7 பேர் ஜம்முனு போகலாம்! 27 கிமீ மைலேஜ்! விலை ரொம்ப கம்மி! இப்படி ஒரு வண்டிக்காகதான் இவ்ளோ நாளா வெயிட்டிங்!
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 2022 மாருதி சுஸுகி ஈக்கோ வேன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.
இந்திய சந்தையில் 2022 மாருதி சுஸுகி ஈக்கோ (2022 Maruti Suzuki Eeco) தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை வெறும் 5.10 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

5 சீட்டர், 7 சீட்டர், கார்கோ, டூர் மற்றும் ஆம்புலன்ஸ் உள்பட மொத்தம் 13 வேரியண்ட்களில் இந்த வேன் விற்பனைக்கு கிடைக்கும். அத்துடன் பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) வெர்ஷன்களில் மாருதி சுஸுகி ஈக்கோ விற்பனை செய்யப்படுகிறது. இந்த வேனில், புதிய 1.2 லிட்டர், கே-சீரிஸ் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 80 பிஹெச்பி பவரையும், 104.4 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.
முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது பவர் அவுட்புட் 10 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அதே நேரத்தில் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 71 பிஹெச்பி பவரையும் மற்றும் 95 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். மாருதி சுஸுகி நிறுவனத்தின் தயாரிப்புகள் சிறப்பான மைலேஜிற்கு பெயர் பெற்றவை. மாருதி சுஸுகி ஈக்கோ வேனும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
மாருதி சுஸுகி ஈக்கோ வேனின் பெட்ரோல் வெர்ஷன் ஒரு லிட்டருக்கு 20.20 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது 25 சதவீதம் அதிகம் ஆகும். அதே நேரத்தில் சிஎன்ஜி வெர்ஷன் ஒரு கிலோவிற்கு 27.05 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது 29 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
பரிமாணங்களை பொறுத்தவரையில், மாருதி சுஸுகி ஈக்கோ வேனின் நீளம் 3,675 மிமீ ஆகவும், அகலம் 1,475 மிமீ ஆகவும், உயரம் 1,825 மிமீ ஆகவும் (ஆம்புலன்ஸின் உயரம் 1,930 மிமீ) மற்றும் வீல் பேஸ் நீளம் 2,350 மிமீ ஆகவும் உள்ளது. இன்டீரியரை பொறுத்தமட்டில், புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஏர் ப்யூரிஃபையர் மற்றும் புதிய ஸ்டியரிங் வீல் ஆகியவற்றை மாருதி சுஸுகி ஈக்கோ பெற்றுள்ளது.
பாதுகாப்பை பொறுத்தவரையில், ட்யூயல் ஏர்பேக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் இபிடி உடன் ஏபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மாருதி சுஸுகி ஈக்கோ வேனில் வழங்கப்பட்டுள்ளன. எனவே இது நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தேர்வாக இருக்கும். நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்தே மாருதி சுஸுகி நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட பல்வேறு புதிய மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது.

அத்துடன் மாருதி சுஸுகி நிறுவனத்திடம் இருந்து பல்வேறு சிஎன்ஜி கார்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் அடுத்தபடியாக பிரெஸ்ஸா காரின் சிஎன்ஜி வெர்ஷனை மாருதி சுஸுகி நிறுவனம் (Maruti Suzuki Brezza CNG) விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பாண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது அடுத்த 2023ம் ஆண்டின் தொடக்கத்திலோ மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாக உள்ள மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவின் சிஎன்ஜி வெர்ஷன் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு போட்டியாக டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் நெக்ஸான் காரின் சிஎன்ஜி (Tata Nexon CNG) வெர்ஷனை இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








