புதிய டியாகோ சிஎன்ஜி காரின் உள்ளே எப்படி இருக்கும்? விவரிக்கும் முதல் வீடியோ இதோ!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் டியாகோ ஹேட்ச்பேக் மற்றும் டிகோர் காம்பெக்ட் செடான் கார்களின் சிஎன்ஜி வேரியண்ட்களை புதியதாக அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. டாடா நிறுவனத்தின் முதல் சிஎன்ஜி கார்களாக கொண்டுவரப்படும் இவற்றில் டியாகோ சிஎன்ஜி காருக்கு மிக சமீபத்தில் தான் முன்பதிவுகள் துவங்கப்பட்டன.

புதிய டியாகோ சிஎன்ஜி காரின் உள்ளே எப்படி இருக்கும்? விவரிக்கும் முதல் வீடியோ இதோ!!

இதனால் இந்தியாவில் உள்ள சில டாடா டீலர்ஷிப் மையங்களை டியாகோ சிஎன்ஜி கார்கள் வந்தடைய துவங்கியுள்ளன. இந்த வகையில் டீலர்ஷிப் ஷோரூமை வந்தடைந்த டியாகோ சிஎன்ஜி கார் ஒன்றினை பற்றி தான் இனி இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். கார் த்ரில்ஸ் என்ற யுடியூப் சேனலின் மூலம் கிடைத்துள்ள இதுதொடர்பான வீடியோவினை கீழே காணலாம்.

தோற்றத்தை பொறுத்தவரையில், வழக்கமான டியாகோ ஹேட்ச்பேக் காருக்கும், அதன் புதிய சிஎன்ஜி வேரியண்ட்டிற்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. சிஎன்ஜி வேரியண்ட் என்பதை வெளிக்காட்டும் வகையில் பின்பக்கத்தில் 'CNG' லோகோ பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் உட்புற கேபினிலும் எந்த மாற்றமும் இல்லை என்பதை இந்த வீடியோவின் மூலமாக அறிய முடிகிறது.

புதிய டியாகோ சிஎன்ஜி காரின் உள்ளே எப்படி இருக்கும்? விவரிக்கும் முதல் வீடியோ இதோ!!

ஏனெனில் கூடுதல் அம்சமானது காரின் பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதியில்தான் சேர்க்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில் இயற்கை எரிவாயு சிலிண்டர் புதியதாக வழங்கப்பட்டுள்ளதால், பொருட்களை வைக்கும் பகுதியின் அளவு சிறியதாகி உள்ளது. இயக்க ஆற்றலை வழங்க வழக்கமான 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினே டியாகோ சிஎன்ஜி காரிலும் வழங்கப்பட உள்ளது.

புதிய டியாகோ சிஎன்ஜி காரின் உள்ளே எப்படி இருக்கும்? விவரிக்கும் முதல் வீடியோ இதோ!!

அதிகப்பட்சமாக இந்த என்ஜின் 85 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தாலும், சிஎன்ஜி வேரியண்ட்டில் இந்த பெட்ரோல் என்ஜின் குறைந்த ஆற்றலை வெளிப்படுத்தும் வகையிலேயே பொருத்தப்பட உள்ளது. இவ்வாறு என்ஜின் ஆற்றல் குறைவதால், வாகனத்தின் மைலேஜ் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

புதிய டியாகோ சிஎன்ஜி காரின் உள்ளே எப்படி இருக்கும்? விவரிக்கும் முதல் வீடியோ இதோ!!

நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஒரு கிலோ எரிவாயுக்கு 30 கிமீ தூரத்திற்கு மைலேஜை டியாகோ சிஎன்ஜி கார் வழங்கலாம். டிரான்ஸ்மிஷனில் (5-ஸ்பீடு மேனுவல்) எந்த மாற்றமும் இருக்காது. விலை நிச்சயமாக ரூ.50 ஆயிரம் என்கிற அளவில் அதிகமாக நிர்ணயிக்கப்படும். ஏற்கனவே கூறியதுபோல், இவை தவிர்த்து மற்ற அம்சங்கள் எதிலிலும் எந்த மாற்றமும் இல்லை.

புதிய டியாகோ சிஎன்ஜி காரின் உள்ளே எப்படி இருக்கும்? விவரிக்கும் முதல் வீடியோ இதோ!!

இதனால் டியாகோ காரில் வழக்கமாக வழங்கப்படும் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய 7-இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், வைபர் உடன் பின்பக்க டிஃபாக்கர், கூல்டு க்ளோவ் பாக்ஸ் மற்றும் 8-ஸ்பீக்கர் ஹர்மன் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்டவற்றை புதிய சிஎன்ஜி வேரியண்ட்டிலும் எதிர்பார்க்கலாம்.

புதிய டியாகோ சிஎன்ஜி காரின் உள்ளே எப்படி இருக்கும்? விவரிக்கும் முதல் வீடியோ இதோ!!

இந்த விலை குறைவான டாடா ஹேட்ச்பேக் காரில் பாதுகாப்பு அம்சங்களாக இரட்டை முன்பக்க காற்றுப்பைகள், ரிவர்ஸில் வருவதற்கு உதவியாக பார்க்கிங் சென்சார்கள், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் கார்னர் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் போன்றவை பொருத்தப்படுகின்றன. டியாகோ & டிகோர் சிஎன்ஜி மாடல்களை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் மற்ற பிரபலமான மாடல்களான அல்ட்ராஸ், நெக்ஸான் மற்றும் சமீபத்திய அறிமுகமான பஞ்ச்சிலும் சிஎன்ஜி வேரியண்ட்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

புதிய டியாகோ சிஎன்ஜி காரின் உள்ளே எப்படி இருக்கும்? விவரிக்கும் முதல் வீடியோ இதோ!!

ஏனெனில் இவற்றின் சோதனை மாதிரிகள் சமீப மாதங்களாக பொது சாலைகளில் அடையாளம் காணப்பட்டு இருந்தன. டியாகோ சிஎன்ஜி மற்றும் டிகோர் சிஎன்ஜி கார்களை முன்னதாக கடந்த 2021 நவம்பர் மாதத்திலேயே அறிமுகப்படுத்த டாடா நிறுவனம் திட்டமிட்டது. ஆனால் குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறையால் இந்த திட்டத்தில் தாமதம் ஏற்பட்டது.

புதிய டியாகோ சிஎன்ஜி காரின் உள்ளே எப்படி இருக்கும்? விவரிக்கும் முதல் வீடியோ இதோ!!

இந்திய சந்தையில் தற்சமயம் சிஎன்ஜி கார்கள் பிரிவை மாருதி சுஸுகி நிறுவனமே அதன் வேகன்ஆர், எஸ்-பிரெஸ்ஸோ, ஆல்டோ மற்றும் ஈக்கோ மாடல்களின் சிஎன்ஜி வேரியண்ட்களின் மூலம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இவற்றை தொடர்ந்து ஸ்விஃப்ட், டிசைர், விட்டாரா பிரெஸ்ஸா, பலேனோ மற்றும் புதிய தலைமுறை செலிரியோ காரிலும் சிஎன்ஜி தேர்வை கொண்டுவர இந்த இந்திய-ஜப்பானிய நிறுவனம் தயாராகி வருகிறது.

புதிய டியாகோ சிஎன்ஜி காரின் உள்ளே எப்படி இருக்கும்? விவரிக்கும் முதல் வீடியோ இதோ!!

இதேபோன்று மற்றொரு முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாயும் அதன் சாண்ட்ரோ சிஎன்ஜி, கிராண்ட் ஐ10 சிஎன்ஜி மற்றும் அவ்ரா சிஎன்ஜி கார்களின் மூலம் கணிசமான விற்பனையை பார்த்து வருகிறது. தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் அந்த நாட்டில் உள்ள அதன் பிரதான பெட்ரோல் & டீசல் என்ஜின்கள் மேம்பாட்டு பிரிவை இவி மேம்பாட்டிற்காக மூடியுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தன.

Most Read Articles

English summary
Tata tiago cng boot space detailed first look video
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X