டாடா பஞ்ச் இவி கார் பற்றி செம அப்டேட் வந்துருக்குது! எப்ப லாஞ்ச் ஆக போகுதுன்னு தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அதிகமாக எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக தனது அல்ட்ராஸ் மற்றும் பஞ்ச் காரின் இவி வெர்ஷனை விரைவில் வெளியிடவுள்ளது. இந்த கார்கள் எப்பொழது வெளியாகும் என்பதற்கான ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம்.

டாடா மோட்டார் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களுக்காகத் தனிப் பிரிவை இந்தாண்டு துவக்கத்தில் உருவாக்கியது. டாடா பயணிகள் எலெக்ட்ரிக் மொபிலிட்டி என்ற பிரிவின் கீழ் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்த பிரிவின் கீழ் அடுத்த 10 ஆண்டுகளுக்கு வாகனங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக இன்டர்னல் கம்பஷன் இன்ஜினை எலெக்ட்ரிக் வாகனமாக மாற்றும் பிளாட்ஃபார்ம் உட்பட மொத்தம் 3 பிளாட்ஃபார்ம்களை உருவாக்கியுள்ளது. சிக்மா மற்றும் ஸ்கேட்போர்டு என்ற பிளாட்ஃபார்ம்களை உருவாக்கவுள்ளது.

டாடா பஞ்ச் இவி கார் பற்றி செம அப்டேட் வந்துருக்குது! எப்ப லாஞ்ச் ஆக போகுதுன்னு தெரியுமா?

இதில் ஐசிஇ இன்ஜின்களை பொருத்தவரை டாடா நெக்ஸான் இவி, டியாகோ இவி மற்றும் விரைவில் வரவுள்ள அல்ட்ராஸ் இவி, மற்றும் பஞ்ச் இவி கார்கள் இதில் சிக்மா பிளாட்ஃபார்மில்தான் உருவாக்கப்படுகிறது. சிக்மா பிளாட்ஃபார்மை பொருத்தவரை இது ஆல்ஃபா ஆர்க்கிடெக்ஷரை அடிப்படையாகக் கொண்டது. இது எலெக்ட்ரிக் காருக்காக அதிகமாக மாடிஃபிகேஷன் செய்யப்பட்டது. முக்கியமாக காரின் பெட்ரோல் டேங்க் பகுதி, பிளாட்டான ஃப்ளோர் பகுதி,பேட்டரி பேக் வைப்பதற்கான இடம் என பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்த பிளாட்ஃபார்மில் தயாராகவுள்ள டாடா அல்ட்ராஸ் இவி, மற்றும் பஞ்ச் இவி ஆகிய கார்களை பொருத்தவரை தற்போது உள்ள காரை விடக் குறைவான எடையிலும், அதிக பவர் மற்றும் இட வசதியுடன் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிக ரேஞ்ச் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிளாட்ஃபார்மில் தயாராகும் கார்கள் பில்டு குவாலிட்டி சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா எலெக்ட்ரிக் கார்களில் ஜிப்டிரான் ஹை-வால்டேஜ் தொழிற்நுட்பத்தை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை டாடா எலெக்ட்ரிக் கார்களை பொருத்தவரை நமக்கு அதன் பேட்டரி குறித்த சில தகவல்கள் மட்டும் தெரியவந்துள்ளது. டாடா பஞ்ச் இவி கார் முழு சார்ஜில் 300 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்ட காராக இரகு்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக டாடா நிறுவனம் தனது அல்ட்ராஸ் இவி மற்றும் பஞ்ச் இவி ஆகிய கார்களின் டிசைனில் அது எலெக்ட்ரிக் கார் என்பதைக் குறிக்கும் வகையில் அதில் நீல நிற ஹைலேட்களை புகுத்த முடிவு செய்துள்ளது.

இந்த இரு கார்களும் 2023ம் ஆண்டு வெளியாகும் எனத் தெரிகிறது. எப்பொழுது வெளியாகிறது என்பது மட்டும் இதுவரை தகவல் வெளியாகவில்லை. இந்த காரின் விலையைப் பொருத்தவரை பெட்ரோல் இன்ஜின் காரை விட சற்ற விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம் அதன்படி பார்த்தால் அல்ட்ராஸ் இவி காரை பொருத்தவரை ரூ6.35 லட்சம் முதல் ரூ10.25 லட்சம் என்ற விலையில் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்ச் காரை பொருத்தவரை ரூ6 லட்சம் முதல் ரூ9.54 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரு கார்களுக்கும் தற்போது மார்கெட்டில் இவி கார்களில் நேரடி போட்டியாக எந்த காரும் இல்லை. அதனால் இந்த கார் வந்தால் விற்பனை அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே செக்மெண்டில் வேறு நிறுவனங்களும் காரை விற்பனைக்குக் கொண்டு வரும் எண்ணம் இதுவரை இல்லை. இதனால் 2023ம் ஆண்டு டாடா நிறுவனம் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை வேற லெவல்க்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த உங்கள் கார் குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

Most Read Articles
English summary
Tata three platform strategy for ev to launch punch and altroz ev in 2023
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X