12 நாளில் அறிமுகம்... இனி இந்தியா முழுக்க இந்த எலெக்ட்ரிக் கார்தான் ஓடப்போகுது! புரட்சியை ஏற்படுத்த டாடா தயார்

டாடா நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் வரும் செப்டம்பர் 28ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

12 நாளில் அறிமுகம்... இனி இந்தியா முழுக்க இந்த எலெக்ட்ரிக் கார்தான் ஓடப்போகுது! புரட்சியை ஏற்படுத்த டாடா தயார்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் 2 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. அவை டாடா டிகோர் எலெக்ட்ரிக் (Tata Tigor EV) மற்றும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் (Tata Nexon EV) ஆகும். இந்த 2 எலெக்ட்ரிக் கார்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் உற்சாகமான வரவேற்பு கிடைத்துள்ளது.

12 நாளில் அறிமுகம்... இனி இந்தியா முழுக்க இந்த எலெக்ட்ரிக் கார்தான் ஓடப்போகுது! புரட்சியை ஏற்படுத்த டாடா தயார்

இதுதவிர நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனை நெக்ஸான் இவி மேக்ஸ் (Tata Nexon EV Max) என்ற பெயரிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த புதிய மாடல் சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

12 நாளில் அறிமுகம்... இனி இந்தியா முழுக்க இந்த எலெக்ட்ரிக் கார்தான் ஓடப்போகுது! புரட்சியை ஏற்படுத்த டாடா தயார்

இந்த சூழலில் தனது 3வது எலெக்ட்ரிக் காராக டியாகோ எலெக்ட்ரிக் கார் (Tata Tiago EV) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது ஏற்கனவே விற்பனையில் உள்ள டாடா டியாகோ ஹேட்ச்பேக் ரக காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும்.

12 நாளில் அறிமுகம்... இனி இந்தியா முழுக்க இந்த எலெக்ட்ரிக் கார்தான் ஓடப்போகுது! புரட்சியை ஏற்படுத்த டாடா தயார்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் எப்போது விற்பனைக்கு வரும்? என வாடிக்கையாளர்கள் பலர் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். ஏனெனில் இதுதான் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இருக்க போகிறது.

12 நாளில் அறிமுகம்... இனி இந்தியா முழுக்க இந்த எலெக்ட்ரிக் கார்தான் ஓடப்போகுது! புரட்சியை ஏற்படுத்த டாடா தயார்

பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளதால், மிகவும் குறைவான விலையில் தரமான மற்றும் நடைமுறை பயன்பாடுகளுக்கு ஏற்ற வகையில் சிறப்பான ரேஞ்ச் (ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் பயணிக்கும் தொலைவு) வழங்க கூடிய எலெக்ட்ரிக் கார் ஒன்றை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் பலரும் விரும்புகின்றனர்.

12 நாளில் அறிமுகம்... இனி இந்தியா முழுக்க இந்த எலெக்ட்ரிக் கார்தான் ஓடப்போகுது! புரட்சியை ஏற்படுத்த டாடா தயார்

ஆனால் தற்போதைய நிலையில் இதுபோன்ற தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய கூடிய எலெக்ட்ரிக் கார்கள் இந்திய சந்தையில் பெரிதாக இல்லை. எனவேதான் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த சூழலில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்காக காத்து கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

12 நாளில் அறிமுகம்... இனி இந்தியா முழுக்க இந்த எலெக்ட்ரிக் கார்தான் ஓடப்போகுது! புரட்சியை ஏற்படுத்த டாடா தயார்

டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் வரும் செப்டம்பர் 28ம் தேதி (September 28) பொது பார்வைக்கு கொண்டு வரப்படும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளதால், வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் தொழில்நுட்ப விபரங்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை.

12 நாளில் அறிமுகம்... இனி இந்தியா முழுக்க இந்த எலெக்ட்ரிக் கார்தான் ஓடப்போகுது! புரட்சியை ஏற்படுத்த டாடா தயார்

எனினும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் பேட்டரிதான் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் 26kWh பேட்டரி தொகுப்பை பெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 306 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

12 நாளில் அறிமுகம்... இனி இந்தியா முழுக்க இந்த எலெக்ட்ரிக் கார்தான் ஓடப்போகுது! புரட்சியை ஏற்படுத்த டாடா தயார்

அதே நேரத்தில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு 15A மற்றும் 25kW சார்ஜர்கள் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், 15A பேட்டரியை பயன்படுத்தினால் பேட்டரியை முழுமையாக நிரப்புவதற்கு சுமார் 8.45 மணி நேரம் வரை ஆகும். ஆனால் 25kW சார்ஜரை பயன்படுத்தினால் பேட்டரியை வெறும் 65 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விட முடியும்.

12 நாளில் அறிமுகம்... இனி இந்தியா முழுக்க இந்த எலெக்ட்ரிக் கார்தான் ஓடப்போகுது! புரட்சியை ஏற்படுத்த டாடா தயார்

வசதிகளை பொறுத்தவரையில், டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வகையிலான ஓட்டுனர் இருக்கை மற்றும் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படலாம்.

12 நாளில் அறிமுகம்... இனி இந்தியா முழுக்க இந்த எலெக்ட்ரிக் கார்தான் ஓடப்போகுது! புரட்சியை ஏற்படுத்த டாடா தயார்

தற்போதைய நிலையில் டாடா டியாகோ கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களில் கிடைத்து வருகிறது. இந்த சூழலில்தான் இதன் எலெக்ட்ரிக் மாடலும் விற்பனைக்கு வரவுள்ளது. டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் விலை 10 லட்ச ரூபாய்க்குள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டால், டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் பலர் போட்டி போடலாம்.

12 நாளில் அறிமுகம்... இனி இந்தியா முழுக்க இந்த எலெக்ட்ரிக் கார்தான் ஓடப்போகுது! புரட்சியை ஏற்படுத்த டாடா தயார்

ஏனெனில் இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பெரும்பாலான எலெக்ட்ரிக் கார்களின் விலை அதிகமாக உள்ளது. தற்போதைய நிலையில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 12.49 லட்ச ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.64 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

12 நாளில் அறிமுகம்... இனி இந்தியா முழுக்க இந்த எலெக்ட்ரிக் கார்தான் ஓடப்போகுது! புரட்சியை ஏற்படுத்த டாடா தயார்

மறுபக்கம் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 14.99 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 17.50 லட்ச ரூபாயாகவும் இருக்கிறது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். அதே நேரத்தில் டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 18.34 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 20.04 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது.

12 நாளில் அறிமுகம்... இனி இந்தியா முழுக்க இந்த எலெக்ட்ரிக் கார்தான் ஓடப்போகுது! புரட்சியை ஏற்படுத்த டாடா தயார்

இதுவும் எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. எனவே டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் 10 லட்ச ரூபாய்க்குள் அறிமுகம் செய்யப்பட்டால் விற்பனையில் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன. இந்திய சந்தையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் புரட்சியை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

12 நாளில் அறிமுகம்... இனி இந்தியா முழுக்க இந்த எலெக்ட்ரிக் கார்தான் ஓடப்போகுது! புரட்சியை ஏற்படுத்த டாடா தயார்

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் தற்போதைய நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சந்தை பங்கு சுமார் 80 சதவீதமாக உள்ளது. அதாவது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் வருகைக்கு பின் இந்த ஆதிக்கம் மேலும் அதிகரிக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, September 16, 2022, 9:05 [IST]
English summary
Tata tiago electric car to be unveiled on september 28
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+