தல தோனி வாங்கிய மிக மிக பழைய கார்... ஏலத்துல கடும் போட்டி போட்டு வாங்கியிருக்காருங்க! அப்படி என்ன காருங்க அது?

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக கண்டறியப்படும் மஹிந்திர சிங் தோனி, மிக மிக பழங்கால கார் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

தல தோனி வாங்கிய மிக மிக பழைய கார்... ஏலத்துல கடும் போட்டி போட்டு வாங்கியிருக்காருங்க! அப்படி என்ன காருங்க அது?

கிரிக்கெட்டை போலவே வாகனங்களின் மீதும் அதீத ஆர்வம் மிக்கவராக இருக்கின்றார், மஹிந்திரா சிங் தோனி. இதற்கு அவருடைய வாகன நிறுத்துமிடமே (கராஜே) சான்று. இங்கு ஏகப்பட்ட பைக் மற்றும் கார்கள் இருக்கின்றன. அனைத்தும் பிற முக்கிய பிரபலங்களிடத்தில் இருப்பதைப் போன்று ஏதோ வழக்கமான விலை உயர்ந்த வாகனங்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டும்.

தல தோனி வாங்கிய மிக மிக பழைய கார்... ஏலத்துல கடும் போட்டி போட்டு வாங்கியிருக்காருங்க! அப்படி என்ன காருங்க அது?

ஒவ்வொன்றும் அரிய வகை வாகனங்களாகும். இதுவே, தல தோனி சற்றே வித்தியாசமான வாகன காதலர் என்பதற்கு சான்றாக இருக்கின்றது. இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலேயே கிரிக்கெட் ஜாம்பவான், தற்போது மிக மிக பழைய கார் ஒன்றை வாங்கியிருக்கின்றார். லேண்ட் ரோவர் 3 காரையே அவர் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தல தோனி வாங்கிய மிக மிக பழைய கார்... ஏலத்துல கடும் போட்டி போட்டு வாங்கியிருக்காருங்க! அப்படி என்ன காருங்க அது?

இந்த காரை பிக் பாய்ஸ் டாய்ஸ் (Big Boy Toyz) எனும் நிறுவனம் நடத்திய ஏலத்தின் வாயிலாகவே தோனி வாங்கியிருக்கின்றார். இந்நிறுவனம் ஓர் பயன்படுத்திய சொகுசு வாகனங்களை விற்பனைச் செய்யும் நிறுவனம் ஆகும். இது, விண்டேஜ் மற்றும் கிளாசிக் ரக வாகனங்களை ஏலம் விடும் செயலையும் நாட்டில் மேற்கொண்டு வருகின்றது.

தல தோனி வாங்கிய மிக மிக பழைய கார்... ஏலத்துல கடும் போட்டி போட்டு வாங்கியிருக்காருங்க! அப்படி என்ன காருங்க அது?

அவ்வாறு அது அண்மையில் மேற்கொண்ட விண்டேஜ் வாகனங்களுக்கான ஏலத்தில் கலந்துக் கொண்டே கிரிக்கெட் உலக ஜாம்பவான் தோனி, லேண்ட் ரோவர் 3 காரை வாங்கியிருக்கின்றார். கடந்த வருடம் டிசம்பர் ஆன்லைன் வாயிலாக இந்த ஏலத்தை பிக் பாய்ஸ் டாய்ஸ் நிறுவனம் நடத்தியது குறிப்பிடத்தகுந்தது.

தல தோனி வாங்கிய மிக மிக பழைய கார்... ஏலத்துல கடும் போட்டி போட்டு வாங்கியிருக்காருங்க! அப்படி என்ன காருங்க அது?

இதில் பலர் பங்கு பெற்று லேண்ட் ரோவர் 3 விண்டேஜ் மற்றும் கிளாசிக் காரை வாங்க போட்டி போட்டதாக பிக் பாய்ஸ் டாய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், முன்னணி பிரபலங்கள் சிலரும் அடங்குவர். நிறுவனம் லேண்ட் ரோவர் 3 காருடன் சேர்த்து இன்னும் பல கார்களையும் ஏலத்திற்கு அறிவித்திருக்கின்றது.

தல தோனி வாங்கிய மிக மிக பழைய கார்... ஏலத்துல கடும் போட்டி போட்டு வாங்கியிருக்காருங்க! அப்படி என்ன காருங்க அது?

ரோல்ஸ் ராய்ஸ், கடில்லாக் ப்யூக், செவ்ரோலட், ஆஸ்டின், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பல முன்னணி நிறுவனங்களின் 19 கார்கள் எக்ஸ்க்ளூசீவாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை தற்போது ஏலத்தில் விற்றிருக்கின்றன.

தல தோனி வாங்கிய மிக மிக பழைய கார்... ஏலத்துல கடும் போட்டி போட்டு வாங்கியிருக்காருங்க! அப்படி என்ன காருங்க அது?

ஏல முடிவுகள் கடந்த 8ம் தேதி அன்றே வெளியிடப்பட்டது. இதன் வாயிலாகவே தல தோனி லேண்ட் ரோவர் 3 விண்டேஜ் காரை வாங்கியிருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஏலத்திற்கு அறிவிக்கப்பட்ட அனைத்து அரிய வகை வாகனங்களும் பிக் பாய்ஸ் டாய்ஸுக்கு சொந்தமான குருகிராம் ஷோரூமில் காட்சிப்படுத்தப்பட்டன.

தல தோனி வாங்கிய மிக மிக பழைய கார்... ஏலத்துல கடும் போட்டி போட்டு வாங்கியிருக்காருங்க! அப்படி என்ன காருங்க அது?

கார்களுக்கான ஏலம் ரூ. 1 தொடங்கி ரூ. 25 லட்சத்திற்கும் அதிகமாக சென்றதாக கூறப்படுகின்றது. ஆனால், துள்ளியமான ஏலம் விபரம் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. ஏலத்திற்கு அறிவிக்கப்பட்ட அனைத்து விண்டேஜ் வாகனங்களும் நிபுணர்களைக் கொண்ட தரம் கண்டறியப்பட்டு, அவற்றை சிறந்த முறையில் புதுப்பித்து ஏலம் விட்டதாக பிக் பாய்ஸ் டாய்ஸ் தெரிவித்திருக்கின்றது.

தல தோனி வாங்கிய மிக மிக பழைய கார்... ஏலத்துல கடும் போட்டி போட்டு வாங்கியிருக்காருங்க! அப்படி என்ன காருங்க அது?

நாடு தழுவிய அளவில் இந்த ஏலம் நடை பெற்றிருக்கின்றது. இதில், காரை வாங்கியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் பங்கேற்று தல தோனி லேண்ட் ரோவர் 3 காரை வாங்கியிருக்கின்றார். இந்தியாவில் பழங்கால வாகனங்களை வாங்குவோர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. ஆகையால், மிக விரைவில் இந்த பிரிவு பெருமளவில் வளர்ச்சி அடையும் என பிக் பாய்ஸ் டாய்ஸ் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

தல தோனி வாங்கிய மிக மிக பழைய கார்... ஏலத்துல கடும் போட்டி போட்டு வாங்கியிருக்காருங்க! அப்படி என்ன காருங்க அது?

மேலும், இந்த பிரிவை வலுப்படுத்தும் வகையில் பெரும் தொகையை நிறுவனம் முதலீடு செய்ய இருக்கின்றது. இதற்காக 100 கோடி வரை அது ஒதுக்க திட்டமிட்டிருக்கின்றது. பிக் பாய்ஸ் டாய்ஸ் நிறுவனம் மிக விரைவில் மற்றுமொரு பிரமாண்ட விண்டேஜ் வாகன ஏலத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் 2022 பிப்ரவரி மாதத்திற்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாகனங்களும் நிபுணர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு, தர சோதனைகள் உறுதிசெய்யப்பட்ட பின்னரே விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

Article Published On: Tuesday, January 18, 2022, 18:36 [IST]
English summary
Thala dhoni buys vintage land rover 3 here is full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+