இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த டாடா! விலை குறைவான எலெக்ட்ரிக் காருக்கு ஒரே நாளில் இவ்ளோ புக்கிங்கா!
இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காருக்கு, கூரையை பிய்த்து கொண்டு முன்பதிவு கொட்டுகிறது.

இந்திய வாடிக்கையாளர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டிருந்த டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதுதான் இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் ஆகும். டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில், 24 kWh பேட்டரி ஒன்றாகும். இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 315 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொன்று 19.2 kWh பேட்டரி ஆப்ஷன் ஆகும். இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 250 கிலோ மீட்டர்கள் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப பேட்டரியை தேர்வு செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 4 சார்ஜிங் ஆப்ஷன்களை டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. இதன்படி 15 A சாக்கெட், 3.3 kW AC சார்ஜர், 7.2 kW AC சார்ஜர் மற்றும் DC ஃபாஸ்ட் சார்ஜர் ஆகியவற்றை பயன்படுத்தி, டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை சார்ஜ் செய்ய முடியும்.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 8.49 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) மட்டும்தான். இதன் மூலமாக இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் தன்வசப்படுத்தியது. ஆனால் இது அறிமுக சலுகை விலை என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்தது.

அதாவது முதலில் முன்பதிவு செய்யும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த விலையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு அக்டோபர் 10ம் தேதி (நேற்று) முதல் முன்பதிவுகள் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் நேற்று முதல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டன (முன்பதிவு தொகை 21 ஆயிரம் ரூபாய்). எதிர்பார்க்கப்பட்டதை போலவே, டாடா டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு முதல் நாளிலேயே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்து விட்டன. சரியாக நேற்று மதியம் 12 மணிக்கு முன்பதிவு தொடங்கப்பட்டது.

முன்பதிவு தொடங்கப்பட்ட 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்த புதிய எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்து விட்டனர். மிகப்பெரிய எண்ணிக்கையில் முன்பதிவுகள் குவிந்துள்ளதால், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.

இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. முதலில் முன்பதிவு செய்யும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அறிமுக சலுகை விலையில் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படும் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இதனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நீட்டித்துள்ளது.

அதாவது மேலும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களும், 8.49 லட்ச ரூபாய் என்ற அறிமுக சலுகை விலையிலேயே டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை வாங்க முடியும். மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதால், டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை மிகவும் குறைவான விலையில் வாங்கும் வாய்ப்பை கூடுதலாக 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் இது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார்களை டெலிவரி செய்யும் பணிகள் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்கப்படும். எனவே அதன் பிறகு இந்திய சாலைகளில் நாம் நிறைய டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார்களை காணலாம்.

அதற்கு முன்னதாக டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை வரும் டிசம்பர் மாதத்தில் இருந்தே நீங்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க முடியும். டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு கிடைத்துள்ள உற்சாகமான வரவேற்பை தொடர்ந்து, வரும் மாதங்களில் அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் மற்றும் பன்ச் எலெக்ட்ரிக் கார் ஆகிய பல்வேறு புதிய மாடல்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.


Click it and Unblock the Notifications








