குடும்பத்தோட படம் பார்க்க தியேட்டருக்கு போக வேணாம்! இந்த காரை வாங்குங்க போதும்!

ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று தான் உருவாக்கிய காரில் மிகப்பெரிய ஸ்கிரீனை பொருத்தி காரையே குட்டி தியேட்டராக பயன்படுத்தும் வகையில் உருவாக்கியுள்ளது. இனி குடும்பத்தோடு படம் பார்க்க தியேட்டருக்கு போகவேண்டாம் போல இந்த காரை வாங்கிலே போதும். இந்த கார் குறித்த விரிவான தெளிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

கார் வாங்கும் பலருக்கு கார்களில் மிகப்பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பலர் இதற்காக ஆஃப்டர் மார்கெட்டில் இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை வாங்கி பொருத்தி வருகின்றனர். இப்படியான ரசிகர்களைக் கவரும் வகையில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் மிகப்பெரிய திரையுடன் ஒரு காரை அறிமுகம் செய்யவுள்ளது.

குடும்பத்தோட படம் பார்க்க தியேட்டருக்கு போக வேணாம்! இந்த காரை வாங்குங்க போதும்!

இத்தாலி-அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஏக்ரா, இந்நிறுவனம் கார்களை வடிவமைத்து விற்பனைக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதுவரை இது ஒரு காரையும் விற்காத நிலையில் தனது முதல் காராக தனது முதல் காராக ஒரு எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த காரின் புரோட்டோ டைப்பை இந்நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த காரின் உட்புறத்தில் எப்படியிருக்கும் என்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ள இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் தான். 31 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது 8கே டிஸ்பிளே அம்சத்தைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்கிரீன் முதன் முறையாக பிஎம்டபிள்யூ ஐ7 காரில் வழங்கப்பட்டிருந்தது.

இந்த ஸ்கிரின் டேஷ் போர்டில் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனையை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கிரீன் மொத்தம் 3 பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. டிரைவர் பக்கம் இருக்கும் பாகம் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலாக வாகனத்தின் ஸ்பீடு, ரேஞ்ச், நேவிகேஷன் ஆகிய தகவல்களைக் காட்டும், மற்ற இரண்டு பாகங்களை பல்வேறு பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இது போக டேஷ்போர்டில் சிறிய கேமரா ஒன்றும் இருக்கிறது. இதில் காரின் மற்ற கண்டரோல்களான ஹீட்டிங், வென்டிலேஷன் ஆகியவற்றைச் செய்ய முடிவும், மேலே உள்ள பெரிய திரையில் இரண்டு பாகங்களைப் பயன்படுத்திய காரையே ஒரு குட்டி தியேட்டர் போல மாற்ற முடியும். அதில் திரைப்படங்களை ஓட விட்டு காரில் அமர்ந்தபடியே பார்த்துக்கொண்டே செல்ல முடியும். நாம் நினைத்த மாத்திரத்தில் காரையே ஒரு குட்டி தியேட்டராக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்த இந்த காரை வடிவமைத்த அலீஸ்சான்ட்ரோ சல்வாக்நின் என்பவர் கூறும்போது : "நாங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனமாக இருப்பதால் நாங்கள் விரும்பிய டிசைனை காரில் புகுத்த முடிந்தது. காரில் உயர்தரமான தொழிற்நட்பங்களை எல்லாம் சேர்க்க முடிந்தது. எலெக்ட்ரிக் வாகனங்களிலேயே இதுவரை யாரும் செய்யாத சுவாரஸ்யமான பல விஷயங்களை இதில் செய்துள்ளோம். " எனக் கூறினார்.

இந்த காரின் உட்புற கட்டமைப்பு விமானத்தைப் போல டிசைன் செய்யப்பட்டுள்ளது. குறைவான எடையில் அதிக உறுதித் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சீட்கள் சொகுசு வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சீட்கள் எல்லாம் அலுமினியம், மறுசுழற்சி செய்யக்கூடிய கார்பன் ஃபைபர் மற்றும் லெதர் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் கேபினில் கால்களுக்கு அதிக இடவசதியும், முழுமையாகச் சாய்வு தன்மை கொண்ட சீட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் 24 இன்ச் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் 800 எச்பி பவரை வெளிப்படுத்தும், இது அதிகபட்சமாக 265 கி.மீ வேகத்தில் சீறிப் பாயும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல இந்த கார் முழு சார்ஜில் 800 கி.மீ வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த காரின் பேட்டரி குறித்த விபரங்களை இன்னும் அந்நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் இது அல்ட்ரா-பிரிமியம் இவி கார் என்பதால் அதிக பேட்டரி கொள்ளளவு இருக்கும் என எதிர்பார்க்கலாம். இது போக இந்த காரில் டிசி சார்ஜிங் தொழினுட்பம் இருக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, December 23, 2022, 9:53 [IST]
English summary
Theater like electric SUV debut soon know more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+