்தீங்க நிச்சயம் இந்த காருக்காக காத்திருப்பீங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிக விரைவில் புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் ஒன்றை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் வருகையை உறுதிப்படுத்தும் நிறுவனம் புதிய டீசர் படங்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

வரும் 6 ஆம் தேதி அறிமுகமாகிறது டாடாவின் புதிய மின்சார கார்... டீசரை பாத்தீங்க நிச்சயம் இந்த காருக்காக காத்திருக்க தோணும்!

டாடா மோட்டார்ஸ் மிக விரைவில் அதன் அப்டேட் செய்யப்பட்ட நெக்ஸான் இவி-யை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. அதிக ரேஞ்ஜ், பெரிய பேட்டரி மற்றும் புதுப்பிக்கப்பட்ட தோற்றம் உள்ளிட்டவற்றுடன் இக்கார் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் 6 ஆம் தேதி அறிமுகமாகிறது டாடாவின் புதிய மின்சார கார்... டீசரை பாத்தீங்க நிச்சயம் இந்த காருக்காக காத்திருக்க தோணும்!

இந்த நிலையில் புதிய கார் ஒன்றின் வருகையை உறுதிப்படுத்தும் வகையில் டாடா நிறுவனம் புதிய டீசர் படங்களை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் சமூக வலை தள பக்கங்ககள் வாயிலாக அவை வெளியிடப்பட்டுள்ளன. அந்த டீசர் படங்கள் டாடாவின் புதிய வாகனம் வரும் 6ம் தேதி வெளியீடு பெற இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கின்றது.

வரும் 6 ஆம் தேதி அறிமுகமாகிறது டாடாவின் புதிய மின்சார கார்... டீசரை பாத்தீங்க நிச்சயம் இந்த காருக்காக காத்திருக்க தோணும்!

இதன் வாயிலாக வெகு விரைவில் டாடாவின் புதிய தயாரிப்பு ஒன்று இந்திய சந்தையில் அறிமுகமாக இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த புதிய வாகனம் அப்டேட் செய்யப்பட்ட நெக்ஸான் இவி ஆக இருக்கும் என பல கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், பிற தகவல்களோ இது டாடாவின் புதுமுக தயாரிப்பின் கான்செப்ட் என கூறுகின்றன.

வரும் 6 ஆம் தேதி அறிமுகமாகிறது டாடாவின் புதிய மின்சார கார்... டீசரை பாத்தீங்க நிச்சயம் இந்த காருக்காக காத்திருக்க தோணும்!

இந்த குழப்பமான பதிவுகளால் டாடா வாகன பிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர். இதனை செய்யும் வகையிலேயே நிறுவனம் காரின் குறிப்பிட்ட சில பாகங்களை மட்டுமே டீசர் படங்கள் வாயிலாக வெளியீடு செய்திருக்கின்றது. அந்தவகையில், காரின் எல்இடி டிஆர்எல் மற்றும் பம்பர் ஆகியவற்றை அது வெளிக்காட்டியிருக்கின்றது.

வரும் 6 ஆம் தேதி அறிமுகமாகிறது டாடாவின் புதிய மின்சார கார்... டீசரை பாத்தீங்க நிச்சயம் இந்த காருக்காக காத்திருக்க தோணும்!

அதாவது, காரின் முழு உருவத்தையும் விபரிக்கின்ற படங்களை வெளியிடாமல், அதன் கவர்ச்சியான அங்கங்களை மட்டுமே வெளியீடு செய்திருக்கின்றது. நிறுவனத்தின் இந்த செயல் இக்காரின் வெளியீட்டின்மீது அதிக எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

வரும் 6 ஆம் தேதி அறிமுகமாகிறது டாடாவின் புதிய மின்சார கார்... டீசரை பாத்தீங்க நிச்சயம் இந்த காருக்காக காத்திருக்க தோணும்!

அதேநேரத்தில், தற்போது வெளியாகியிருக்கும் படங்கள் காரின் ஹெட்லைட் எந்த இடத்தில் என்ன ஸ்டைலில் இருக்கும் என்பதையும், என்ன மாதிரியான அலாய் வீல்கள் இக்காரில் பயன்படுத்தப்பட இருக்கின்றன என்பதையும் வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. இந்த அமைப்புகளை வைத்து பார்க்கையில் இது நிச்சயம் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷன் நெக்ஸான் இல்லை என்பது தெளிவாக தெரிகின்றது.

வரும் 6 ஆம் தேதி அறிமுகமாகிறது டாடாவின் புதிய மின்சார கார்... டீசரை பாத்தீங்க நிச்சயம் இந்த காருக்காக காத்திருக்க தோணும்!

இருப்பினும், என்ன கார் மாடல் என்பதை பொருத்திருந்தான் பார்க்க வேண்டும். அதேநேரத்தில், தற்போது வெளியாகியிருக்கும் டீசர் படங்கள் இது ஓர் எலெக்ட்ரிக் வாகனம் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இவி எனும் பேட்ஜ் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற தகவல்கள் டாடா வாகன பிரியர்கள் இக்கார்குறித்த கூடுதல் விபரங்களுக்கு மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்க தொடங்கியிருக்கின்றனர்.

வரும் 6 ஆம் தேதி அறிமுகமாகிறது டாடாவின் புதிய மின்சார கார்... டீசரை பாத்தீங்க நிச்சயம் இந்த காருக்காக காத்திருக்க தோணும்!

டாடா சியாரா எலெக்ட்ரிக் எஸ்யூவி காராக இருக்குமோ?

டாடா நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் சியாரா இவி கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தியது. இந்த காரின் அறிமுகம் விரைவில் அரங்கேற இருப்பதாக அண்மைக் காலங்களாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. எனவே, வரும் 6ம் தேதி அறிமுகமாக இருப்பது இந்த காராகதான் இருக்குமோ என சந்தேகம் எழும்பத் தொடங்கியிருக்கின்றது.

வரும் 6 ஆம் தேதி அறிமுகமாகிறது டாடாவின் புதிய மின்சார கார்... டீசரை பாத்தீங்க நிச்சயம் இந்த காருக்காக காத்திருக்க தோணும்!

முன்னதாக விற்பனையில் இருந்த சியாரா காரின் வடிவமைப்பை இந்த நவீன கால சியாரா பெற்றிருக்கின்றது. பழைய சியாராவிற்கு தற்போதும் ரசிகர்கள் உண்டு. இவர்களை தனது வாடிக்கையாளர்களாக மாற்றும் பொருட்டே நிறுவனம் நவீன கால காராக சியாராவை உருவாக்கி வருகின்றது.

இந்த காருக்கு 2020 ஆட்டோ எக்ஸ்போவிலேயே மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்தது. ஆகையால், இதன் மின்சார வெர்ஷனுக்கு நிச்சயம் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இக்காரை நிறுவனம் அதன் புகழ்பெற்ற ஆல்ஃபா அல்லது ஒமெகா பிளாட்பாரத்தில் வைத்து வடிவமைக்க இருக்கின்றது. பிரத்யேகமாக நவீன கால கார்களுக்காக வடிவமைக்கப்பட்ட இயங்குதளமே இதுவாகும்.

More from DriveSpark

Article Published On: Monday, April 4, 2022, 14:50 [IST]
English summary
Tata revealed new teaser for all new electric suv
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+