புடுச்ச கலர வாங்குறேன்னு உசுர விட்டுறாதீங்க! கார் கலர தேர்வு பண்ணுறதுல இவ்வளவு விஷயம் இருக்குதா?

புதிதாக கார் வாங்கும் போது எந்த நிறத்தில் காரை வாங்க வேண்டும் என நீங்கள் எப்படித் தேர்வு செய்வீர்கள்? உங்களுக்குப் பிடித்த நிறத்தை வாங்குவீர்கள் என்பது தான் உங்கள் பதில் என்றால் அந்த தேர்வு உங்கள் பணத்தை காலியாக்குவதை மட்டுமல்லாமல் உங்கள் உயிரையே பறிக்கும் ஆபத்தைக் கொண்டது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

நம்மில் பலர் கார் வாங்குவதைக் கனவாக வைத்திருப்போம். இந்த காரை வாங்க வேண்டும், இந்த வேரியன்டில் வாங்க வேண்டும், இந்தந்த வசதிகள் எல்லாம் அந்த காரில் இருக்க வேண்டும் என நாம் பல தேவைகளை வைத்திருப்போம். கலர் என்று வரும் போது மட்டும் நாம் நமக்குப் பிடித்த கலரில் தான் காரை வாங்க வேண்டும் என யோசிப்போம். சிலர் காருக்கு எந்த கலர் லுக்காக இருக்கும் என்பதைப் பார்த்து வாங்குவார்கள். ஆனால் கார் கலரில் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது.

கார் கலரை தேர்வு செய்யும் பலர் டார்க் நிறத்தில் காரை தேர்வு செய்வார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், அந்த நிற கார்கள் தூசு படிந்தாலும் பெரிய அளவில் வெளியில் தெரியாது. இதனால் பராமரிப்பு செய்வது சுலபம் என்று எல்லாம் யோசிப்பார்கள். ஆனால் தவறான காரின் தேர்வு உங்கள் பணத்தை காலியாக்குவதுடன் உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

வெப்பத்தைக் குறைக்கும்

பொதுவாக டார்க் நிறங்கள் வெப்பத்தை தன் வசம் ஈர்க்கும், லைட் நிறங்கள் வெப்பத்தை ஈர்க்காது என்பது மட்டும் நமக்கு நன்றாகத் தெரியும். அதே தான் காருக்கும், காரில் டார்க் நிற கார்கள் எளிதாகச் சூடாகிவிடும். லைட் நிற கார்கள் அதைவிட அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் டார்க் நிற கார்களையும், வெப்பம் அதிகமான இடத்தில் வசிப்பவர்கள் லைட் நிற காரையும் தேர்வு செய்வது நல்லது. டார்க் நிற காரை தேர்வு செய்து வெப்பம் அதிகமானால் உயிருக்கே ஆபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது.

பாதுகாப்பு

லைட் நிறங்களான வெள்ளை, மஞ்சள் போன்ற நிறங்களில் கார்கள் இருந்தால் தூரமாக கார் வரும்போதே எதிரில் உள்ளவர்களுக்கு கார் வருது தெளிவாகத் தெரிந்துவிடும். இதுவே கருப்பு நிற காராக இருந்தால் அப்படியில்ல இரவு நேரத்தில் கருப்பு நிற கார் இருட்டான பகுதியில் செல்லும் போது தெரியாமல் போக கூட வாய்ப்பு இருக்கிறது. இதனால் கருப்பு நிற கார்கள் அதிகம் விபத்தில் சிக்கும் அபாயம் இருக்கிறது. இதுவே லைட் நிற கார்கள் என்றால் விபத்தில் சிக்கும் அபாயம் குறைவு

பணம் சேமிப்பு

நாம் முன்னரே பார்த்த படி டார்க் நிற கார்கள் அதிக வெப்பத்தை ஈர்க்கும் இதனால் காரின் உள்ளே வெப்பம் அதிகமாகும். இதனால் டார்க் நிற கார்களில் ஏசி பயன்பாடு அதிகமாக இருக்கும், பெரும்பாலும் ஏசி ஓடிக்கொண்டே இருக்க வேண்டியது இருக்கும். இதனால் மைலேஜ் பாதிக்கும். இதுவே லைட் நிற கார்கள் என்றால் அதிகம் வெப்பத்தை ஏசி பயன்பாடு குறைவாக இருக்கும். இதனால் காரின் மைலேஜ் அதிகமாக இருக்கும். இதன் சேமிப்பு குறைவாக இருந்தாலும் தினமும் சிறுக சிறுக நடக்கும் சேமிப்பைக் கணக்கிட்டால் ஒரு ஆண்டிற்கு ஆயிரக்கணக்கான ரூபாயை வெறும் காரின் நிறத்திற்காகவே இழந்திருப்போம்.

அதிக டிமாண்ட்

இந்தியவாில் லைட் நிற கார்களுக்கே அதிகமாக டிமாண்ட் இருக்கிறது. பிஏஎஸ்எஃப் கடந்த 2021ம் ஆண்டு நடத்திய ஒரு ஆய்வில் இந்தியாவில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தயாரிக்கும் கார்களில் வெள்ளை நிற கார்களே அதிகம் இருக்கின்றன. மொத்தம் விற்பனையாகியுள்ள கார்களில் 10ல் 4 கார்கள் வெள்ளை நிற கார்களாக தான் இருக்கிறது. அதன் பின் தான் சில்வர், க்ரே, கருப்பு, நீலம் என நிறங்கள் வருகிறது. காரை பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான மார்கெட்டில் நீங்கள் விற்க முயன்றால் காரின் நிறத்தைப் பொருத்தும் அதன் விலை மாறுபடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, December 19, 2022, 18:46 [IST]
English summary
Think about these before choosing your car color
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+