புதியதாக வெள்ளை நிறத்தேர்வில் டாடா சஃபாரி அட்வென்ச்சர் பெர்சோனா!! கூடுதல் வசதிகளுடன் அறிமுகம்!

சஃபாரி அட்வென்ச்சர் பெர்சோனா கார் இனி ஆர்கஸ் வெள்ளை (Orcus White) நிறத்திலும் விற்பனைக்கு கிடைக்க உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதியதாக வெள்ளை நிறத்தேர்வில் டாடா சஃபாரி அட்வென்ச்சர் பெர்சோனா!! கூடுதல் வசதிகளுடன் அறிமுகம்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகங்களுள் ஒன்று சஃபாரி ஆகும். ஹுண்டாய் அல்கஸார் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்களுக்கு போட்டியாக விளங்கும் சஃபாரியின் டாப் வேரியண்ட்டாக அட்வென்ச்சர் பெர்சோனா விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதியதாக வெள்ளை நிறத்தேர்வில் டாடா சஃபாரி அட்வென்ச்சர் பெர்சோனா!! கூடுதல் வசதிகளுடன் அறிமுகம்!

இந்த வேரியண்ட்டிற்கு தான் தற்போது புதியதாக ஆர்கஸ் வெள்ளை என்ற பெயிண்ட் தேர்வு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய நிறத்தேர்வுடன் முதல் & 2வது வரிசையிலும் மடக்கும் வசதி கொண்ட இருக்கைகள், வயர் இல்லா சார்ஜிங் வசதி, காற்று சுத்திகரிப்பான், வயர் இல்லா ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி உள்ளிட்டவையும் சஃபாரி அட்வென்ச்சர் பெர்சோனா காருக்கு கொடுக்கப்பட்டுள்ளன.

புதியதாக வெள்ளை நிறத்தேர்வில் டாடா சஃபாரி அட்வென்ச்சர் பெர்சோனா!! கூடுதல் வசதிகளுடன் அறிமுகம்!

அட்வென்ச்சர் பெர்சோனா என்ற டாப் வேரியண்ட் மட்டுமின்றி, கோல்டு எடிசனிலும் டாடா சஃபாரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சஃபாரி கோல்டு எடிசனை டாடா நிறுவனம் கடந்த 2021 செப்டம்பர் மாதத்தில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களை முன்னிட்டு அறிமுகப்படுத்தியது. பெயருக்கு ஏற்ப காஸ்மெட்டிக் மாற்றங்கள் மட்டுமில்லாமல் சஃபாரியின் கோல்டு எடிசனில் சில புதிய வசதிகளும் சேர்க்கப்பட்டன.

புதியதாக வெள்ளை நிறத்தேர்வில் டாடா சஃபாரி அட்வென்ச்சர் பெர்சோனா!! கூடுதல் வசதிகளுடன் அறிமுகம்!

அத்துடன் சஃபாரியின் வேரியண்ட்கள் வரிசையில் அட்வென்ச்சர் பெர்சோனாவிற்கு மேலாக அதன் கோல்டு எடிசன் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது புதிய நிறத்தேர்வுடன் சில கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் மீண்டும் அட்வென்ச்சர் பெர்சோனாவின் தோற்றம் சஃபாரியின் வேரியண்ட்களிலேயே புத்துணர்ச்சியான மாறியுள்ளது.

புதியதாக வெள்ளை நிறத்தேர்வில் டாடா சஃபாரி அட்வென்ச்சர் பெர்சோனா!! கூடுதல் வசதிகளுடன் அறிமுகம்!

மற்ற சில டாடா கார்களை போன்று சஃபாரி 7-இருக்கை எஸ்யூவியின் வேரியண்ட்கள் வரிசையிலும் டார்க் எடிசன் உள்ளது குறிப்பிடத்தக்கது. சஃபாரி டார்க், கோல்டு மற்றும் அட்வென்ச்சர் பெர்சோனா இவை மூன்றும் தங்களுக்கென தனி அடையாளங்களை கொண்டுள்ளன. இதனால் இவை மூன்றும் வழக்கமான சஃபாரி வேரியண்ட்களில் இருந்து சற்று வேறுப்படுகின்றன.

புதியதாக வெள்ளை நிறத்தேர்வில் டாடா சஃபாரி அட்வென்ச்சர் பெர்சோனா!! கூடுதல் வசதிகளுடன் அறிமுகம்!

2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா சஃபாரி எஸ்யூவி மாடல் 6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. டாடா மோட்டார்ஸின் நடுத்தர-அளவு எஸ்யூவி காரான ஹெரியரின் 3-இருக்கை வரிசை வெர்சன் தான் சஃபாரி என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். அதாவது, ஹூண்டாய் மோட்டார்ஸில் க்ரெட்டா - அல்கஸாரை போல தான் டாடா மோட்டார்ஸில் ஹெரியர் - சஃபாரி ஆகும்.

புதியதாக வெள்ளை நிறத்தேர்வில் டாடா சஃபாரி அட்வென்ச்சர் பெர்சோனா!! கூடுதல் வசதிகளுடன் அறிமுகம்!

ஹெரியர் அளவிற்கு இல்லையென்றாலும், சஃபாரி கார்களும் ஒவ்வொரு மாதத்திலும் குறிப்பிட்ட யூனிட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. டாடா சஃபாரி அட்வென்ச்சர் பெர்சோனாவிற்கு ‘வெப்பமண்டல மூடுபனி' என்கிற ஒற்றை நிறத்தேர்வு மட்டுமே அறிமுகத்தில் இருந்து கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி ஆர்கஸ் வெள்ளை நிறத்திலும் வாங்கலாம்.

புதியதாக வெள்ளை நிறத்தேர்வில் டாடா சஃபாரி அட்வென்ச்சர் பெர்சோனா!! கூடுதல் வசதிகளுடன் அறிமுகம்!

இந்த பெயிண்ட் தேர்வில் சஃபாரி காரின் வெளிப்பக்கத்தில் ஹெட்லேம்ப்கள், பின்பக்கத்தை காட்டும் வெளிப்புற கண்ணாடிகள், கதவு கைப்பிடிகள், 3-அம்பு வடிவிலான முன்பக்க க்ரில், லோகோக்கள், முன்பக்க சறுக்குத்தட்டு உள்ளிட்ட பகுதிகளில் க்ரோம் துண்டுகளுக்கு பதிலாக கருப்பு நிறத்தில் ஃபினிஷிங் கொடுக்கப்பட்டுள்ளன.

புதியதாக வெள்ளை நிறத்தேர்வில் டாடா சஃபாரி அட்வென்ச்சர் பெர்சோனா!! கூடுதல் வசதிகளுடன் அறிமுகம்!

அதேநேரம் இந்த புதிய நிறத்தேர்வில் காரின் 18-இன்ச் மெஷின்-கட் அலாய் சக்கரங்கள் சற்று கருப்பு கலந்த க்ரே நிறத்தில் கிடைக்கும். உட்புற கேபின் பியானோ கருப்பு நிறத்திலான உள்ளீடுகளுடன் பழுப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற வேரியண்ட்களில் சஃபாரியின் உட்புற கேபின் வெள்ளை நிறத்தில் வழங்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

புதியதாக வெள்ளை நிறத்தேர்வில் டாடா சஃபாரி அட்வென்ச்சர் பெர்சோனா!! கூடுதல் வசதிகளுடன் அறிமுகம்!

சஃபாரியின் கேபினில் சிறப்பம்சங்களாக 8.8-இன்ச் தொடுத்திரை, 9-ஸ்பீக்கர் ஜேபிஎல் ஆடியோ, 6 காற்றுப்பைகள், பனோராமிக் சன்ரூஃப் மற்றும் பாதைக்கு ஏற்ற மோட்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த 7-இருக்கை எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் க்றையோடெக் டீசல் என்ஜினை டாடா நிறுவனம் வழங்குகிறது.

புதியதாக வெள்ளை நிறத்தேர்வில் டாடா சஃபாரி அட்வென்ச்சர் பெர்சோனா!! கூடுதல் வசதிகளுடன் அறிமுகம்!

அதிகப்பட்சமாக 170 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் & 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகள் கொடுக்கப்படுகின்றன. டாடா சஃபாரி எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.14.99 லட்சங்களில் இருந்து ரூ.23.29 லட்சங்கள் வரையில் உள்ளன.

Article Published On: Wednesday, February 16, 2022, 22:59 [IST]
English summary
Tata Safari Adventure Persona Now In White Colour With Added Features.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+