போர்ஷே ஸ்பெஷலிஸ்ட் டெக்ஆர்ட் இந்திய சந்தையில் நுழைந்தது... பெங்களூருவில் ஷோரூம் திறப்பு!

இந்தியாவில் முதன் முறையாக பெங்களூருவில் டெக்ஆர்ட் என்ற நிறுவனம் தங்களது ஷோரூமை திறந்துள்ளது. போர்ஷே கார்களுக்கான ரிஃபைன்மெண்ட் ஸ்பெஷலிஸ்டாக இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்திய சந்தையில் நுழைந்தது டெக்ஆர்ட் . . . கார் ரிஃபைன்மெண்ட்கான ஷோரூம் பெங்களூரில் திறப்பு !

கார் காதலர்கள் என்றால் கார்களை வாங்கி அதை மாடிஃபிகேஷன் செய்து பயன்படுத்துவதில் அதிக விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். இப்படியாக போர்ஷே காரில் ரிஃபைன்மெண்ட் செய்யும் நிறுவனம்தான் டெக்ஆர்ட் என்ற சர்வதேச நிறுவனம். இந்நிறுவனம் தற்போது பெங்களூருவில் தனது இந்தியாவின் முதல் ஸ்டோரை துவக்கியுள்ளது.

இந்திய சந்தையில் நுழைந்தது டெக்ஆர்ட் . . . கார் ரிஃபைன்மெண்ட்கான ஷோரூம் பெங்களூரில் திறப்பு !

ஜெர்மன் நாட்டை தலைமையாக கொண்ட இந்நிறுவனம் உலகின் பலநாடுகளில் இயங்கி வருகிறது. 1987ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக போர்ஷே கார்களுக்கான பிரீமியம் ரிஃபைன்மெண்ட் சேவைகளை வழங்கி வருகிறது. முதலில் ஜெர்மன் நாட்டில் மட்டும் துவங்கப்பட்ட இந்த பிராண்ட் படிப்படியாக வெளிநாடுகளில் தங்கள் கிளைகளை விரித்து சர்வதேச பிராண்டாக மாறியது.

இந்திய சந்தையில் நுழைந்தது டெக்ஆர்ட் . . . கார் ரிஃபைன்மெண்ட்கான ஷோரூம் பெங்களூரில் திறப்பு !

இந்நிறுவனம் குறிப்போக போர்ஷே கார்களுக்கான ரிஃபைன்மெண்ட்டிற்கான உதிரிபாகங்களை தயாரித்து விற்பனை செய்கிறது. இந்நிலையில் இந்தியாவில் அதிக மக்கள் ஆட்டோமொபைல் மாடிஃபிகேஷனை விரும்பும் நகரங்களில் ஒன்றான பெங்களூருவில் தனது முதல் ஸ்டோரை திறந்துள்ளது.

இந்திய சந்தையில் நுழைந்தது டெக்ஆர்ட் . . . கார் ரிஃபைன்மெண்ட்கான ஷோரூம் பெங்களூரில் திறப்பு !

இந்த ஸ்டோரில் முழுவதுமாக வாகனத்தை மாற்றுவது, கார்பன் ஃபைபர் ரிஃபைன்மெண்ட், செயல்திறனை உயர்த்துவது, காரின் உட்புறத்தில் லக்ஸரி லுக்கிற்கான கைவினை வேலைப்பாடுகளை செய்வது உள்ளிட்ட பல சேவைகள் வழங்கப்படுகிறது. மேலும் காருக்கு தேவையான மாடிஃபிகேஷன் உதிரிபாகங்களையும் இந்நிறுவனம் வழங்குகிறது. இங்கு போர்ஷே கார் உரிமையாளர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் கஸ்டமைஸ்டு மாற்றங்களை செய்து கொள்ளலாம்.

இந்திய சந்தையில் நுழைந்தது டெக்ஆர்ட் . . . கார் ரிஃபைன்மெண்ட்கான ஷோரூம் பெங்களூரில் திறப்பு !

இதன் மூலம் பெங்களூரூ மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள போர்ஷே கார் உரிமையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில், காரை ரீ கான்ஃபிகர் செய்து கொள்ள முடியும். தற்போது இந்நிறுவனம் பெங்களூருவில் துவங்கப்பட்டாலும் விரைவில் மற்ற மாநிலங்களுக்கும் இதன் கிளைகளை பரப்ப முடிவு செய்துள்ளது. அதன்படி வட இந்தியா, மும்பை, டெல்லி என பல இடங்களில் இந்தியாவிற்குள் இதன் கிளைகள் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் நுழைந்தது டெக்ஆர்ட் . . . கார் ரிஃபைன்மெண்ட்கான ஷோரூம் பெங்களூரில் திறப்பு !

இந்நிறுவனம் போர்ஷே கார்களுக்கான ஏரோ டைனமிக்ஸ் இம்ப்ரூவ்மெண்ட், வெளிப்புற ஸ்டைலிங், டெக்னிக்கல் ரீதியிலான மாற்றங்கள், இன்ஜின் பவர் கிட், எக்ஸாஸ்ட் சிஸ்டம், வீல்கள், சஸ்பென்ஷன்கள், வாகனங்களின் உட்-கட்டுமான அமைப்பு உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.

இந்திய சந்தையில் நுழைந்தது டெக்ஆர்ட் . . . கார் ரிஃபைன்மெண்ட்கான ஷோரூம் பெங்களூரில் திறப்பு !

மேலும் இந்நிறுவனம் ஸ்விட்சர்லாந்தில் கார்களை வாங்கி அதை ரிஃபைன்மெண்ட் செய்து விற்பனை செய்து வருகின்றது. இதில் வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களை இவர்களது இணையதளத்திலேயே மாடிஃபிகேஷன் செய்யும் வசதியை இந்நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்தியாவில் அதன் கிளைகளை திறப்பது குறித்து டெக்ஆர்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டோபியாஸ் பேயர் கூறும்போது : "நாங்கள் டெக்ஆர்ட்டை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறோம். எங்கள் நிறுவனத்திற்கு என்று ஒரு தனித்துவம் இருக்கிறது. அந்த தனித்துவம் எல்லா இடங்களிலும் தென்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இந்திய சந்தையில் நுழைந்தது டெக்ஆர்ட் . . . கார் ரிஃபைன்மெண்ட்கான ஷோரூம் பெங்களூரில் திறப்பு !

எங்கள் தயாரிப்புகள் போர்ஷே மாடலில் ஸ்போர்ட்ஸை மையப்படுத்திய தயாரிப்புகளாக இருக்கும். இந்தியாவில் எங்கள் நிறுவனத்தின் துவக்கம் ரிஃபைன்மெண்ட் மீது இந்தியர்களுக்கு மோகத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம். இந்தியாவில் எங்கள் அறிமுகத்தால் எங்கள் வாடிக்கையாளர்கள் பெருகுவதோடு, எங்கள் தனித்துவமான தன்மையும் இந்திய மக்களுக்கு தெரியவரும்" என கூறியுள்ளார்.

இந்திய சந்தையில் நுழைந்தது டெக்ஆர்ட் . . . கார் ரிஃபைன்மெண்ட்கான ஷோரூம் பெங்களூரில் திறப்பு !

இந்நிறுவனம் இந்தியாவில் குறிப்பாக பெங்களூருவில் தனது சேவைகளை துவங்கினாலும் இந்த நிறுவனத்திற்கான R&D, உற்பத்தி மற்றும் சப்ளை ஆகியவை வெளிநாடுகளில்தான் உள்ளது. இங்குள்ள ஸ்டோரில் அந்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உதிரிபாகங்களை ஆர்டர் செய்தால் அது வெளிநாடுகளில் உள்ள இதன் உற்பத்தி ஆலையில் தயாராகி இந்தியாவிற்கு வரும்.

இந்திய சந்தையில் நுழைந்தது டெக்ஆர்ட் . . . கார் ரிஃபைன்மெண்ட்கான ஷோரூம் பெங்களூரில் திறப்பு !

பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் ஸ்டோரின் உள்ளேயே கார்களுக்கான சிறிய சிறிய அலங்கார பொருட்கள், காருக்கு தேவையான சிறிய சிறிய உதிரி பாகங்கள், காரின் உட்கட்டமைப்பிற்கான பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக சர்வதேச அளவில் வாகனங்கள் தயாரிப்பாளர் மற்றும் எகனாமிக் ஆப்ரேட்டர் என்ற சான்றை ஐரோப்பிய யூனியனில் இந்நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்திய சந்தையில் நுழைந்தது டெக்ஆர்ட் . . . கார் ரிஃபைன்மெண்ட்கான ஷோரூம் பெங்களூரில் திறப்பு !

இந்நிறுவனத்தின் இந்திய வருகையால் உலகின் பல ரிஃபைன்மெண்ட் நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வர துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குறிப்பிட்ட நிறுவனம் போர்ஷே கார்களுக்காக ரிஃபைன்மெண்ட் செய்வதை தனித்துவமாக செய்து வருகிறது என்பதை மீண்டும் இங்கு அழுத்தமாக குறிப்பிடுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 5, 2022, 16:09 [IST]
English summary
Techart officially launched refinement center in Bangalore
மேலும்... #போர்ஷே #porsche
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+