சத்தமே இல்லாம பண்றாங்க... எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் திடீர் திட்டம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க
டெஸ்லா நிறுவனத்தின் திடீர் திட்டம் இந்தியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக டெஸ்லா (Tesla) திகழ்கிறது. அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் தனது எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து கொண்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இன்னும் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை தொடங்கப்படவில்லை.

டெஸ்லாவின் இந்திய வருகை இங்குள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வருமா? வராதா? என்பது உறுதியாக தெரியவில்லை. டெஸ்லா நிறுவனத்திற்கும், இந்தியாவின் மத்திய அரசிற்கும் இடையே நிறைய பிரச்னைகள் இருந்து வருகின்றன.

டெஸ்லா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து விற்பனை செய்ய வேண்டும் என விரும்புகிறது. ஆனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு மத்திய அரசு அதிக வரி விதித்து வருகிறது. இந்த வரி மிகவும் அதிகமாக இருப்பதாகவும், அதனை குறைக்க வேண்டும் எனவும் டெஸ்லா நிறுவனம் வலியுறுத்தி கொண்டுள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான (CEO) எலான் மஸ்க்கே (Elon Musk) இந்த கோரிக்கையை நேரடியாக விடுத்து விட்டார். ஆனால் மத்திய அரசு இறங்கி வரவில்லை. டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தொழிற்சாலை அமைத்து இங்கு கார்களை உற்பத்தி செய்ய வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.

இதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதுடன், இந்தியாவை சேர்ந்த பலருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். எனவேதான் டெஸ்லா நிறுவனம் கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யாமல், இந்தியாவில் தொழிற்சாலை அமைத்து கார்களை உற்பத்தி செய்ய வேண்டும் என மத்திய அரசு நிபந்தனை விதித்து வருகிறது.

இந்த நிபந்தனையை ஏற்று கொண்டால் மட்டுமே சலுகைகளை பற்றி யோசிக்க முடியும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. தற்போது உள்ள மத்திய அரசு பொதுவாக எந்தவொரு விஷயத்திலும் அவ்வளவு எளிதில் பின்வாங்குவதில்லை. இதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. எடுத்த முடிவில் மத்திய அரசு மிகவும் உறுதியாக இருந்து வருகிறது.

எனவே இந்தியாவில் தொழிற்சாலை அமைப்பது மட்டுமே இங்கு டெஸ்லா கால்பதிப்பதற்கு தற்போதைக்கு இருக்கும் ஒரே வாய்ப்பாக கருதப்படுகிறது. ஆனால் எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றாலும், டெஸ்லா நிறுவனத்தின் திட்டம் ஒன்று, மத்திய அரசிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெஸ்லா நிறுவனத்திற்கு சீனாவின் (China) ஷாங்காய் (Shanghai) நகரில் தொழிற்சாலை இருக்கிறது. சீனாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி விட்டு, இந்திய சந்தையில் லாபம் மட்டும் பார்க்க நினைப்பதா? என்ற ஆதங்கம் ஏற்கனவே மத்திய அரசு இருந்து வருகிறது. தற்போது இந்த அதிருப்தி அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷாங்காய் நகரில் புதிதாக மேலும் ஒரு தொழிற்சாலையை அமைப்பதற்கு டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டு வருவதாக வெளியாகி வரும் தகவல்கள்தான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. சீனாவில் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை உயர்ந்து கொண்டே வருகிறது. சீனா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்கள் தற்போது வேகமாக பிரபலமாகி கொண்டுள்ளன.

தனது எலெக்ட்ரிக் கார்களுக்கு 'டிமாண்ட்' அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டுதான், ஷாங்காய் நகரில் புதிதாக மேலும் ஒரு தொழிற்சாலையை அமைக்க டெஸ்லா திட்டமிட்டு வருவதாக விபரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். ஷாங்காய் நகரில் தற்போது உள்ள தொழிற்சாலைக்கு அருகிலேயே இந்த புதிய தொழிற்சாலையும் அமைக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

இது நடந்தால் டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி மேலும் உயரும். இதன் மூலம் தனது எலெக்ட்ரிக் கார்களுக்கு அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என டெஸ்லா நிறுவனம் நம்புவதாக கூறப்படுகிறது. ஆனால் ஷாங்காய் நகரில் புதிய தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக டெஸ்லா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக வாய் திறப்பதற்கு டெஸ்லா நிறுவனம் மறுத்து வருகிறது. எனினும் டெஸ்லா நிறுவனத்திற்கு இப்படி ஒரு திட்டம் இருப்பதாக உலகின் முன்னணி செய்தி நிறுவனங்கள் பலவும் கூறி வருகின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








