தனித்துவமான நிறம் & அம்சங்களுடன் நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் 'ஜெட் எடிசன்' அறிமுகம்.. டாடாவோட தரமான தயாரிப்பு!

டாடா நிறுவனம் அதன் நெக்ஸான் இவி ஜெட் எடிசனின் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

தனித்துவமான நிறம் & அம்சங்களுடன் நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் 'ஜெட் எடிசன்' அறிமுகம்... டாடாவோட தரமான தயாரிப்பு...

வரும் பண்டிகைத் தினங்களைச் சிறப்பிக்கும் விதமாக வாகன உற்பத்தியாளர்கள் புதுமுக மற்றும் சிறப்பு பதிப்பு வாகனங்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்தவகையில், சமீபத்தில் இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், 'ஜெட் எடிசன்' எனும் சிறப்பு பதிப்பை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

தனித்துவமான நிறம் & அம்சங்களுடன் நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் 'ஜெட் எடிசன்' அறிமுகம்... டாடாவோட தரமான தயாரிப்பு...

நெக்ஸான், நெக்ஸான் இவி (எலெக்ட்ரிக் கார்), ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய கார் மாடல்களில் இந்த சிறப்பு பதிப்பு ஜெட் எடிசன் விற்பனைக்குக் கிடைக்கும். இவற்றில் நெக்ஸான் இவி-யை தவிர மற்ற அனைத்தின் விலைகளும் அறிமுக நாளின்போது டாடா அறிவித்தது. ஆகையால், நெக்ஸான் இவி ஜெட் எடிசனின் விலை மட்டும் தெரியாமல் இருந்தது. இதன் விலை பற்றிய தகவலையே தற்போது வெளியிட்டு, அக்காரை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது, டாடா நிறுவனம்.

தனித்துவமான நிறம் & அம்சங்களுடன் நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் 'ஜெட் எடிசன்' அறிமுகம்... டாடாவோட தரமான தயாரிப்பு...

நெக்ஸான் இவி பிரைம் மற்றும் நெக்ஸான் இவி மேக்ஸ் ஆகிய இரண்டு ஜெட் எடிசன்களின் விலைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின் விலை விபரங்களைக் கீழே காணலாம்.

டாடா நெக்ஸான் இவி பிரைம் (எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ்) - ரூ. 17.90 லட்சம்

டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (எக்ஸ்இசட் பிளஸ் லக்ஸ்) - ரூ. 19.54 லட்சம்

டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் (ஏசி எஃப்சி டபிள்யூஎம்யு) - ரூ. 20.04 லட்சம், என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தனித்துவமான நிறம் & அம்சங்களுடன் நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் 'ஜெட் எடிசன்' அறிமுகம்... டாடாவோட தரமான தயாரிப்பு...

இதன் வாயிலாக டாடா நெக்ஸான் இவி ஜெட் எடிசன் ரூ. 17.90 தொடங்கி ரூ. 20.04 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அனைத்து ஜெட் எடிசன் நெக்ஸான் இவி கார்களும் ஒற்றை டூயல் டோன் வண்ண தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். எர்தி ப்ரோன்ஸே மற்றும் பிளாட்டினம் சில்வர் ரூஃப் நிறத்திலேயே அது கிடைக்கும்.

தனித்துவமான நிறம் & அம்சங்களுடன் நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் 'ஜெட் எடிசன்' அறிமுகம்... டாடாவோட தரமான தயாரிப்பு...

இந்த அட்டகாசமான நிற தேர்வுடன் சேர்த்து 16 அங்குல டைமண்ட் கட் ஜெட் பிளாக் அலாய் வீல்கள், பியானோ கருப்பு நிறத்திலான க்ரில் மற்றும் ஹ்யூமனிட்டி லைன் ஆகிய சிறப்பம்சங்கள் இந்த ஜெட் எடிசன் நெக்ஸான் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே வழக்கமான டாடா நெக்ஸான் இவி-யில் இடம் பெறாதவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

தனித்துவமான நிறம் & அம்சங்களுடன் நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் 'ஜெட் எடிசன்' அறிமுகம்... டாடாவோட தரமான தயாரிப்பு...

இந்த ஜெட் எடிசனின் உட்பக்கமும் மிக சூப்பரானதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒய்ஸ்டர் ஒயிட் மற்றும் கிரானைட் பிளாக் ஆகிய நிறங்களால் காரின் கேபின் அலங்காரம் செய்யப்பட்டிருக்கின்றது. இத்துடன், ப்ரான்ஸே டெகோ தையல்களால் காருக்குள் இருக்கும் இருக்கைகள் தைக்கப்பட்டுள்ளன. இவை கூடுதல் பிரீமியம் தோற்றத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.

தனித்துவமான நிறம் & அம்சங்களுடன் நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் 'ஜெட் எடிசன்' அறிமுகம்... டாடாவோட தரமான தயாரிப்பு...

இந்த பிரீமியம் லுக்கை மேலும் வலுப்படுத்தும் வகையில் டூர்களில் லெதர் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன், டெக்னோ ஸ்டீல் ப்ரோன்ஸேவிலான பேட்கள் டூரின் மிடில் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் சேர்த்து டாடா நெக்ஸான் இவி ஜெட் மாடலில் ஆட்டோ டிம்மிங் ஐஆர்விம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், மல்டி மோட் ரீ-ஜெனரேட்டிவ் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஐ-டிபிஎம்எஸ், ஏர் ப்யூரிஃபையர் மற்றும் ஒயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் உள்ளிட்ட அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

தனித்துவமான நிறம் & அம்சங்களுடன் நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் 'ஜெட் எடிசன்' அறிமுகம்... டாடாவோட தரமான தயாரிப்பு...

இதுதவிர ஸ்மார்ட்வாட்ச் இணைப்பு வசதியும் இந்த காரில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. நெக்ஸான் இவி மேக்ஸ் ஓர் முழு சார்ஜில் 437 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். அதேவேலையில், நெக்ஸான் இவி பிரைம் ஓர் ஃபுல் சார்ஜில் 312 கிமீ வரை மட்டுமே ரேஞ்ஜ் தரும். நெக்ஸான் இவி மேக்ஸின் அதிக ரேஞ்ஜிற்கு அந்த காரில் வழங்கப்பட்டிருக்கும் 40.5 kWh பேட்டரி பேக்கே காரணமாக உள்ளது. இந்த பெரிய பேட்டரி பேக்கே அதில் பொருத்தப்பட்டுள்ளது.

தனித்துவமான நிறம் & அம்சங்களுடன் நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் 'ஜெட் எடிசன்' அறிமுகம்... டாடாவோட தரமான தயாரிப்பு...

அதேநேரத்தில் நெக்ஸான் இவி பிரைம் தேர்வில் 30.2 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்விரு தேர்வுகளிலும் 141 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது வெறும் 9 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Friday, September 2, 2022, 15:05 [IST]
English summary
Tata reveals nexon ev max and prime jet editions price officially
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+