டாடாவோட நெக்ஸ்ட் டார்கெட் ஹைட்ரஜன் ஃப்யூவல் காரா?.. 2023 ஜனவரி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த திட்டம்!

இந்தியாவின் மின்சார வாகன உலகின் தலைவனாக உருவெடுத்திருக்கும் டாடா மோட்டார்ஸ், அடுத்ததாக ஹைட்ரஜன் கார் உலகத்தை குறி வைத்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் ஓர் டீசர் படத்தை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் இருக்கின்றது. நெக்ஸான் இவி, டிகோர் இவி மற்றும் டியாகோ இவி ஆகிய அனைத்தும் நிறுவனத்தின் பிரபல எலெக்ட்ரிக் கார் மாடல்கள் ஆகும். இந்த மூன்று எலெக்ட்ரிக் கார் மாடல்களையே இப்போதைய நிலவரப்படி டாடா இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவற்றுடன் இன்னும் சில புதுமுக மின்சார கார் மாடல்களையும் நிறுவனம் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.

ஆட்டோ எக்ஸ்போ

இந்த நிலையிலேயே டாடா மோட்டார்ஸ் வெகுவிரைவில் நவீன வசதிகள் கொண்ட கார்களையும் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலக அளவில் வாகன பிரியர்களின் விருப்பமான வசதிகளாக கார் இணைப்பு தொழில்நுட்பம், அடாஸ் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன. இந்த அம்சங்களைக் கொண்ட காரையே நிறுவனம் கூடிய விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த வர இருக்கின்றது. 2023 ஜனவரியில் ஆட்டோ எக்ஸ்போ நடைபெற இருக்கின்றது.

இந்த ஆட்டோ எக்ஸ்போவிலேயே தனது நவீன வசதிகள் கொண்ட கார் மாடலை டாடா மோட்டார்ஸ் முதல் முறையாக இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைக்க இருக்கின்றது. இந்த தகவலை டாடா நிறுவனம் டீசர் படங்கள் வாயிலாக உறுதிப்படுத்தியிருக்கின்றது. நிறுவனம் இரு டீசர் படங்களை வெளியிட்டுள்ளது. இரண்டில் ஒன்று நிறுவனம் ஹைட்ரஜன் ஃப்யூவல் வாகனத்தின் உற்பத்தியில் களமிறங்கி இருப்பதையும், மற்றொன்று, அடாஸ் அம்சம் கொண்ட வாகன தயாரிப்பில் களமிறங்கியிருப்பதையும் வெளிக்காட்டும் அமைந்துள்ளது.

இந்த இரு அம்சங்களுக்கும் வாகன பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக அடாஸ் அம்சம் கொண்ட வாகனங்களுக்கு இந்தியர்கள் நல்ல ஆதரவுக் கிடைத்துக் கொண்டிருக்கின்றனர். மஹிந்திரா எக்ஸ்யூவி 700, எம்ஜி குளோஸ்டர் மற்றும் அஸ்டர் என சொற்பமான கார் மாடல்களே அடாஸ் அம்சத்துடன் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே அடாஸ் வசதிக் கொண்ட கார் பிரிவில் தனது பங்களிப்பை வழங்கும் முயற்சியில் டாடா களமிறங்கியிருக்கின்றது.

நிறுவனம் இந்த சூப்பரான தொழில்நுட்பத்தை ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்களில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடாஸ் அம்சம் என்பது மிகுந்த பாதுகாப்பை வழங்கக் கூடிய ஓர் தொழில்நுட்பம் ஆகும். இதன் வாயிலாக ஃபார்வார்டு கொலிசன் டிடெக்சன், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட், அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ரியர் கிராஸ் அலர்ட் ஆகியவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த அம்சத்தை மட்டுமின்றி டாடா நிறுவனம் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் இயங்கும் காரை இந்த உலகிற்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் தேடலாக இந்த ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் இயங்கும் கார்கள் இருக்கின்றன. இவையும் ஓர் மின்சார வாகனமே ஆகும். ஆனால், தனக்கு தேவையான மின்சாரத்தை ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் இந்த வாகனம் பெற்றுக் கொள்ளும்.

ஆகையால், இந்த காரும் பெட்ரோல், டீசல் கார்களை மாசை ஏற்படுத்துமோ என எண்ணி விட வேண்டாம். இந்த ரக வாகனத்தில் இருந்த உமிழ்வாக நீராவியே வெளி வரும். எனவே ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லால் இயங்கும் காரும் ஓர் பசுமை வாகனமே ஆகும். தற்போது இந்தியாவின் மின்சார வாகன உலகில் புரட்சியைச் செய்துக் கொண்டிருக்கும் டாடா மோட்டார்ஸ் விரைவில் இந்த ஹைட்ரஜன் வாகனத்தை அறிமுகம் செய்து இந்த பிரிவிலும் அதிரடி காட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்துடன், கார் இணைப்பு தொழில்நுட்பத்தையும் டாடா மோட்டார்ஸ் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கின்றது. இது நெக்ஸ்ட் இணைப்பு தொழில்நுட்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது பயன்பாட்டில் இருப்பதைக் காட்டிலும் அட்வான்ஸ்ட் தொழில்நுட்பமாக இது இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுபோன்ற புதிய நவீன கால தொழில்நுட்பங்களை மட்டுமில்லைங்க, டாடா மோட்டார்ஸ் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் சில எலெக்ட்ரிக் கார் மாடல்களையும் இந்த ஆட்டோ எக்ஸ்போவிலேயே அறிமுகம் செய்ய இருக்கின்றது. அல்ட்ராஸ் இவி, பஞ்ச் இவி, கர்வ் மற்றும் அவின்யா எனும் நான்கு எலெக்ட்ரிக் கார் மாடல்களையே நிறுவனம் காட்சிப்படுத்த உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 24, 2022, 10:40 [IST]
English summary
Tata teasing upcoming showcases for auto expo 2023
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+