இந்தியர்கள் காத்து கிடக்கும் எலெக்ட்ரிக் கார் இன்னும் 6 நாட்களில் அறிமுகம்? எதிர்பார்ப்பை எகிற வைத்த டாடா!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய எலெக்ட்ரிக் காருக்கான டீசர் வீடியோ, வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்துள்ளது. விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விரைவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய எலெக்ட்ரிக் காருக்கான டீசர் வீடியோவை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் கார் வரும் ஏப்ரல் 6ம் (April 6) தேதி வெளியிடப்படவுள்ளது. அதை தொடர்ந்து இந்த எலெக்ட்ரிக் கார் கூடிய விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது புதிய டீசர் வீடியோவை சமூக வலை தளங்கள் மூலம் வெளியிட்டுள்ள நிலையில், இது எந்த எலெக்ட்ரிக் காருக்கான டீசராக இருக்கும்? என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பாடி பேனல்களின் சில க்ளோஸ்-அப் ஷாட்களை தவிர, இந்த டீசர் வீடியோ வேறு எந்த தகவலையும் பெரிதாக வெளியிடவில்லை.

எனவே இது எந்த எலெக்ட்ரிக் காருக்கான டீசராக இருக்கும்? என்பதை சரியாக கணிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஒரு சில எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி கொண்டிருப்பது ஏற்கனவே நமக்கு தெரிந்த ஒரு விஷயம்தான். இதை வைத்து பல்வேறு யூகங்கள் வெளியாகி கொண்டுள்ளன.

இந்தியாவில் தற்போது அதிகளவில் விற்பனையாகி கொண்டுள்ள எலெக்ட்ரிக் கார் எது? என்பது அனேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்தான் அது. எலெக்ட்ரிக் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு, இந்திய சந்தையில் நேரடி போட்டியாக எந்த மாடலும் தற்போதைக்கு இல்லை.

அத்துடன் சிறப்பான பேட்டரி தொகுப்பு, நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற ரேஞ்ச், சவாலான விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இந்த காரின் விற்பனையை மேலும் அதிகரிப்பதற்காக, புதிய வெர்ஷனை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இதன்படி வெகு விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் புதிய வெர்ஷனில், 40 kWh பேட்டரி தொகுப்பு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இது தற்போது விற்பனை செய்யப்பட்டும் வரும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் பொருத்தப்பட்டிருப்பதை விட பெரிய பேட்டரி தொகுப்பு ஆகும்.

இந்த புதிய பேட்டரி தொகுப்புடன் கூடிய புதிய 2022 டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ரேஞ்ச் 400 கிலோ மீட்டர்களாக இருக்கலாம் என தெரிகிறது. தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் ரேஞ்ச், இதை விட குறைவாகும். நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் இந்த புதிய வெர்ஷனைதான் வரும் ஏப்ரல் 6ம் தேதி டாடா அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை வரும் ஏப்ரல் 6ம் தேதி அறிமுகம் செய்யப்படவிருப்பது 2022 டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காராக இல்லாவிட்டால், அது டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காராக இருக்கலாம் என யூகங்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே விற்பனையில் உள்ள ஐசி இன்ஜினுடன் கூடிய அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை அறிமுகம் செய்ய டாடா தயாராகி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமே.

அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் காரில், டர்போ பெட்ரோல் இன்ஜின், ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு அப்டேட்களை செய்து வருகிறது. இந்த வரிசையில் இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரை வரும் ஏப்ரல் 6ம் தேதி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அந்த காருக்கான டீசர் வீடியோவாக கூட இது இருக்கலாம் என ஆட்டோமொபைல் வட்டாரங்களில் யூகங்கள் வெளியாகியுள்ளன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரும் ஏப்ரல் 6ம் தேதி நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் புதிய வெர்ஷன் அல்லது அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் என இரண்டில் எதை அறிமுகம் செய்தாலும், வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் இந்த 2 எலெக்ட்ரிக் கார்களுக்காகவும் வாடிக்கையாளர்கள் பலர் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

ஆனால் இவை அனைத்துமே யூகங்கள் மட்டும்தான் என்பதை மறந்து விட வேண்டாம். வரும் ஏப்ரல் 6ம் தேதி டாடா மோட்டார்ஸ் என்ன செய்ய போகிறது? என்பது அந்த நிறுவனத்திற்கு மட்டுமே உறுதியாக தெரியும். ஏப்ரல் 6ம் தேதிக்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளதால், அதுவரை நாம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








