இந்த வதந்திகளை எல்லாம் நம்பாதீங்க!.. காரை ரிவர்ஸ் பார்க்கிங் செய்வதனால் நன்மைகள் மட்டும்தான் கிடைக்குமாம்!

ஃபார்வார்டு பார்க்கிங்தான் பெஸ்ட், ரிவர்ஸ் பார்க்கிங் மோசமானது அப்படினு சொல்றவங்கள நம்பவே நம்பாதீங்க. இதுகுறித்து நிலவும் கட்டுக்கதைகளை உடைத்தெறியும் பதிவிற்குள் போகலாம், வாங்க.

இந்த வதந்திகளை எல்லாம் நம்பாதீங்க!.. காரை ரிவர்ஸ் எடுத்து நிறுத்துவதனால் நன்மைகள் மட்டும்தான் கிடைக்கும்!

காரை ஓட்டுவதைவிட பார்க் செய்வது ரொம்ப கடினமானது. அதற்கு எல்லாம் தனி ஞானம் வேண்டும். காரை ரிவர்ஸ் பார்க்கிங் செய்யக் கூடாது. இது ஆபத்தை விளைவிக்கும் என்றெல்லாம் பல்வேறு வதந்திகள் கார் பார்க்கிங்குறித்து உலாவிய வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, ரிவர்ஸ் பார்க்கிங்குறித்து பரவிக் கொண்டிருக்கும் வதந்திகள் பல. இவற்றை உடைத்தெறியவே இந்த பதிவு.

இந்த வதந்திகளை எல்லாம் நம்பாதீங்க!.. காரை ரிவர்ஸ் எடுத்து நிறுத்துவதனால் நன்மைகள் மட்டும்தான் கிடைக்கும்!

காரை ரிவர்ஸ் எடுத்து வந்து நிறுத்துவதையே ரிவர்ஸ் பார்க்கிங் என்கின்றனர். அதாவது, காரின் டிரைவர் பக்கம் சாலையை நோக்கியவாறும், பின் பகுதி சுவர் அல்லது என்ட் பக்கத்தை பார்த்தவாறு இருப்பதாகும். இந்த பார்க்கிங் குறித்து உலாவிக் கொண்டிருக்கும் வதந்திகளை போக்கும் விதமாக இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வதந்திகளை எல்லாம் நம்பாதீங்க!.. காரை ரிவர்ஸ் எடுத்து நிறுத்துவதனால் நன்மைகள் மட்டும்தான் கிடைக்கும்!

குறிப்பாக, ரிவர்ஸ் பார்க்கிங்குறித்து என்னென்ன வதந்திகள் உலாவிக் கொண்டிருக்கின்றன?, அவற்றின் உண்மை நிலைமை என்ன? மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங்கில் இருக்கும் நன்மைகள் என்ன?, என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்த வதந்திகளை எல்லாம் நம்பாதீங்க!.. காரை ரிவர்ஸ் எடுத்து நிறுத்துவதனால் நன்மைகள் மட்டும்தான் கிடைக்கும்!

ரிவர்ஸ் பார்க்கிங் குறித்து நிலவும் வதந்தி எண்: 1

ரிவர்ஸ் பார்க் செய்ய தனி திறமை வேண்டும்

ரிவர்ஸ் பார்க் செய்வதற்கு எல்லாம் தனி திறமை வேண்டும். இதற்கான ஞானம் இருந்தால் மட்டுமே ரிவர்ஸ் பார்க் செய்ய முடியும் என்பார்கள். ஆனால், அதெல்லாம் கிடையாது. கணிசமான நுணுக்கங்கள் தெரிந்து வைத்திருந்தாலே போதும். குறிப்பாக, ஒரு சில முறை பார்க் செய்து பார்த்தாலே போதும். உதாரணமாக முதலில் ரிவர்ஸ் பார்க் செய்யும்போது லேசான தடுமாற்றங்கள் இருக்கும். எங்கே பக்கவாட்டில் இருக்கும் வாகனம் அல்லது தடுப்புகள் மீது மோதிவிடுவோமோ என்கிற அச்சம் இருக்கும்.

இந்த வதந்திகளை எல்லாம் நம்பாதீங்க!.. காரை ரிவர்ஸ் எடுத்து நிறுத்துவதனால் நன்மைகள் மட்டும்தான் கிடைக்கும்!

இதனால், "அடச்சே... அடுத்த முறை முன்னோக்கி பார்த்த மாதிரியே வண்டிய நிறுத்திடலாம்னு" யோசிப்பீங்க. ஆனால், அப்படி நினைக்காமல் ஒன்றிற்கு பல முறை ரிவர்ஸ் பார்க் செய்து பார்த்தால் அதற்கு பின்னால் மறைந்திருக்கும் சுலபத் தன்மை தானாக வெளிப்படும். குறிப்பாக, ஃபார்வார்டு பார்க்கிங்கை விட மிகவும் சுலபமானது ரிவர்ஸ் பார்க் என்பது தெரிய வரும். இதன் வாயிலாக, ரிவர்ஸ் பார்க்கிங்கிற்கு தனி திறமை எல்லாம் தேவையில்லை. குறைந்தபட்ச பயிற்சியே போதுமானது என்பதையே நாங்கள் கூற வருகின்றோம்.

இந்த வதந்திகளை எல்லாம் நம்பாதீங்க!.. காரை ரிவர்ஸ் எடுத்து நிறுத்துவதனால் நன்மைகள் மட்டும்தான் கிடைக்கும்!

வதந்தி எண்: 2

ரிவர்ஸ் பார்க் அதிக குழப்பத்தை ஏற்படுத்தும்:

ஃபார்வார்டு பார்க்கிங்கைக் காட்டிலும் ரிவர்ஸ் பார்க்கிங் அதிகம் நேரம் எடுத்துக் கொள்ளும். வாகனம் வந்த வேகத்திலேயே பார்க்கிங்கிற்குள் நுழைவதால் பின்னால் வரும் வாகனங்கள் அதிக நேரம் நிற்க வேண்டிய சூழல் உருவாகாது. ஆகையால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு குறைவு. அதுவே, ரிவர்ஸ் எடுத்து பார்க்க செய்யும்போது சில நேரங்கள் வாகன போக்குவரத்து நிறுத்த வேண்டியிருக்கும். ஆகையால், ரிவர்ஸ் பார்க்கிங் அதிக குழப்பத்தை ஏற்படுத்தும் என சிலர் கூறுகின்றனர்.

இந்த வதந்திகளை எல்லாம் நம்பாதீங்க!.. காரை ரிவர்ஸ் எடுத்து நிறுத்துவதனால் நன்மைகள் மட்டும்தான் கிடைக்கும்!

ஆனால், அதுதான் கிடையாது. ரிவர்ஸ் பார்க்கிங்கின்போது ஏற்படும் வாகன நெரிசில் நீண்ட நேரத்திற்கு நீடிக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேநேரத்தில், வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கும் சாலையில் ரிவர்ஸ் எடுப்பதைக் காட்டிலும், காலியாக இருக்கும் பார்க்கிங் பகுதியில் வாகனத்தை ரிவர்ஸ் எடுத்து நிறுத்துவது மிகுந்த பாதுகாப்பானது மற்றும் சுலபமானதும்கூட.

இந்த வதந்திகளை எல்லாம் நம்பாதீங்க!.. காரை ரிவர்ஸ் எடுத்து நிறுத்துவதனால் நன்மைகள் மட்டும்தான் கிடைக்கும்!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில், பார்க்கிங்கை விட்டு வெளியேறும்போது, குறிப்பாக, வாகனத்தை ரிவர்ஸ் எடுத்த வண்ணம் வரும்போது, விபத்து போன்ற சில கசப்பான அனுபவங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதனைத் தவிர்க்கவே ரிவர்ஸ் பார்க்கிங் உதவுகின்றது.

இந்த வதந்திகளை எல்லாம் நம்பாதீங்க!.. காரை ரிவர்ஸ் எடுத்து நிறுத்துவதனால் நன்மைகள் மட்டும்தான் கிடைக்கும்!

வதந்தி எண்: 3

ரிவர்ஸ் பார்க்கிங் பாதுகாப்பற்றது:

வாகன ஓட்டிகள் பலர் ரிவர்ஸ் பார்க்கிங் பாதுகாப்பற்றதாக உணர்கின்றனர். ரிவர்ஸில் வாகனத்தை நிறுத்த செல்லும்போது பாதசாரிகள் அல்லது பிற வாகனங்கள் மீது மோத நேரிடலாம் என நினைக்கின்றனர். ஆனால், இதுதான் இல்லை. ரிவர்ஸ் பார்க்கிங் பாதுகாப்பானது. ஏனெனில், ஏற்கனவே கூறியதைபோல் ஓட்டுநர் போக்குவரத்து இல்லாத நன்கு தெரியக்கூடிய இடத்திற்குள் நுழைவதற்காகவே ரிவர்ஸ் எடுக்கின்றார். தெளிவான பார்வை கிடைக்கும் என்பதால் சற்று கவனத்துடன் வந்தாலே போதும். மோதல் உள்ளிட்டவற்றை தவிர்க்க முடியும்.

இந்த வதந்திகளை எல்லாம் நம்பாதீங்க!.. காரை ரிவர்ஸ் எடுத்து நிறுத்துவதனால் நன்மைகள் மட்டும்தான் கிடைக்கும்!

மேலும், பார்க்கிங்கை விட்டு வெளியேறும்போது சுற்றுப்புறத்தை சரியாக பார்க்க முடியும். குறிப்பாக டிராஃபிக்கை சரியாக எதிர்கொள்ள முடியும். இவை அனைத்தும் ஃபார்வார்டு பார்க்கிங்கில் சிதைக்கப்படுகின்றன. பார்க் செய்வது மட்டுமே இதில் சுலபம். ஆனால், பார்க்கிங்கை விட்டு வெளியேறும்போது அதிகம் கவனம் தேவைப்படும்.

இந்த வதந்திகளை எல்லாம் நம்பாதீங்க!.. காரை ரிவர்ஸ் எடுத்து நிறுத்துவதனால் நன்மைகள் மட்டும்தான் கிடைக்கும்!

குறிப்பாக, பக்கவாட்டில் நிறுத்தப்பட்டிருக்கும் பிற வாகனங்களால் சாலை தெரிவது சிரமமாகிவிடும். இந்த மாதிரியான சூழலில் வாகனத்தை வெளியில் எடுப்பதே அதிக ஆபத்தை விளைவிக்கும். ஆகையால், ரிவர்ஸ் பார்க்கிங் பாதுகாப்பற்றது என்று கூறுபவர்களிடம் அது வதந்தி என்பதை தெளிவாகக் கூறுங்கள்.

இந்த வதந்திகளை எல்லாம் நம்பாதீங்க!.. காரை ரிவர்ஸ் எடுத்து நிறுத்துவதனால் நன்மைகள் மட்டும்தான் கிடைக்கும்!

இதுபோன்று இன்னும் பல்வேறு நன்மைகள் ரிவர்ஸ் பார்க்கிங்கில் உள்ளன. கார் ரிவர்ஸ் சிஸ்டம் அதிக எரிபொருளை உறிஞ்சக் கூடியதாக இருக்கின்றது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் காரின் ரிவர்ஸ் சிஸ்டத்திற்கு எஞ்ஜின் சற்று சூடாகியிருக்க வேண்டும். ஆகையால், நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எஞ்ஜினை எடுத்த உடன் ரிவர்ஸில் இயங்கச் செய்யும்போது, எஞ்ஜினை சூடாக்க அதிக எரிபொருள் தானாக பயன்படுத்தப்படுகின்றது.

இந்த வதந்திகளை எல்லாம் நம்பாதீங்க!.. காரை ரிவர்ஸ் எடுத்து நிறுத்துவதனால் நன்மைகள் மட்டும்தான் கிடைக்கும்!

இதனைத் தவிர்க்க காரை முன்னதாகவே நாம் ரிவர்ஸ் எடுத்து நிறுத்துவிட வேண்டும். இதன் வாயிலாக கணிசமான அளவு எரிபொருள் சிக்கனம் செய்யப்படும். மேலும், போதுமான அளவு சாலைமீது கவனத்தை செலுத்தவும் முடியும். இதன் வாயிலாக பெரும்பாலான கசப்பான அனுபவங்கள் தவிர்க்கப்படும்.

இந்த வதந்திகளை எல்லாம் நம்பாதீங்க!.. காரை ரிவர்ஸ் எடுத்து நிறுத்துவதனால் நன்மைகள் மட்டும்தான் கிடைக்கும்!

பார்க்கிங்கை விட்டு ரிவர்ஸில் வெளியேறும் வாகனங்களினாலேயே பெரும்பாலான விபத்துகள் ஏற்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், காரை நிறுத்தும் முன்பே ரிவர்ஸ் எடுத்து நிறுத்துவதனால் தேவையற்ற இக்கட்டான சூழள்களை நம்மால் தவிர்க்க முடியும்.

Article Published On: Tuesday, September 20, 2022, 15:04 [IST]
English summary
There are only advantages to taking the car in reverse parking
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+