ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தை மின் விளக்கால் வரைந்த டாடா கார்கள்! காசிரங்கா எடிசனில் வரும் இன்னும் சில மாடல்கள்
இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் தனது புதிய தயாரிப்புகள்குறித்த டீசர் படங்களை வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்த முழு விபரத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 'காசிரங்கா எடிசன்' எனும் சிறப்பு பதிப்பில் அதன் புகழ்பெற்ற பஞ்ச் காரை உருவாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நிறுவனம் அக்கார்குறித்த படங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

இக்காரை பிரத்யேகமாக ஐபிஎல் 2022 போட்டியின்போது விளையாட்டு மைதானத்தில் வைத்து ஏலம் விட இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் டாடா நிறுவனம் மேலும் சில அதன் புகழ்பெற்ற கார் மாடல்களை காசிரங்கா எடிசனில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடல்களான நெக்ஸான், ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகிய எஸ்யூவி கார் மாடல்களையே நிறுவனம் சிறப்பு பதிப்பாக உருவாக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் காசிரங்கா எடிசனில் உருவாக்கப்பட்டிருக்கும் அனைத்து மாடல்களின் டீசர் படங்களையும் வெளியிட்டிருக்கின்றது.

காசிரங்கா எடிசனா!! இது என்னங்க புதுசா இருக்குனு உங்களுக்கு கேட்க தோன்றலாம். அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவிற்கு பெருமிதம் சேர்க்கவே இந்த எடிசன் உருவாக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக, தேசிய பூங்காவில் உள்ள ஒற்றை கொம்பு காண்டா மிருகத்தால் ஈர்க்கப்பட்டதே இந்த எடிசன் ஆகும்.

இந்த சிறப்பு பதிப்புகளில் பெரியளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதே நேரத்தில், ஒற்றைக் கொம்பு கொண்ட காண்டா மிருகத்தை குறிக்கக் கூடிய ஒரு சில மாற்றங்கள் இதில் செய்யப்பட்டிருக்கின்றன. அவை சிறப்பு கிராஃபிக்குகள் மற்றும் நிறங்கள் வாயிலாக தென்படுகின்றன.

இந்த கார்கள் பற்றிய டீசர் வீடியோவே தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இவை ஒரு காலியான மைதனாத்தில் நின்றுக் கொண்டு காண்டா மிருகத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அதன் ஹெட்லைட்டுகளை ஒளிர செய்கின்றன. இந்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

சிறப்பு பதிப்பை பெற்றிருக்கும் அனைத்து டாடா கார் மாடல்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. குறிப்பாக, டாடா நெக்ஸானுக்கு மிக அமோகமான வரவேற்பு நாட்டில் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இந்த கார் இந்தியாவின் அதிக பாதுகாப்பான வாகனங்களில் ஒன்றாகும். இது ஐந்து நட்சத்திர ரேட்டிங் பெற்ற பாதுகாப்பான காராகும்.

இதனையே கூடுதல் சிறப்பு வாகனமாக தற்போது டாடா மோட்டார்ஸ் மாற்றியிருக்கின்றது. ஆனால் என்ன மாதிரியான அம்சங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய தகவலை நிறுவனம் வெளியிடவில்லை. மிக விரைவில் அதுகுறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications