காரின் பேட்டரி இறுதி அஞ்சலிக்கு தயாராகிவிட்டது என்பதற்கான அறிகுறிகள்... அட இத்தன இருக்கா! இது தெரியாம போச்சே!

காரின் பேட்டரி இறுதி அஞ்சலிக்கு தயாராகிவிட்டது என்பதற்கான அறிகுறிகளை இந்த பதிவில் வழங்கியுள்ளோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைக் கீழே காணலாம்.

உங்க காருல இந்த பிரச்னை எல்லாம் ஃபேஸ் பண்றீங்களா?.. அப்போ பேட்டரி போய்ருச்சுனு அர்த்தம்... உடனே மாத்தனுங்க!

கார்களின் இயக்கத்திற்கு தேவைப்படும் மிக முக்கியமான அம்சங்களில் பேட்டரியும் ஒன்று. இது காருக்குள் இருக்கும் எலெக்ட்ரானிக் பொருட்களை இயங்க செய்தல் மற்றும் காரை ஸ்டார்ட் செய்தல் போன்ற அத்தியாவசிய பணிகளை மேற்கொள்கின்றது. இந்த மாதிரியான ஓர் அம்சம் பழுதாகிவிட்டது என்றால் காரின் பாதி வேலை முடங்கிவிட்டது என்றே நினைத்துக் கொள்ளலாம்.

உங்க காருல இந்த பிரச்னை எல்லாம் ஃபேஸ் பண்றீங்களா?.. அப்போ பேட்டரி போய்ருச்சுனு அர்த்தம்... உடனே மாத்தனுங்க!

மிக முக்கியமாக காரை ஸ்டார்ட் செய்வது என்பது பெரும் சிரமமான ஓர் செயலாகி மாறிவிடும். இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும். எனவேதான், பேட்டரி விஷயத்தில் அதிகம் கவனம் தேவை என கூறப்படுகின்றது. அதேநேரத்தில் வீக்காக இருக்கிறது அல்லது விரைவில் முழுமையாக செயலற்று போக இருக்கின்றது என்பதனை குறிப்பிட்ட சில சமிக்ஞைகளின் வாயிலாக பேட்டரிகள் நமக்கு அறிவுறுத்துகின்றன.

உங்க காருல இந்த பிரச்னை எல்லாம் ஃபேஸ் பண்றீங்களா?.. அப்போ பேட்டரி போய்ருச்சுனு அர்த்தம்... உடனே மாத்தனுங்க!

அதை கவனிக்கத் தவறுவதனாலேயே நாம் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்க நேரிடுகின்றது. அவை என்னென்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, பேட்டரி மிக மோசமான நிலையில் இருக்கின்றது என்பதை வெளிக்காட்டக் கூடிய சமிக்ஞைகள் பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

உங்க காருல இந்த பிரச்னை எல்லாம் ஃபேஸ் பண்றீங்களா?.. அப்போ பேட்டரி போய்ருச்சுனு அர்த்தம்... உடனே மாத்தனுங்க!

கார் ஸ்டார்ட் செய்வதில் சிக்கல்

கார் பேட்டரி செயலற்று போகிறது என்பதற்கான மிக முக்கியமான அறிகுறியே இது. பேட்டரியில் போதியளவில் மின்சாரம் இல்லை என்றாலும் இந்த பிரச்னை ஏற்படும். ஆனால், அடிக்கடி இப்பிரச்னை ஏற்படுகிறது என்றால் அதற்கு நிச்சயம் பேட்டரி செயலற்று போகின்றது என்பதே அர்த்தம் ஆகும்.

உங்க காருல இந்த பிரச்னை எல்லாம் ஃபேஸ் பண்றீங்களா?.. அப்போ பேட்டரி போய்ருச்சுனு அர்த்தம்... உடனே மாத்தனுங்க!

கார் பேட்டரி நல்ல நிலையில் இருந்தும், அதில் சார்ஜ் இல்லாத நிலை தென்பட்டால், போதியளவில் வாகனம் பயன்பாட்டில் இல்லை என்பதே பொருள். ஆம், வெகு நாட்களாக கார் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்படுமானால் இந்த சிக்கல் ஏற்படும். இந்த மாதிரியான சூழ்நிலையில் காரை ஜம்ப் ஸ்டார்ட் செய்வதன் மூலம் பேட்டரியில் சார்ஜை மீட்டெடுக்க முடியும்.

உங்க காருல இந்த பிரச்னை எல்லாம் ஃபேஸ் பண்றீங்களா?.. அப்போ பேட்டரி போய்ருச்சுனு அர்த்தம்... உடனே மாத்தனுங்க!

ஜம்ப் ஸ்டார்ட் அடிக்கடை தேவைப்படுகிறதா?

ஜம்ப் ஸ்டார்ட் அடிக்கடி தேவைப்படுகின்றது என்றால் பேட்டரி போய்விட்டது என்று அர்த்தம். அதாவது காலாவதி ஆகிவிட்டது அல்லது மிக விரைவில் இறந்துபோக இருக்கின்றது என்று பொருள். எனவேதான் அதில் மின்சாரம் தங்குவதில்லை. இதன் விளைவாக அடிக்கடி ஜம்ப் ஸ்டார்ட் தேவைப்படுகின்றது. சில நேரங்களில் பேட்டரி சார்ஜாவதில் சிக்கல் ஏற்படுவதனாலும் இந்த சூழ்நிலை ஏற்படும். ஆகையால், ஒரு முறை சார்ஜ் ஒயர் கனெக்ஷனை சரி பார்த்துக் கொள்ளவும்.

உங்க காருல இந்த பிரச்னை எல்லாம் ஃபேஸ் பண்றீங்களா?.. அப்போ பேட்டரி போய்ருச்சுனு அர்த்தம்... உடனே மாத்தனுங்க!

பேட்டரி சிதைவு

பேட்டரி வீங்கியோ அல்லது துருப்பிடித்தோ இருந்தால் அதை உடனடியாக சரி செய்வது நல்லது. முடியும் எனில் அதை மாற்றிவிடுவது மிக சிறந்தது. ஏனெனில், துருப்பிடித்தல் மற்றும் வீங்குதல் இரண்டும் மிக மோசமான நிலையில் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும். மேலும், இவை ஆபத்தானதும் கூட. ஆகையால், இந்த அவசர நிலையை உணர்ந்து அதை மாற்றிவிடுவது ஆபத்தை போக்க உதவும்.

உங்க காருல இந்த பிரச்னை எல்லாம் ஃபேஸ் பண்றீங்களா?.. அப்போ பேட்டரி போய்ருச்சுனு அர்த்தம்... உடனே மாத்தனுங்க!

பழைய பேட்டரி

பேட்டரி பழையதாக இருப்பின் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். ஆகையால், உங்கள் வாகனத்தில் உள்ள பேட்டரி பழையதாக இருந்தால் அதை மாற்றிவிடுவது நல்லது. அது அதிகளவில் தலை வலியை ஏற்படுத்தும் முன்பே செய்வதனால் பிரச்னைகளுக்கு முற்று புள்ளி வைக்க முடியும். ஏனெனில், அது எப்போது சிக்கலை ஏற்படுத்தும் என்பதே தெரியது. திடீரென ஸ்டார்ட் செய்வதில் சிக்கலை ஏற்படுத்திவிடலாம்.

உங்க காருல இந்த பிரச்னை எல்லாம் ஃபேஸ் பண்றீங்களா?.. அப்போ பேட்டரி போய்ருச்சுனு அர்த்தம்... உடனே மாத்தனுங்க!

போக்குவரத்து நெரிசல் அல்லது நீண்ட தூர பயணங்களின்போது அது காலை வாரிவிடும் எனில் அந்த நேரத்தில் எதையும் செய்ய முடியாது. ஆகையால், உங்கள் காரில் உள்ள பேட்டரி மிக பழையதாக தென்பட்டால், அது புதியதாக மாற்றப்படுவதற்கான நேரமாக கருதி அதனை மாற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள்.

உங்க காருல இந்த பிரச்னை எல்லாம் ஃபேஸ் பண்றீங்களா?.. அப்போ பேட்டரி போய்ருச்சுனு அர்த்தம்... உடனே மாத்தனுங்க!

எலெக்ட்ரிக்கல் பிரச்னை

மேலே பார்த்தது தாங்க, ஆனால், கொஞ்சம் வித்தியாசமானது. பேட்டரியில் சார்ஜ் இருக்கும், சார்ஜ் ஏறுவதிலும் சிக்கல் இருக்காது. ஆனால், ஸ்டார்ட் செய்வது மட்டும் சிரமமானதாக இருக்கும். இப்படி ஒரு பிரச்னையை சந்திக்கின்றீர்கள் என்றால், காரை ஸ்டார்ட் செய்வதற்கான ஒயர் சரியான இணைப்பில் இல்லை என்பதே அர்த்தம். எலி கடித்தல் அல்லது பழையதாகிவிட்ட காரணத்தினால் அது சரியாக வேலை செய்யாமல் போவதற்கான வாய்ப்புகள் உண்டு. எனவே ஒயரிங்கில் ஏதாவது பிரச்னை இருக்கின்றதா என ஆராய்வது நல்லது. இந்த நிலையில் பேட்டரியை மாற்ற வேண்டும் என்பதற்கான அவசியம் இருக்காது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 9, 2022, 16:56 [IST]
English summary
These signs telling to us its time for new car battery
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+