டிகோர் செடான் காரில் சத்தமே இல்லாமல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செய்த அப்டேட்... என்னனு தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் செடான் காரில் சத்தமே இல்லாமல் அப்டேட் ஒன்றை செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டிகோர் செடான் காரில் சத்தமே இல்லாமல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செய்த அப்டேட்... என்னனு தெரியுமா?

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா டிகோர் (Tata Tigor). இது சப்-4 மீட்டர் செடான் (Sub-four Metre Sedan) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த சூழலில், டிகோர் செடான் காரின் கலர் ஆப்ஷன்களை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது சத்தமே இல்லாமல் அப்டேட் செய்துள்ளது.

டிகோர் செடான் காரில் சத்தமே இல்லாமல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செய்த அப்டேட்... என்னனு தெரியுமா?

இதன்படி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் செடான் காரின் லைன்-அப்பில் 2 பழைய கலர் ஆப்ஷன்களை நீக்கியுள்ளது. அதற்கு பதிலாக 2 புதிய கலர் ஆப்ஷன்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக டாடா டிகோர் செடான் கார், ப்யூர் சில்வர் மற்றும் ஓபல் ஒயிட் (மோனோ டோன்) ஆகிய கலர் ஆப்ஷன்களிலும் கிடைத்து வந்தது.

டிகோர் செடான் காரில் சத்தமே இல்லாமல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செய்த அப்டேட்... என்னனு தெரியுமா?

ஆனால் இனி இந்த 2 கலர் ஆப்ஷன்களிலும் டாடா டிகோர் செடான் கார் கிடைக்காது. அதற்கு பதிலாக 2 புதிய கலர் ஆப்ஷன்களை டிகோர் செடான் காரின் லைன்-அப்பில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சேர்த்துள்ளது. அவை டீப் ரெட் மற்றும் கருப்பு நிற மேற்கூரையுடனான ஓபல் ஒயிட் கலர் ஆப்ஷன்கள் ஆகும். இதில், கருப்பு நிற மேற்கூரையுடனான ஓபல் ஒயிட் கலர் ஆப்ஷனானது, டாடா டிகோர் செடான் காரின் 2வது ட்யூயல் டோன் கலர் ஆப்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது.

டிகோர் செடான் காரில் சத்தமே இல்லாமல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செய்த அப்டேட்... என்னனு தெரியுமா?

இந்த புதிய மாற்றங்களை அடுத்து, டாடா டிகோர் செடான் கார் தற்போது 5 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அவை டீப் ரெட், அரிசோனா ப்ளூ, டேடோனா க்ரே, கருப்பு நிற மேற்கூரையுடனான ஓபல் ஒயிட், கருப்பு நிற மேற்கூரையுடனான மேக்னெட்டிக் ரெட் ஆகியவை ஆகும். இந்த கலர் ஆப்ஷன்களை தவிர, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் செடான் காரில் வேறு எந்த மாற்றங்களையும் செய்யவில்லை.

டிகோர் செடான் காரில் சத்தமே இல்லாமல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செய்த அப்டேட்... என்னனு தெரியுமா?

இதன்படி இன்ஜின் மற்றும் வசதிகள் என அனைத்தும் ஏற்கனவே இருந்ததை போன்றே தொடர்கின்றன. டாடா டிகோர் செடான் காரில் ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. அது 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

டிகோர் செடான் காரில் சத்தமே இல்லாமல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செய்த அப்டேட்... என்னனு தெரியுமா?

டாடா டிகோர் செடான் கார் மொத்தம் 4 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. அவை XE, XM, XZ, மற்றும் XZ+ ஆகியவை ஆகும். டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் செடான் காரின் சிஎன்ஜி வேரியண்ட்டையும் விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தற்போது சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

டிகோர் செடான் காரில் சத்தமே இல்லாமல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செய்த அப்டேட்... என்னனு தெரியுமா?

இந்தியாவின் சிஎன்ஜி கார் சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்துகிறது. மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஏராளமான சிஎன்ஜி கார்கள் இந்திய சந்தையில் விற்பனை தற்போது விற்பனையில் இருக்கின்றன. வெகு சமீபத்தில் ஸ்விஃப்ட் காரின் புதிய சிஎன்ஜி மாடலை கூட, மாருதி சுஸுகி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

டிகோர் செடான் காரில் சத்தமே இல்லாமல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செய்த அப்டேட்... என்னனு தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவனத்தை போல், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் வரும் காலங்களில் நிறைய சிஎன்ஜி கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் சிஎன்ஜி கார் சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், எலெக்ட்ரிக் கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளது.

டிகோர் செடான் காரில் சத்தமே இல்லாமல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செய்த அப்டேட்... என்னனு தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் செடான் காரின் சிஎன்ஜி மாடலை மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் மாடலையும் விற்பனை செய்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இது இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக உள்ளது. ஆனால் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்தான், இந்தியாவில் தற்போது மிகவும் அதிகமாக விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார் ஆகும்.

டிகோர் செடான் காரில் சத்தமே இல்லாமல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செய்த அப்டேட்... என்னனு தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலையும், நெக்ஸான் இவி மேக்ஸ் என்ற பெயரில் விற்பனை செய்து கொண்டுள்ளது. டாடா நெக்ஸான் இவி மேக்ஸ் சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 17, 2022, 23:48 [IST]
English summary
Tata tigor sedan new colour options
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+