இந்த ஆண்டுதான் கடைசி.. 2022 இல் இந்தியாவில் இருந்து மூட்டையை கட்டி நம்மை கலங்கடித்த கார் மாடல்கள்!
ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தும் வகையில் சில கார் மாடல்கள் நடப்பு 2022 ஆம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டன. போலோ தொடங்கி சேன்ட்ரோ வரையில் பல முன்னணி கார் மாடல்கள் நடப்பாண்டிலேயே விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்டன.
இந்தியாவில் விற்பனையில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்த கார் மாடல்கள் சில இப்போது இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயிருக்கின்றன. அதாவது, விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளன. இதன் விளைவாக அந்த கார் மாடல்களால் 2023-ஐ பார்க்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. இந்த துரதரிஷ்டவசமான கார் மாடல்கள் எவை என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். லிஸ்டில் ஐந்து கார்கள் இடம் பெற்றிருக்கின்றன. வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஹூண்டாய் சேன்ட்ரோ (Hyundai Santro):
ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களில் ஒன்றாக சேன்ட்ரோ இருக்கின்றது. இந்த கார் மாடலின் இரண்டாம் தலைமுறை வெர்ஷனையே ஹூண்டாய் சந்தையில் இருந்து அண்மையில் வெளியேற்றியது. இதன் விளைவாக இந்த ஹேட்ச்பேக் கார் விற்பனைக்குக் கிடைக்காத சூழல் உருவாகி உள்ளது. விற்பனைக்கு வந்த புதிதில் சேல்ஸிஸ் இந்த கார் மாஸ் காட்டியது. ஆனால், இந்த நிலை இந்த ஆண்டில் நீடிக்கவில்லை. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால் மக்கள் மத்தியில் போதியளவு சேன்ட்ரோவிற்கு வரவேற்புக் கிடைக்கவில்லை. இதுவே அந்த கார் சந்தையை வெளியேற்றப்படுவதற்கான முக்கிய காரணமாக உள்ளது.
இந்திய ஹேட்ச்பேக் கார் சந்தையில் போட்டி அதிகரித்துக் காணப்படுகின்றது. இதுவும் இந்த கார் சந்தையை விட்டு வெளியேறுவதற்காக முக்கிய காரணமாக உள்ளது. ஆமாங்க, விலையில் சேன்ட்ரோவைக் காட்டிலும் குறைவான கார்கள் பல சந்தையில் கிடைக்கத் தொடங்கி உள்ளன. இதன் விளைவாகவே சேன்ட்ரோவிற்குக் கிடைத்து வந்த விற்பனை மிகக் கடுமையாக சரிந்தது. தற்போது, அவ்வாகனம் விற்பனையில் இருந்தும் அகற்றப்பட்டுள்ளது. இந்த கார் மாடல் இருந்த இடத்திலேயே தற்போது கிராண்ட் ஐ10 நியாஸ் முன்னிறுத்தப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 5.43 லட்சம் ஆகும்.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் (Toyota Urban Cruiser):
மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரபல கார் மாடல்களில் ஒன்றாக விட்டாரா ப்ரெஸ்ஸா இருக்கின்றது. இந்த காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனே டொயோட்டாவின் அர்பன் க்ரூஸர் மாடல் ஆகும். விட்டாரா பிரெஸ்ஸாவைக் காட்டிலும் சற்று அதிக விலைக் கொண்டதாக அர்பன் க்ரூஸர் கிடைத்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரையே சந்தையில் இருந்து டொயோட்டா நிறுவனம் அகற்றியது. மாதத்திற்கு 2 ஆயிரத்திற்கும் குறைவான யூனிட்டுகளே இந்த கார் மாடல் விற்பனையாகி வந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இநத் குறைவான விற்பனை எண்ணிக்கையே கார் வெளியேற்றப்படுவதற்கான முக்கிய காரணமாக உள்ளது.
மாருதி சுஸுகி எஸ்-கிராஸ் (Maruti Suzuki S-Cross):
இந்தியாவில் அதிகம் விற்பனையாகிக் கொண்டிருந்த மாருதி சுஸுகி கார் மாடல்களில் எஸ்-கிராஸும் ஒன்று. இது ஓர் சி பிரிவு எஸ்யூவி ரக காராகும். பிரீமியம் அம்சங்கள் நிறைந்த வாகனமாக இது இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. தொடர் போட்டியின் காரணமாக இந்த காருக்கு கிடைத்து வந்த வரவேற்புக் குறையத் தொடங்கியது. மேலும், புதிய தயாரிப்புகளின்மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிற காரணத்திற்காக இந்த கார் மாடலை சந்தையில் இருந்து மாருதி சுஸுகி வெளியேற்றியது.
தற்போது நிறுவனத்தின் கிராண்ட் விட்டாராவிற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எஸ்-கிராஸை ரீ-பிளேஸ் செய்யும் விதமாக நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் கார் மாடலே இது ஆகும். இதை மாருதி சுஸுகி களமிறக்கியதன் வாயிலாக நல்ல பலனை அனுபவித்து வருகின்றது. ஆமாங்க, நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக கிராண்ட் விட்டாரா மாறியிருக்கின்றது. ஒவ்வொரு மாதமும் விற்பனையில் புதிய உச்சத்தை இந்த கார் எட்டி வருவது குறிப்பிடத்தகுந்தது.
ரெனால்ட் டஸ்டர் (Renault Duster):
இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் விற்பனைக்கு வழங்கி வந்த மிக முக்கியமான தயாரிப்புகளில் டஸ்டரும் ஒன்று. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த கார் மாடல் இப்போது இந்திய சந்தையில் விற்பனையில் இல்லை. இதனை இந்த ஆண்டின் மத்தியிலேயே ரெனால்ட் விற்பனையில் இருந்து வெளியேற்றியது. இந்த காரை முதல் முறையாக நிறுவனம் 2012 ஆம் ஆண்டிலேயே இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட புதிதில் நல்ல வரவேற்பை இந்தியர்கள் இடத்தில் பெற்றது.
ஆனால், சில காலங்கள் மட்டுமே இந்த வரவேற்பு நீடித்தது. இது குறைய தொடங்கியதன் விளைவாகவே தற்போது டஸ்டர் விற்பனையில் இல்லாத நிலை உருவாகி உள்ளது. இதற்கு வரவேற்பு குறைய மிக முக்கிய காரணமே, அக்காரை அவ்வப்போது சந்தைக்கு ஏற்றவாறு அப்டேட் செய்யாததே முக்கிய காரணமாக உள்ளது. ஆமாங்க, இந்த காரின் பக்கம் மக்களை கவரும் விதமாக பெரியளவில் எந்தவொரு மாற்றத்தையும் டஸ்டரில் செய்ய தவறியதே இந்த காரை ரெனால்ட் இழக்க காரணமாக உள்ளது. அதேவேளையில் காலம் தாழ்த்தி சில அப்டேட்டுகளை இந்த கார் மாடலில் ரெனால்ட் வழங்கியது. ஆனால், அது பெரியளவில் அதற்கு கை கொடுக்கவில்லை.
ஃபோக்ஸ்வேகன் போலோ (Volkswagen Polo):
இளைஞர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பலரும் விரும்பும் பிரபலமான கார் மாடலாக போலோ இருந்தது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த கார் மாடலுக்கு என இந்தியாவில் தனி ரசிக பட்டாளம் உண்டு. இந்த மாதிரியான சூழலிலேயே போலோவே சந்தையில் இருந்து அகற்றுவதாக கடந்த ஆகஸ்டு மாதத்தில் அதிர்ச்சிகரமான தகவலை ஃபோக்ஸ்வேகன் வெளியிட்டது. இந்த கார் மாடலுக்கு ரசிகர்கள் ஏராளமாக இருந்தாலும், பலர் இப்போதும் இந்த காரை தயாராக உள்ளனர். ஆனால், இதைவிட அதிக மூவிங்கில் இருக்கும் கார் மாடல்கள் மீது கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பதற்காக இக்காரை சந்தையை விட்டு ஃபோக்ஸ்வேகன் வெளியேற்றியது.
2010ஆம் ஆண்டிலேயே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் போலோ காரை முதல் முறையாக நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஃபோக்ஸ்வேகன் போலோ இந்தியாவில் 1.2 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மோட்டார், 1.0 லிட்டர் 75 பிஎஸ் எம்பிஐ மோட்டார் மற்றும் 1.0 லிட்டர் 110 பிஎஸ் டிஎஸ்ஐ டர்போசார்ஜட் பெட்ரோல் மோட்டார் என பல விதமான மோட்டார் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்து வந்தது. மேனுவல் மற்றும் தானியங்கி கியர் பாக்ஸ் தேர்வுகளும் இந்த காரில் வழங்கப்பட்டன. இத்தகைய சூப்பரான காரையே நிறுவனம் சந்தையில் இருந்து வெளியேற்றியது.


Click it and Unblock the Notifications








