இதுதான் இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்... அறிமுகம் ஆக இன்னும் ஒரே ஒரு நாள்தான் இருக்கு!

டாடா நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் குறித்த கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன. அதனை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இதுதான் இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்... அறிமுகம் ஆக இன்னும் ஒரே ஒரு நாள்தான் இருக்கு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு விரைவில் டியாகோ எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் வரும் செப்டம்பர் 28ம் தேதி (நாளை மறு நாள்) அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்... அறிமுகம் ஆக இன்னும் ஒரே ஒரு நாள்தான் இருக்கு!

அதற்கு முன்னதாக டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் குறித்த கூடுதல் தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. இதன்படி தற்போது பெரும்பாலான கார்களில் வழங்கப்பட்டு வரும் கனெக்டட் கார் தொழில்நுட்பம் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படவுள்ளது. இதனை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தற்போது உறுதி செய்துள்ளது.

இதுதான் இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்... அறிமுகம் ஆக இன்னும் ஒரே ஒரு நாள்தான் இருக்கு!

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னதாக டியாகோ எலெக்ட்ரிக் காரில், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் மல்டி-மோடு ரீஜென் ஃபங்ஷன் ஆகிய வசதிகள் வழங்கப்பட்டுள்ளது என்பதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது. இதனை தொடர்ந்து, இந்த எலெக்ட்ரிக் காரில் கனெக்டட் கார் தொழில்நுட்பமும் வழங்கப்படும் என்பதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது உறுதி செய்துள்ளது.

இதுதான் இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்... அறிமுகம் ஆக இன்னும் ஒரே ஒரு நாள்தான் இருக்கு!

இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், இதுதான் இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக இருக்க போகிறது. ஆம், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் லைன்-அப்பில் மட்டுமல்லாது, இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டியாகோ எலெக்ட்ரிக் கார்தான் பெற்றிருக்கும் என கருதப்படுகிறது.

இதுதான் இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்... அறிமுகம் ஆக இன்னும் ஒரே ஒரு நாள்தான் இருக்கு!

டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரில், 26kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆம், டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ள அதே பேட்டரிதான் இது. பேட்டரி மட்டுமல்லாது, டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டுள்ள அதே எலெக்ட்ரிக் மோட்டார்தான் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இதுதான் இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்... அறிமுகம் ஆக இன்னும் ஒரே ஒரு நாள்தான் இருக்கு!

எனவே டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் 300 கிலோ மீட்டர் என்ற அளவில் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பேட்டரி, எலெக்ட்ரிக் மோட்டார் ஆகிய அம்சங்களுடன் பெரும்பாலான வசதிகளையும் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காருடன், டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் பகிர்ந்து கொள்ளும் என கூறப்படுகிறது.

இதுதான் இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்... அறிமுகம் ஆக இன்னும் ஒரே ஒரு நாள்தான் இருக்கு!

டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை நிரப்புவதற்கு எவ்வளவு நேரம் ஆகிறதோ, அதே நேரம்தான் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின்பேட்டரியை நிரப்புவதற்கும் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது 15A சார்ஜரை பயன்படுத்தினால் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை முழுமையாக நிரப்புவதற்கு 8 மணி நேரங்களுக்கு மேல் ஆகலாம்.

இதுதான் இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்... அறிமுகம் ஆக இன்னும் ஒரே ஒரு நாள்தான் இருக்கு!

ஆனால் 25kW ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால் இந்த எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை வெறும் ஒரு மணி நேரத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்பி விடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையில் டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 12.49 லட்ச ரூபாய் ஆக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.64 லட்ச ரூபாயாக இருக்கிறது.

இதுதான் இந்தியாவிலேயே மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்... அறிமுகம் ஆக இன்னும் ஒரே ஒரு நாள்தான் இருக்கு!

இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆனால் டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 10 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என கருதப்படுகிறது. இதன் மூலம் நாங்கள் ஏற்கனவே கூறியபடி, இந்தியாவின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார் என்ற பெருமையை டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் பெறலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, September 26, 2022, 16:25 [IST]
English summary
Tata tiago ev to get connected car technology
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+