பிப்ரவரி மாதம் டாடா விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கடந்த பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட்டை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிப்ரவரி மாதம் டாடா விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்தியாவில் சமீப காலமாக டாடா மோட்டார்ஸ் நிறுவன வாகனங்களின் விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த வரிசையில் கடந்த பிப்ரவரி மாதமும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மிக சிறப்பான ஒரு மாதமாக அமைந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்திருந்த வாகனங்களின் எண்ணிக்கை வெறும் 61,258 மட்டுமே.

பிப்ரவரி மாதம் டாடா விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 77,733 ஆக உயர்ந்துள்ளது. இது 27 சதவீத வளர்ச்சியாகும். அதே சமயம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் ஒட்டுமொத்தமாக விற்பனை செய்திருந்த வாகனங்களின் எண்ணிக்கை 73,875 ஆகும். இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரியில் வெறும் 58,366 ஆக மட்டுமே இருந்தது.

பிப்ரவரி மாதம் டாடா விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்த வகையில் பார்த்தாலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 27 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதில், பயணிகளின் வாகனங்களின் எண்ணிக்கை 39,981 ஆகும். ஆம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 39,981 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 47 சதவீத வளர்ச்சியாகும்.

பிப்ரவரி மாதம் டாடா விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ஏனெனில் கடந்த 2021ம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை வெறும் 27,225 ஆக மட்டுமே இருந்தது. பயணிகள் வாகனங்களின் விற்பனையை, அதாவது டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை இன்னும் நன்றாக ஆராய்ந்தால், நமக்கு மேலும் ஒரு சில தகவல்கள் கூடுதலாக கிடைக்கின்றன.

பிப்ரவரி மாதம் டாடா விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 37,135 ஐசி இன்ஜின் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்த ஐசி இன்ஜின் கார்களின் எண்ணிக்கை வெறும் 26,733 மட்டுமே. இந்த வகையில் பார்த்தால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 39 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

பிப்ரவரி மாதம் டாடா விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெறும் 492 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 2,846 ஆக உயர்ந்துள்ளது. இது 478 சதவீத வளர்ச்சியாகும். தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் கார் ஆகிய மின்சார தயாரிப்புகளை விற்பனை செய்கிறது.

பிப்ரவரி மாதம் டாடா விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

மேற்கண்ட 2 எலெக்ட்ரிக் கார்களுமே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. அதிலும் குறிப்பாக நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்தான் இந்தியாவில் தற்போதைய நிலையில் அதிகம் விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் கார் ஆகும். இதன் புதிய வெர்ஷனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி மாதம் டாடா விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்த புதிய வெர்ஷனில், தற்போது வழங்கப்பட்டு வரும் பேட்டரியை விட பெரிய பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தற்போது கிடைக்கும் ரேஞ்ஜை விட அதிக ரேஞ்ச் கிடைக்கும் என தெரிகிறது. பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் பயணிக்கும் தொலைவுதான் ரேஞ்ச் என குறிப்பிடப்படுகிறது.

பிப்ரவரி மாதம் டாடா விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இதுதவிர எதிர்காலத்தில் அல்ட்ராஸ் மற்றும் பன்ச் ஆகிய கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டமும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு உள்ளது. இதில், அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார்தான் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதை தொடர்ந்து பன்ச் எலெக்ட்ரிக் காரும் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி மாதம் டாடா விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்த பன்ச் கார் சமீபத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா தயாரிப்பு ஆகும். இது குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. எனவே பாதுகாப்பு அம்சங்களிலும் டாடா பன்ச் காரை சிறப்பான ஒன்றாக குறிப்பிட முடியும். மைக்ரோ எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த காருக்கு மிக சவாலான விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் டாடா விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இதன் காரணமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு பன்ச் கார் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தர தொடங்கியுள்ளது. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டால், அதற்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Article Published On: Tuesday, March 1, 2022, 19:34 [IST]
English summary
Tata sold almost 40000 cars in february 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+