25 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த கார்... சின்ன பேண்டேஜ்கூட காருக்குள்ள இருந்தவருக்கு தேவைப்படலையாம்...
டாடா (Tata) நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்று பெரும் விபத்திலும் தன்னுள் பயணித்த பயணிகளை பத்திரமாக பாதுகாத்திருக்கின்றது.
இந்த விபத்து சம்பவம் எங்கு அரங்கேறியது, எப்படி அரங்கேறியது என்பது போன்ற பல்வேறு முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா (Tata) நிறுவனத்தின் தயாரிப்புகள் அனைத்தும் பாதுகாப்பிற்கும், அதிக தரத்திற்கும் பெயர்போனவையாகக் காட்சியளிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்கள் நாட்டில் அரங்கேறியிருக்கின்றன. பெரும் விபத்துகளைச் சந்தித்தபோதிலும் தனக்குள் பயணித்தவர்களை சிறிதளவும் காயமின்றி டாடா கார்கள் காப்பாற்றியிருக்கின்றன.

இந்த நிலையிலேயே 25 அடி ஆழம் பள்ளத்தில் விழுந்த போதிலும் சிறிதளவும் காயத்தை ஏற்படுத்தாமல் டாடா கார் அதன் பயணிகளைக் காப்பாற்றியிருப்பதாக புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் கேரளா மாநிலத்திலேயே அரங்கேறியிருக்கின்றது. டியாகோ (Tata Tiago) எனும் டாடா தயாரிப்பே விபத்தில் சிக்கியிருக்கும் கார் மாடல் ஆகும். சுமார் 70 கிமீ வேகத்தில் வந்துக் கொண்டிருந்தபோதே இவ்விபத்து ஏற்பட்டிருக்கின்றது.

இருப்பினும், காரில் பயணித்த தம்பதியினர் மற்றும் அவர்களது இரு பெண் குழந்தைகளுக்கு எந்தவிதமான பெரிய காயங்களும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக அந்த குடும்பத்தினர் பத்திரமாக காரை விட்டு வெளியேறியிருக்கின்றன. கார் அதிகபட்ச வேகத்தில் வந்ததே விபத்திற்கு காரணமாக இருக்கின்றது. ஆம், அதிக வேகத்தினாலேயே டாடா டியாகோ கட்டுப்பாட்டை இழந்து சுமார் 25 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்திருக்கின்றது.

முதலில் பள்ளத்தாக்கில் இருந்த வீட்டின் கான்கிரீட்டிலேயே கார் மோதியிருக்கிின்றது. இதன் பின்னரே மீண்டும் தரையில் அது விழுந்திருக்கின்றது. இத்தகைய மோசமான விபத்தைச் சந்தித்தப்போதிலும் காரில் இருந்தவர்களுக்கு பெரியளவில் காயம் ஏற்படவில்லையாம் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்திருக்கின்றது. அதிர்ஷ்டமே அவர்கள் உயிருடன் இருப்பதற்கு காரணம் விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், டாடா காரின் அதிக உறுதித் தன்மையும் அவர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதற்கு ஓர் காரணம் என்பதை நாம் இங்கு ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். டாடா நிறுவனத்தின் இந்த தயாரிப்பு அதிக பாதுகாப்பானது என்ற பட்டத்தை குளோபல் என்சிஏபி-யிடமிருந்தே பெற்றிருக்கின்றது. அது நடத்திய மோசமான விபத்து ஆய்வில் ஐந்திற்கு நான்கு ஸ்டார் ரேட்டிங்கை டியாகோ பெற்றது. இத்தகைய சூப்பரான பாதுகாப்பு திறன் கொண்ட வாகனம் தான் (டியாகோ) என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையிலேயே இந்த விபத்தை சம்பவம் தற்போது அரங்கேறியிருக்கின்றது.

விபத்துகுறித்த படங்கள் மற்றும் தகவல்கள் அனைத்தையும் விபத்தைச் சந்தித்த காரின் உரிமையாளரே வெளியிட்டிருக்கின்றார். அவர் தெரிவித்திருப்பதன்படி, கார் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏதோ ஒன்று குறுக்கே வந்திருக்கின்றது. அது என்ன என்பதைச் சுதாரிக்கும் முன்பாகவே இந்த விபத்து அரங்கேறியிருப்பது தெரிய வந்திருக்கின்றது. குறிப்பாக, ஓட்டுநர் வேகமாக ஸ்டீயரிங் வீலை நகர்த்தியிருக்கின்றார். இதனாலயே அக்கார் சுமார் 25 அடி பள்ளத்தாக்கில் விழுந்திருக்கின்றது.

இந்த தகவலுடன் சேர்த்தே காரின் படங்களையும் அவர் வெளியிட்டிருக்கின்றார். டாடா டியாகோ மிக மோசமாக சிதைந்திருப்பதை இப்படங்கள் தெரியப்படுத்துகின்றன. குறிப்பாக முன் மற்றும் பின் பகுதி கடுமையான பாதிப்புகளைச் சந்தித்திருக்கின்றது. இருப்பினும், எந்தவிதமான அசம்பாவிதமும் காரில் பயணித்தவர்களுக்கு ஏற்படவில்லை. இத்தகைய பாதுகாப்பை வழங்கியதற்காக டாடா நிறுவனத்தின் தயாரிப்பிற்கு அந்த இளைஞர் நன்றி தெரிவித்திருக்கின்றார்.

தங்களுக்கு மறு பிறவியை இந்த கார் வழங்கியிருப்பதாக தெரிவித்தார். அதேநேரத்தில், தன்னுடைய இந்த டாடா காரை அவர் அவருடைய மூன்றாவது மகளாக நினைத்து வந்ததாகவும், அது தற்போது விபத்தில் உருக்குலைந்து போய்விட்டதாகவும் வேதனை தெரிவித்திருக்கின்றார். மேலும், தற்போதையே தங்களுடைய நிதிநிலை மிக மோசமாக இருப்பதாக தெரிவித்த அவர், இப்போதைக்கு புதிய கார் வாங்கும் திட்டம் எங்களுக்கு இல்லை. அப்படி வாங்குவதானால் டாடா நெக்ஸானையே நாங்கள் வாங்குவோம் என தெரிவித்தார்.

இதுவும் டாடா நிறுவனத்தின் அதிக பாதுகாப்பான கார் மாடல்களில் ஒன்றாகும். இது குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் இந்த கார் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்றிருக்கின்றது. நிறுவனத்தின் இந்த கார் மட்டுமில்லைங்க அல்ட்ராஸ் எனும் மற்றுமொரு தயாரிப்பும் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களை பெற்றிருக்கும் வாகனமாக காட்சியளிக்கின்றது.

டாடா டியாகோ தற்போது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரு விதமான மோட்டார் தேர்வில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இது ஓர் ஹேட்ச்பேக் ரக காராகும். அண்மையில்தான் இந்த கார் மாடலில் எக்ஸ்டி ரிதம் எனும் புதிய தேர்வை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு அறிமுக விலையாக ரூ. ரூ. 6.45 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஏற்கனவே, என்ஆர்ஜி, என்ஆர்ஜி ஏஎம்டி, எக்ஸ்இ, எக்ஸ்இ சிஎன்ஜி, எக்ஸ்டி, எக்ஸ்டி சிஎன்ஜி, எக்ஸ்டி என்ஆர்ஜி, எக்ஸ்டி (ஓ), எக்ஸ்டிஏ, எக்ஸ்இசட் பிளஸ், எக்ஸ்இசட் பிளஸ் சிஎன்ஜி, எக்ஸ்இசட்ஏ பிளஸ் ஆகிய தேர்வுகளில் டாடா டியாகோ விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே இப்புதிய தேர்வு அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய தேர்வு குறித்த கூடுதல் விபரங்களை அறிய இங்கு க்ளிக் செய்யவும்.

டாடா டியாகோ காரில் அதிக பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக இரு ஏர் பேக்குகள், ரியர் பார்க்கிங் கேமிரா டைனமிக் கைட்லைன்ஸுடன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஃபாலோ மீ ஹோம் லைட்டுகள், டிஃபாக்கருடன் கூடிய ரியர் வாஷ் வைப்பர், ஸ்பீடு சென்சிடிவ் ஆட்டோ டூர் லாக்கிங், பஞ்சர் ரிப்பேர் கிட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications