ரேட்லாம் ஒரு பிரச்னையே இல்லீங்க... டாடா சஃபாரிக்கு கஸ்டமர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... சேல்ஸ் தூள் கௌப்புது!

இந்தியாவில் டாடா சஃபாரி காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரேட்லாம் ஒரு பிரச்னையே இல்லீங்க... டாடா சஃபாரிக்கு கஸ்டமர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... சேல்ஸ் தூள் கௌப்புது!

இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பல்வேறு கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், சஃபாரி மிகவும் முக்கியமானது. நேர்மையாக சொல்வதென்றால் டாடா சஃபாரி உண்மையிலேயே மிக சிறப்பான கார். கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 1,481 சஃபாரி கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

ரேட்லாம் ஒரு பிரச்னையே இல்லீங்க... டாடா சஃபாரிக்கு கஸ்டமர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... சேல்ஸ் தூள் கௌப்புது!

சற்று அதிக விலை கொண்ட ஒரு கார் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் விற்பனையாவது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விஷயம். இந்த சிறப்பான விற்பனை எண்ணிக்கை மூலம் மாதாந்திர ரீதியில் டாடா சஃபாரி கார் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் 1,424 சஃபாரி கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

ரேட்லாம் ஒரு பிரச்னையே இல்லீங்க... டாடா சஃபாரிக்கு கஸ்டமர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... சேல்ஸ் தூள் கௌப்புது!

ஆனால் அதன்பின் வந்த டிசம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 1,481 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் டாடா சஃபாரி கார் விற்பனையில் 4 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. தற்போதைய தலைமுறை டாடா சஃபாரி கார் இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ரேட்லாம் ஒரு பிரச்னையே இல்லீங்க... டாடா சஃபாரிக்கு கஸ்டமர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... சேல்ஸ் தூள் கௌப்புது!

எனவே கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் இதன் விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட முடியாது. தற்போதைய நிலையில் டாடா சஃபாரி காரில் ஒரே ஒரு இன்ஜின் தேர்வு மட்டுமே வழங்கப்படுகிறது. இது 2.0 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன்-4 டீசல் யூனிட் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

ரேட்லாம் ஒரு பிரச்னையே இல்லீங்க... டாடா சஃபாரிக்கு கஸ்டமர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... சேல்ஸ் தூள் கௌப்புது!

இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என 2 கியர் பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய 1.5 லிட்டர், டர்போசார்ஜ்டு, இன்லைன்-4 பெட்ரோல் இன்ஜினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ரேட்லாம் ஒரு பிரச்னையே இல்லீங்க... டாடா சஃபாரிக்கு கஸ்டமர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... சேல்ஸ் தூள் கௌப்புது!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சஃபாரி காரில் இந்த இன்ஜின் தேர்வை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ஹாரியர் காரிலும் இந்த இன்ஜின் எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர ஹூண்டாய் கிரெட்டா காருக்கு போட்டியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக கூறப்படும் புதிய எஸ்யூவி காரிலும் இந்த இன்ஜின் பொருத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரேட்லாம் ஒரு பிரச்னையே இல்லீங்க... டாடா சஃபாரிக்கு கஸ்டமர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... சேல்ஸ் தூள் கௌப்புது!

இதற்கிடையே டாடா சஃபாரி கார் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது. தற்போதைய நிலையில் டாடா சஃபாரி காரின் ஆரம்ப விலை 14.99 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் மாடலின் விலை 23.29 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை இரண்டுமே எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

ரேட்லாம் ஒரு பிரச்னையே இல்லீங்க... டாடா சஃபாரிக்கு கஸ்டமர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... சேல்ஸ் தூள் கௌப்புது!

இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் ஹூண்டாய் அல்கஸார் ஆகிய கார்களுடன் போட்டியிட்டு வருகிறது. சஃபாரி காரை போன்றே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மற்ற கார்களின் விற்பனை சமீப காலமாக மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. குறிப்பாக நெக்ஸான் மற்றும் பன்ச் போன்ற கார்களின் விற்பனை தூள் கிளப்பி கொண்டுள்ளது.

ரேட்லாம் ஒரு பிரச்னையே இல்லீங்க... டாடா சஃபாரிக்கு கஸ்டமர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... சேல்ஸ் தூள் கௌப்புது!

இந்த சூழலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது சிஎன்ஜி செக்மெண்ட்டிலும் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் டியாகோ சிஎன்ஜி மற்றும் டிகோர் சிஎன்ஜி கார்கள் சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் டியாகோ சிஎன்ஜி காரை நாங்கள் டெஸ்ட் டிரைவ் செய்து விட்டோம்.

ரேட்லாம் ஒரு பிரச்னையே இல்லீங்க... டாடா சஃபாரிக்கு கஸ்டமர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... சேல்ஸ் தூள் கௌப்புது!

வரும் காலங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் நிறைய சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிஎன்ஜி-க்கு முன்பாகவே எலெக்ட்ரிக் வாகனங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கி விட்டது. டாடா நெக்ஸான் மற்றும் டிகோர் கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்கள் தற்போது விற்பனைக்கு கிடைக்கின்றன.

ரேட்லாம் ஒரு பிரச்னையே இல்லீங்க... டாடா சஃபாரிக்கு கஸ்டமர்களிடம் செம ரெஸ்பான்ஸ்... சேல்ஸ் தூள் கௌப்புது!

வரும் காலங்களில் எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களின் மூலம் இயங்கும் வாகனங்கள்தான் ஆதிக்கம் செலுத்த போகின்றன என்பது உறுதியாகி விட்டது. அதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதே தயாராகி விட்டது. எனவே வரும் காலங்களிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

More from DriveSpark

Article Published On: Friday, January 28, 2022, 21:48 [IST]
English summary
Tata safari sales increased by 4 per cent in december 2021
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+