டாடா ஹாரியர், சஃபாரி காரை பார்க் செய்வது மிக சுலபம்.. டாடா கார்களில் இப்படி ஒரு வசதியா? யாருமே எதிர்பார்க்கல!
டாடா மோட்டார்ஸ் தனது இரு முன்னணி கார் மாடல்களை சர்வதேச தர நவீன கால கார்களுக்கு இணையானதாக மாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் பல புதிய தொழில்நுட்ப அம்சங்கள் அந்த கார் மாடல்களில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வெளியாகியிருக்கும் முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
நம்மில் பலருக்கு ரிவர்ஸ் எடுப்பது என்பது மிகவும் சிக்கலான மாற்றும் சவாலான ஒன்றாக இருக்கின்றது. இந்த மாதிரியான மிகுந்த சிரமம் படுபவர்களுக்கு ஏதுவாக டாடா மோட்டார்ஸ் தனது இரு பிரபல கார் மாடல்களில் சூப்பரான பார்வை திறன் கொண்ட கேமிராவை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிராவையே விரைவில் தனது முன்னணி கார் மாடல்களில் வழங்க இருக்கின்றது. இந்த கேமிராவைக் கொண்டு பார்க் செய்தல், ரிவர்ஸ் எடுத்தல் மற்றும் சுற்றுப்புறத்தை கண்கானித்தல் என பல வகையான பலன்களை பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான கார் மாடல்களில் ஹாரியர் மற்றும் சஃபாரியும் அடங்கும். இந்த இரு எஸ்யூவி ரக கார் மாடல்களிலேயே டாடா நிறுவனம், ரைடர்களுக்கு பன்முக பலனை வழங்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிராவை வழங்க இருக்கின்றது. டாடா வெகு விரைவில் சிறப்பு பதிப்பாக உருவாகிக் கொண்டிருக்கும் ஹாரியர் காரை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு உள்ளது.
இதை முன்னிட்டு இப்போது இந்த கார் மாடலை மிக தீவிரமாக சோதனை ஓட்டத்திற்கு அது உட்படுத்தி வருகின்றது. அவ்வாறு சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டு வரும் ஹாரியர் சிறப்பு பதிப்பு கார் மாடலில் 360 டிகிரி விஷன் கொண்ட கேமிரா இடம் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை வைத்தே அந்த காரில் இச்சிறப்பு கருவி இடம் பெற இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த காரில் மட்டுமின்றி நிறுவனத்தின் மற்றுமொரு புகழ்பெற்ற கார் மாடலான சஃபாரி எஸ்யூவிலும் 360 டிகிரி கேமிரா இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டாடா மோட்டார்ஸ் இந்த கார் மாடலையும் தற்போது அப்கிரேட் செய்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் அடிப்படையில் பன்முக புதிய அம்சங்கள் சஃபாரியில் சேர்க்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றே 360 டிகிரி கேமிரா என்பது தெரிய வந்துள்ளது.
இதுமட்டுமின்றி இந்த இரு கார் மாடல்களிலும் இந்தியர்களால் பெரிதும் விரும்பப்படும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ட் சிஸ்டமும் இடம் பெற இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்கள் அனைத்தும் டாடா கார் பிரியர்கள் மத்தியில் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் அதி-நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட கார் மாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டு உள்ளது.
இந்த மாதிரியான சூழலில் டாடாடவின் கார் மாடல்களில் அடாஸ் போன்ற அம்சங்கள் இடம் பெறாமல் இருந்தது பெருத்த வருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. இந்த வருத்தத்தை போக்கும் நடவடிக்கையிலேயே டாடா தற்போது களமிறங்கி இருக்கின்றது. மேலே பார்த்த அம்சங்கள் மட்டும் இல்லைங்க இன்னும் பல சிறப்பு வசதிகளுடன் டாடாவின் ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. சமீபத்தில் வெளியாகிய டாடா ஹாரியர் சிறப்பு பதிப்பின் ஸ்பை படங்களும் இதையே உறுதிப்படுத்துகின்றன.
பிரைட் சிவப்பு நிறத்திலான இன்டீரியரைக் கொண்டதாக அந்த கார் உருவாக்கப்பட்டிருப்பதையே ஸ்பை படங்கள் உறுதிப்படுத்தின. ஆகையால், இந்த கார் மாடல் இந்திய பிரீமியம் கார் பிரியர்களைக் கட்டாயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எஸ்யூவி கார் மாடல்களுக்கு இந்த காரின் வருகை பெருத்த தலை வலியாக மாற வாய்ப்புகள் உள்ளன. இப்போது வெளியாகி வரும் தகவல்களின்படி டாடா மோட்டார்ஸ் உருவாக்கி வரும் இந்த இரு கார் மாடல்களும் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த கார் மாடல்களுடன் சேர்த்து டாடா இன்னும் சில கார் மாடல்களையும் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த இருக்கின்றது. பஞ்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன், அல்ட்ராஸ் கார் மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் ஆட்டோ எக்ஸ்போவில் வைத்தே காட்சிப்படுத்த இருக்கின்றது. இந்த இரு எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கும் நாட்டில் எதிர்பார்ப்பு மிக அதிகம். இதுமட்டுமின்றி, கர்வ் மற்றும் அவின்யா உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் நிறுவனம் காட்சிப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








