மிகப்பெரிய ஜாக்பாட்! பல்க்கான ஆர்டரை தட்டி தூக்கியது டாடா! நாடு முழுக்க இனிமேல் இவங்க வண்டிதான் ஓடப்போகுது!

மிகப்பெரிய ஆர்டர் ஒன்றை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) திகழ்கிறது. கார் விற்பனையில் மட்டுமல்லாது, பஸ்கள் போன்ற வர்த்தக வாகனங்களின் (Commercial Vehicles) விற்பனையிலும் டாடா மோட்டார்ஸ் முன்னணி வகிக்கிறது.

மிகப்பெரிய ஜாக்பாட்! பல்க்கான ஆர்டரை தட்டி தூக்கியது டாடா! நாடு முழுக்க இனிமேல் இவங்க வண்டிதான் ஓடப்போகுது!

கடந்த காலங்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த போக்குவரத்து கழகங்களிடம் இருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஆர்டர்கள் கிடைத்துள்ளன. இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு மிகப்பெரிய ஆர்டரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வென்றுள்ளது. இம்முறை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வென்றிருப்பது ஹரியானா ரோடுவேஸின் (Haryana Roadways) ஆர்டர் ஆகும்.

1,000 டீசல் பஸ்களை (Diesel Buses) சப்ளை செய்வதற்கான ஆர்டரை ஹரியானா ரோடுவேஸ் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், 52 இருக்கைகளை கொண்ட பிஸ்6 (BS6) டீசல் பஸ்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டெலிவரி செய்யவுள்ளது. இந்த பஸ்கள் அனைத்தும் படிப்படியாக டெலிவரி செய்யப்படும்.

இதுகுறித்து ஹரியானா மாநில போக்குவரத்து துறையின் முதன்மை செயலாளர் நவ்தீப் சிங் விர்க் கூறுகையில், ''டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் 1,000 பஸ்களுக்கான ஆர்டரை உறுதி செய்ததில் மகிழ்ச்சியடைகிறோம். நவீனமான மற்றும் சிக்கனமான இந்த பஸ்கள் அனைத்தும் பயணிகளுக்கு ஈடு இணையற்ற சௌகரியத்தை வழங்கும்.

இந்த புதிய பஸ்கள் அனைத்தும், பொது போக்குவரத்தை இன்னும் திறன்மிக்கதாக மாற்றும்'' என்றார். இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பேருந்துகள் பிரிவின் துணை தலைவர் ரோஹித் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ''ஹரியானா ரோடுவேஸிடம் இருந்து பெரிய மற்றும் மதிப்பு வாய்ந்த ஆர்டரை வென்றது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த பஸ்களின் டெலிவரி, ஹரியானா அரசுடனான எங்களின் கூட்டணியை மேலும் வலுப்படுத்தும்'' என்றார். இதற்கு முன்னதாக பெங்களூர் பெருநகர போக்குவரத்து கழகத்திடம் இருந்து (BMTC - Bangalore Metropolitan Transport Corporation) வெகு சமீபத்தில் மிகப்பெரிய ஆர்டர் ஒன்றை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வென்றிருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இது 921 எலெக்ட்ரிக் பஸ்களை சப்ளை செய்வதற்கான ஆர்டர் ஆகும். அதேபோல் மேற்கு வங்க மாநில போக்குவரத்து கழகத்திடம் (West Bengal Transport Corporation) இருந்தும் 1,180 எலெக்ட்ரிக் பஸ்களை சப்ளை செய்வதற்கான மிகப்பெரிய ஆர்டரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகு சமீபத்தில் வென்றிருந்தது.

இந்த வரிசையில்தான் தற்போது ஹரியானா ரோடுவேஸிடம் இருந்தும் 1,000 பஸ்களை சப்ளை செய்வதற்கான ஆர்டரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வென்றுள்ளது. இதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் குவிய தொடங்கியுள்ளன. வரும் காலங்களில் இதேபோல் இன்னும் பல்வேறு ஆர்டர்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வென்றெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 17, 2022, 23:57 [IST]
English summary
Tata wins order of 1000 diesel buses from haryana
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+