விற்பனையில் சாதனை படைத்த டாடாவின் பாதுகாப்பான கார்... எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ கார் விற்பனையில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விற்பனையில் சாதனை படைத்த டாடாவின் பாதுகாப்பான கார்... எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் ஏராளமான கார்களை விற்பனை செய்து வருகிறது. இதில், டாடா டியாகோ (Tata Tiago) மிகவும் முக்கியமானது. இது ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் டாடா டியாகோ ஹேட்ச்பேக் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

விற்பனையில் சாதனை படைத்த டாடாவின் பாதுகாப்பான கார்... எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

இந்த சூழலில் டாடா டியாகோ கார் விற்பனையில் தற்போது புதிய மைல்கல் ஒன்றை கடந்துள்ளது. இந்திய சந்தையில் 4 லட்சம் (4 Lakh) டாடா டியாகோ கார்கள் விற்பனை என்பதுதான் அந்த புதிய மைல்கல். டாடா டியாகோ கார் இந்திய சந்தையில் கடந்த 2016ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்து சுமார் 6 ஆண்டுகள் ஆகின்றன.

விற்பனையில் சாதனை படைத்த டாடாவின் பாதுகாப்பான கார்... எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

அதற்குள்ளாக 4 லட்சம் டியாகோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வரலாற்றில் முக்கியமான மைல்கல்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் டாடா டியாகோ கார் மொத்தம் 14 வேரியண்ட்களில் (14 Variants) விற்பனைக்கு கிடைக்கிறது. ஸ்டைலான, வசதிகள் நிறைந்த மற்றும் பாதுகாப்பான ஒரு ஹேட்ச்பேக் காரை எதிர்பார்ப்பவர்களுக்கு டாடா டியாகோ மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.

விற்பனையில் சாதனை படைத்த டாடாவின் பாதுகாப்பான கார்... எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

டாடா டியாகோ கார் தன்னுடைய செக்மெண்ட்டில் 19 சதவீத சந்தை பங்கை (Market Share) கொண்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா டியாகோ காருக்கு கிடைத்துள்ள பிரம்மாண்டமான வெற்றிக்கு, அதன் பாதுகாப்பு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

விற்பனையில் சாதனை படைத்த டாடாவின் பாதுகாப்பான கார்... எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

குளோபல் என்சிஏபி (Global NCAP) மோதல் சோதனைகளில், டாடா டியாகோ கார், 4 ஸ்டார் (4 Star) பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. சாலை விபத்துக்களில் இருந்து பலமுறை பயணிகளின் உயிரை டாடா டியாகோ கார் காப்பாற்றியுள்ளது. எனவே இந்திய சந்தையில் கிடைக்கும் பாதுகாப்பான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாக டாடா டியாகோவை குறிப்பிடலாம்.

விற்பனையில் சாதனை படைத்த டாடாவின் பாதுகாப்பான கார்... எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

டாடா டியாகோ காரில், ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, கார்னர் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், ரியர் பார்க்கிங் அஸிஸ்ட் உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்படுகின்றன. பாதுகாப்பில் தலைசிறந்து விளங்குவதால், டாடா டியாகோ ஹேட்ச்பேக் காரை பலரும் ஆர்வமுடன் வாங்குகின்றனர். அத்துடன் டாடா டியாகோ காரின் விலையும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றாக இருக்கிறது.

விற்பனையில் சாதனை படைத்த டாடாவின் பாதுகாப்பான கார்... எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா டியாகோ காரின் ஆரம்ப விலை 5.23 லட்ச ரூபாய் ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 7.68 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த விலைக்கு டாடா டியாகோ மிகச்சிறப்பான காராக கருதப்படுகிறது. இதுவும் இந்த காரின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாகும்.

விற்பனையில் சாதனை படைத்த டாடாவின் பாதுகாப்பான கார்... எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

டாடா மோட்டர்ஸ் நிறுவனம் சமீபத்தில் டியாகோ காரின் சிஎன்ஜி மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்ததாக நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் புதிய மாடல் மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் காரின் புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விற்பனையில் சாதனை படைத்த டாடாவின் பாதுகாப்பான கார்... எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

இந்த 2 புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களும் அடுத்த ஒரு சில வாரங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. முன்னதாக கர்வ் (Tata Curvv) என்ற புதிய கான்செப்ட் மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. எலெக்ட்ரிக் மற்றும் ஐசி இன்ஜின் மாடல்களில் டாடா கர்வ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

விற்பனையில் சாதனை படைத்த டாடாவின் பாதுகாப்பான கார்... எவ்ளோனு தெரிஞ்சா நீங்களும் வாங்க ஆசைப்படுவீங்க!

ஆனால் டாடா கர்வ் விற்பனைக்கு வருவதற்கு இன்னும் பல மாதங்கள் நாம் காத்திருக்க வேண்டும். இதற்கு முன்னதாக அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் உள்பட பல்வேறு திட்டங்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கைவசம் வைத்துள்ளது. இந்திய சந்தையில் சுறுசுறுப்பாக இயங்கி வருவதால், சமீப காலமாக டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை மிகவும் சிறப்பாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 21, 2022, 15:47 [IST]
English summary
Tata tiago hatchback crosses 4 lakh sales mark in india details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+