ரேடார் எல்லாம் மாட்டி செக் பண்றாங்க! புது டாடா சஃபாரி காரில் இப்படி ஒரு வசதியா! தரமான சம்பவம் காத்திருக்கு!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் தற்போது அடாஸ் தொழில்நுட்ப வசதி மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. Advanced Driver Assistance Systems என்பதுதான் சுருக்கமாக ADAS என அழைக்கப்படுகிறது. இது கார்களை விபத்தில் இருந்து பாதுகாக்கும் பல்வேறு பாதுகாப்பு வசதிகளின் தொகுப்பாகும்.

வாடிக்கையாளர்கள் விரும்புவதால், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தற்போது போட்டி போட்டு கொண்டு தங்களது கார்களில் அடாஸ் வசதியை வழங்க தொடங்கியுள்ளன.இதில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனமும் ஒன்று. எதிர்காலத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் கார்களில் அடாஸ் வசதி இருக்கும் என்பதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில்தான் உறுதி செய்தது. இந்த சூழலில், விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய டாடா சஃபாரி (Tata Safari) காரில், அடாஸ் வசதி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரேடார் எல்லாம் மாட்டி செக் பண்றாங்க! புது டாடா சஃபாரி காரில் இப்படி ஒரு வசதியா! தரமான சம்பவம் காத்திருக்கு!
Image used for representation purpose only

இதன் மூலம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களில் அடாஸ் வசதி இடம்பெறும் முதல் மாடல் என்ற பெருமையை புதிய சஃபாரி பெறலாம். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட புதிய சஃபாரி காரை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த புதிய மாடலை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சாலைகளில் சோதனை செய்து வருகிறது. அப்படி சோதனை செய்யப்பட்டு வரும் புதிய டாடா சஃபாரி காரின் முன் பகுதியில் அடாஸ் ரேடார் பொருத்தப்பட்டுள்ளது.

எனவேதான் புதிய டாடா சஃபாரி காரில் அடாஸ் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய டாடா சஃபாரி காருக்காக காத்திருப்பவர்கள் மத்தியில் இந்த தகவல் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடாஸ் தவிர, 360 டிகிரி கேமரா, தற்போது இருப்பதை காட்டிலும் பெரிய மற்றும் சிறந்த டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளும், புதிய டாடா சஃபாரி காரில் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் ஜனவரி மாதம் 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) நடைபெறவுள்ளது. இதில், புதிய சஃபாரி காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் காட்சிக்கு வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து வெகு விரைவில் புதிய டாடா சஃபாரி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யடலாம். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா சஃபாரி காரின் ஆரம்ப விலை 15.45 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 23.76 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஆனால் பல்வேறு கூடுதல் வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் புதிய டாடா சஃபாரி காரின் விலை இதைக்காட்டிலும் அதிகமாக இருக்கலாம். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய சஃபாரி தவிர, பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் (Tata Punch EV) ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகும்.

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட பின், 2023ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக பன்ச் எலெக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்து விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் தவிர, அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை (Tata Altroz EV) விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டங்களும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் உள்ளன. இவை எல்லாம் தவிர, சஃபாரி காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம்.

தற்போது இருப்பதை போலவே, எதிர்காலத்திலும் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் முதலிடத்தில் இருக்க வேண்டும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரும்புகிறது. எனவே இந்திய சந்தையில் குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ச்சியாக பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் தவிர, இன்னும் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டங்களை கையில் வைத்துள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, December 24, 2022, 23:19 [IST]
English summary
Tata safari facelift to get adas
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+