“எங்கள் மாநிலத்தில் தொழிற்சாலையை நிறுவுங்கள்” - டெஸ்லாவை தங்கள் பக்கம் இழுக்க பார்க்கும் தெலுங்கானா அமைச்சர்!!

டெஸ்லா தங்களது மாநிலத்தில் தொழிற்சாலையை அமைக்கலாம் என பல இந்திய மாநில அரசுகள் கூறிவரும் நிலையில், டெஸ்லா தங்களது மாநிலத்தில் தொழிற்சாலையை நிறுவ அனைத்து வசதிகளும் உள்ளதாக தெங்கானா மாநில அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். யார் அவர்? அவர் என்ன அப்படி கூறினார்? என்பதை இந்த செய்தியில் பார்ப்போம்.

“எங்கள் மாநிலத்தில் தொழிற்சாலையை நிறுவுங்கள்” - டெஸ்லாவை தங்கள் பக்கம் இழுக்க பார்க்கும் தெலுங்கானா அமைச்சர்!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் சிஇஓ எலான் மஸ்க் ஆவார். கிட்டத்தட்ட பெரும்பான்மையான நாடுகளில் எலக்ட்ரிக் கார் விற்பனையில் முன்னிலையில் உள்ள டெஸ்லா குறிப்பாக அமெரிக்காவை தாண்டி ஐரோப்பிய சந்தைகளிலும் முதன்மையான பிராண்டாக உருவெடுத்துள்ளது.

“எங்கள் மாநிலத்தில் தொழிற்சாலையை நிறுவுங்கள்” - டெஸ்லாவை தங்கள் பக்கம் இழுக்க பார்க்கும் தெலுங்கானா அமைச்சர்!!

நம் அண்டை நாடான சீனாவில் கூட டெஸ்லா கார்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால் இந்தியாவில் இன்னமும் டெஸ்லா கார்கள் களமிறக்கப்படவில்லை. நம் நாட்டில் தங்களது கார்களை விற்பனை செய்ய விரும்புவதாக 3 ஆண்டுகளுக்கு முன் கடந்த 2019இல் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இந்த 3 வருடங்களில் டெஸ்லாவின் இந்திய வருகை குறித்து பல தகவல்கள் வெளியாகி இருந்தன.

“எங்கள் மாநிலத்தில் தொழிற்சாலையை நிறுவுங்கள்” - டெஸ்லாவை தங்கள் பக்கம் இழுக்க பார்க்கும் தெலுங்கானா அமைச்சர்!!

முதலில் இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பது குறித்து மத்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் டெஸ்லா சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின. அதன்பின் டெஸ்லா தொழிற்சாலையை பெறுவதில் நமது தமிழ்நாட்டு அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் போட்டி நிலவி வருவதாகவும், பின்னர் இதில் கர்நாடகா அரசு முன்னிலை வகிப்பதால், டெஸ்லா தொழிற்சாலை கர்நாடகாவில் அமைய உள்ளதாகவும் கூறப்பட்டன.

“எங்கள் மாநிலத்தில் தொழிற்சாலையை நிறுவுங்கள்” - டெஸ்லாவை தங்கள் பக்கம் இழுக்க பார்க்கும் தெலுங்கானா அமைச்சர்!!

ஆனால் அதன் பின்னரே இந்தியாவில் தொழிற்சாலையை ஏற்படுத்துவது என்கிற மிக பெரிய திட்டத்தில் டெஸ்லா இல்லை என்பதும், கார்களை முழுமையாக வெளிநாட்டில் தயாரித்து, இங்கு இறக்குமதி செய்து விற்பனை செய்ய இறக்குமதி வரிகளை குறைக்க வேண்டி மத்திய அரசாங்கத்திடம் முறையிட்டு வருவது நமக்கு தெரிய வந்தது. இப்படிப்பட்ட நிலையில் தங்களது மாநிலத்தில் டெஸ்லா தொழிற்சாலையை நிறுவ விரும்புகிறோம் என தெலுங்கானா அமைச்சர் கே டி ராமாராவ் தெரிவித்துள்ளார்.

“எங்கள் மாநிலத்தில் தொழிற்சாலையை நிறுவுங்கள்” - டெஸ்லாவை தங்கள் பக்கம் இழுக்க பார்க்கும் தெலுங்கானா அமைச்சர்!!

டெஸ்லா எப்போது இந்திய சந்தையில் களம்புகும் என நெட்டிசன்கள் பலரும் டுவிட்டரில் எலான் மஸ்க்கை கேட்டுவரும் நிலையில், சமீபத்தில் நெட்டிசன் ஒருவரின் பதிலளிக்கும் விதமாக "இந்திய அரசாங்கத்துடனான ஏகப்பட்ட சவால்களுக்கு மத்தியில் இதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது" என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

“எங்கள் மாநிலத்தில் தொழிற்சாலையை நிறுவுங்கள்” - டெஸ்லாவை தங்கள் பக்கம் இழுக்க பார்க்கும் தெலுங்கானா அமைச்சர்!!

எலானின் இந்த ட்விட் இந்திய இணையவாசிகள் கவனத்தை பெற்றுள்ள நிலையில் இதற்கு பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் தெங்கானா அமைச்சர் கே டி ராமாராவ் "ஹேய் எலான், நான் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர். இந்தியா/ தெலுங்கானாவில் கடையை அமைப்பதற்கான சவால்களை சமாளிக்க டெஸ்லாவுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

“எங்கள் மாநிலத்தில் தொழிற்சாலையை நிறுவுங்கள்” - டெஸ்லாவை தங்கள் பக்கம் இழுக்க பார்க்கும் தெலுங்கானா அமைச்சர்!!

எங்கள் மாநிலம் நிலைத்தன்மை முயற்சிகளில் ஒரு சாம்பியனாகவும், இந்தியாவில் ஒரு சிறந்த வணிக இலக்காகவும் உள்ளது" என எலானின் ட்விட்டை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். கார்களை வெளிநாட்டில் முழுவதும் தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்வதை தவிர்க்கும் விதமாக அதிகப்படியான வரியினை இத்தகைய கார்களின் மீது மத்திய அரசாங்கம் விதிக்கிறது.

“எங்கள் மாநிலத்தில் தொழிற்சாலையை நிறுவுங்கள்” - டெஸ்லாவை தங்கள் பக்கம் இழுக்க பார்க்கும் தெலுங்கானா அமைச்சர்!!

அதே அளவிலான வரியே எந்தவொரு பாரப்பட்சமுமின்றி டெஸ்லாவிற்கும் விதிக்கப்பட்டது. ஆனால் இந்த அமெரிக்க எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் இந்திய அரசிடம் இருந்து சிறப்பு சலுகையினை எதிர்பார்க்கிறது. அதுமட்டுமின்றி சீன தயாரிப்புகளின் மீது மத்திய அரசு தடை விதிக்கும் எண்ணத்தில் உள்ளது. ஆனால் டெஸ்லா இந்தியாவில் நுழைந்தால், சீனாவில் இருந்துதான் எலக்ட்ரிக் கார்களை இறக்குமதி செய்யும்.

“எங்கள் மாநிலத்தில் தொழிற்சாலையை நிறுவுங்கள்” - டெஸ்லாவை தங்கள் பக்கம் இழுக்க பார்க்கும் தெலுங்கானா அமைச்சர்!!

ஏனெனில் உலகளவில் டெஸ்லாவிற்கு மொத்தமாகவே 4 தொழிற்சாலைகள் மட்டுமே உள்ளன. இதில் 3 அமெரிக்காவில் உள்ளது. மீதி ஒன்று சீனாவில் உள்ளது. ஆதலால் இந்தியாவிற்கான எலக்ட்ரிக் கார்களை சீனாவில் உள்ள தொழிற்சாலையில் தயாரித்துதான் டெஸ்லா அறிமுகம் செய்யக்கூடும். இது ஆளும் மத்திய அரசாங்கத்தின் கோட்பாட்டிற்கு எதிராக உள்ளது.

“எங்கள் மாநிலத்தில் தொழிற்சாலையை நிறுவுங்கள்” - டெஸ்லாவை தங்கள் பக்கம் இழுக்க பார்க்கும் தெலுங்கானா அமைச்சர்!!

இந்தியாவில் டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார்களுக்கு போட்டியளிக்கும் வகையில் மெர்சிடிஸ்-பென்ஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி நிறுவனங்களின் தயாரிப்புகள் உள்ளன. இதில் மெர்சிடிஸ்-பென்ஸ் தனது இக்யூஎஸ் எலக்ட்ரிக் கார்களை இந்தியாவிலேயே தயாரிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மெர்சிடிஸ் எஸ்-கிளாஸ் செடான் மாடலின் எலக்ட்ரிக் வெர்சனான இக்யூஎஸ் நான்காம் காலாண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
KTR Invites Elon Musk In Telangana.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X