வெளியானது அதிரடி அறிவிப்பு... மிகவும் குறைவான விலையில் டாடா எலெக்ட்ரிக் கார்... எவ்ளோனு தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகவும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வெளியானது அதிரடி அறிவிப்பு... மிகவும் குறைவான விலையில் டாடா எலெக்ட்ரிக் கார்... எவ்ளோனு தெரியுமா?

இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளது.

வெளியானது அதிரடி அறிவிப்பு... மிகவும் குறைவான விலையில் டாடா எலெக்ட்ரிக் கார்... எவ்ளோனு தெரியுமா?

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு 88 சதவீதம் ஆகும். அதாவது தற்போதைய நிலையில் கிட்டத்தட்ட யாருமே நெருங்க முடியாத இடத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த ஆதிக்கத்தை மேலும் அதிகரித்து கொள்வதற்காக நிறைய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வெளியானது அதிரடி அறிவிப்பு... மிகவும் குறைவான விலையில் டாடா எலெக்ட்ரிக் கார்... எவ்ளோனு தெரியுமா?

வரும் ஆண்டுகளில் இந்திய சந்தையில் குறைந்தபட்சம் 10 எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்ளது. இதில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tata Tiago Electric Car) ஒன்றாகும். தற்போது உலக எலெக்ட்ரிக் வாகன தினம் (World EV Day) கொண்டாடப்பட்டு வருகிறது.

வெளியானது அதிரடி அறிவிப்பு... மிகவும் குறைவான விலையில் டாடா எலெக்ட்ரிக் கார்... எவ்ளோனு தெரியுமா?

இதை முன்னிட்டுதான், டியாகோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில் டிகோர் எலெக்ட்ரிக் (Tata Tigor EV) மற்றும் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி (Tata Nexon EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது.

வெளியானது அதிரடி அறிவிப்பு... மிகவும் குறைவான விலையில் டாடா எலெக்ட்ரிக் கார்... எவ்ளோனு தெரியுமா?

இதுதவிர நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் லாங்-ரேஞ்ச் வெர்ஷன் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வரிசையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரும் விரைவில் இணையவுள்ளது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக டியாகோ எலெக்ட்ரிக் கார் இருக்கும் என கருதப்படுகிறது.

வெளியானது அதிரடி அறிவிப்பு... மிகவும் குறைவான விலையில் டாடா எலெக்ட்ரிக் கார்... எவ்ளோனு தெரியுமா?

தற்போது விற்பனையில் உள்ள டிகோர் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ள பேட்டரிதான் டியாகோ எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் தற்போதைய நிலையில் 26 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 306 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும்.

வெளியானது அதிரடி அறிவிப்பு... மிகவும் குறைவான விலையில் டாடா எலெக்ட்ரிக் கார்... எவ்ளோனு தெரியுமா?

இதே அளவிற்கான ரேஞ்ச்தான் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காராலும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது விற்பனையில் உள்ள ஐசி இன்ஜின் டியாகோ காருக்கும், அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கும் டிசைனில் பெரிதாக மாற்றங்கள் எதுவும் இருக்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளியானது அதிரடி அறிவிப்பு... மிகவும் குறைவான விலையில் டாடா எலெக்ட்ரிக் கார்... எவ்ளோனு தெரியுமா?

டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் விலை 10 லட்ச ரூபாய் என்ற அளவில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். இந்திய சந்தையில் டாடா டியாகோ ஏற்கனவே மிகவும் பிரபலமான கார்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

வெளியானது அதிரடி அறிவிப்பு... மிகவும் குறைவான விலையில் டாடா எலெக்ட்ரிக் கார்... எவ்ளோனு தெரியுமா?

எனவே அதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு வருகிறது எனும்போது, வாடிக்கையாளர் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கலாம். டியாகோ காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் தவிர, அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக் விஷயம் ஆகும்.

வெளியானது அதிரடி அறிவிப்பு... மிகவும் குறைவான விலையில் டாடா எலெக்ட்ரிக் கார்... எவ்ளோனு தெரியுமா?

இதுதவிர பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான திட்டமும் கூட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் உள்ளது. எதிர்காலத்தை சரியாக கணித்து தற்போது எலெக்ட்ரிக் கார்களின் மீது அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளதால், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆதிக்கம் தொடரலாம் என ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

வெளியானது அதிரடி அறிவிப்பு... மிகவும் குறைவான விலையில் டாடா எலெக்ட்ரிக் கார்... எவ்ளோனு தெரியுமா?

எலெக்ட்ரிக் கார்கள் மட்டுமல்லாது, சிஎன்ஜி கார்களின் மீதும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் ஆகும். டியாகோ மற்றும் டிகோர் ஆகிய கார்களின் சிஎன்ஜி வெர்ஷன்களை தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 9, 2022, 15:54 [IST]
English summary
Tata tiago electric car launch confirmed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+