பல லட்ச ரூபாயை வாரி இறைத்தது இதற்காகதானா? அடுத்தடுத்து தலை வலி கொடுக்கும் மாடிஃபிகேஷன்! மனுஷன் நொந்துட்டாரு!

வாகனத்தை மாடிஃபை செய்தால் அது கவர்ச்சியானதாக மாறும். ஆனால், என்ன மாதிரியான பிரச்னைகள் பின்னாளில் வரும் என உங்களுக்கு தெரியுமா?, வெறும் போலீஸ்காரர்களால் மட்டுமில்லைங்க நாம எதிர்பார்க்காத பிரச்னைகளும் வரும். இதற்கு உதாரணமாக அரங்கேறியிருக்கும் நிகழ்வு பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

லட்ச கணக்கான ரூபாயை வாரி இறைப்பதற்கு இதற்குதானா?.. மாடிஃபிகேஷனுக்கு பின்னால் இப்படியும் சிக்கல்கள் ஏற்படுமா?

இந்தியர்கள் மத்தியில் கார் மாடிஃபிகேஷன் செயல் முன்பைக் காட்டிலும் இப்போது பல மடங்கு அதிகமாக பிரபலமடைந்துக் காணப்படுகின்றது. இதன் விளைவாக பல வாகனங்கள் தங்களின் உண்மையான தோற்றத்தை இழந்து புதிய மற்றும் தனித்துவமான தோற்றத்தில் காட்சியளிக்கும் நிலை உருவாகியுள்ளது.

லட்ச கணக்கான ரூபாயை வாரி இறைப்பதற்கு இதற்குதானா?.. மாடிஃபிகேஷனுக்கு பின்னால் இப்படியும் சிக்கல்கள் ஏற்படுமா?

இதுபோன்ற, காரணங்களுக்காகவே பலர் தங்களின் வாகனங்களை மாடிஃபை செய்கின்றனர். அதாவது, சாலையில் தங்களுடைய வாகனம் செல்லும்போது தனியாக தெரிய வேண்டும் மற்றும் பிறரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக லட்சங்களை வாரி இறைத்து மாடிஃபை செய்கின்றனர்.

லட்ச கணக்கான ரூபாயை வாரி இறைப்பதற்கு இதற்குதானா?.. மாடிஃபிகேஷனுக்கு பின்னால் இப்படியும் சிக்கல்கள் ஏற்படுமா?

இவை அப்போதைக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் அமையலாம். ஆனால், வெகு விரைவிலேயே எண்ணற்ற சிக்கல்களை வாகன மாடிஃபிகேஷன் வழங்க நேரிடலாம். இதை உறுதிப்படுத்தும் வகையில் அரங்கேறியிருக்கும் ஓர் நிகழ்வு குறித்த தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

லட்ச கணக்கான ரூபாயை வாரி இறைப்பதற்கு இதற்குதானா?.. மாடிஃபிகேஷனுக்கு பின்னால் இப்படியும் சிக்கல்கள் ஏற்படுமா?

வெள்ளை நிறத்தில் பன்மடங்கு அதிக மாடிஃபிகேஷனுடன் காட்சியளிக்கும் இந்த தார் எஸ்யூவி காரின் உரிமையாளரே மாடிஃபிகேஷனுக்கு பின்னர் எக்கசக்க இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றார். மாடிஃபிகேஷனுக்காக தார் காரின் உரிமையாளர் பல லட்சங்களை வாரி இறைத்திருக்கின்றார்.

லட்ச கணக்கான ரூபாயை வாரி இறைப்பதற்கு இதற்குதானா?.. மாடிஃபிகேஷனுக்கு பின்னால் இப்படியும் சிக்கல்கள் ஏற்படுமா?

சுமார் ரூ. 12 லட்சம் வரை இதற்காக அவர் செலவு செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது. காரின் நிறம், இருக்கை கவர், தொழில்நுட்ப அம்சங்கள் என பலவற்றை அவர் மாற்றியிருக்கின்றார். இதுபோன்ற மாற்றத்தினாலயே அவர் தற்போது பல பிரச்னைகளைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றார்.

லட்ச கணக்கான ரூபாயை வாரி இறைப்பதற்கு இதற்குதானா?.. மாடிஃபிகேஷனுக்கு பின்னால் இப்படியும் சிக்கல்கள் ஏற்படுமா?

வாகனத்தில் துரு பிடித்தல் போன்ற பிரச்னைகளைக்கூட அவர் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றார். இதுமட்டுமின்றி, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஒட்டும் தன்மை மற்றும் காருக்குள் ஒட்டப்பட்டுள்ள துணிகள் பிரிந்து வருதல் போன்ற சிக்கல்களையும் அவர் சந்தித்து வருகின்றார்.

லட்ச கணக்கான ரூபாயை வாரி இறைப்பதற்கு இதற்குதானா?.. மாடிஃபிகேஷனுக்கு பின்னால் இப்படியும் சிக்கல்கள் ஏற்படுமா?

இதுபோன்று இன்னும் என்னென்ன பிரச்னைகளை எல்லாம் அவர் சந்தித்திருக்கின்றார் என்பது பற்றிய தகவலை ஓர் வீடியோ வாயிலாக அவர் வெளியிட்டிருக்கின்றார். வீடியோவில், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்கூட வேலை செய்யாமல் செயலற்றுக் இருப்பதை நம்மால் காண முடிகின்றது.

லட்ச கணக்கான ரூபாயை வாரி இறைப்பதற்கு இதற்குதானா?.. மாடிஃபிகேஷனுக்கு பின்னால் இப்படியும் சிக்கல்கள் ஏற்படுமா?

தொடர்ந்து, ஹாரன் அடிக்க மிக அதிக அழுத்தத்துடன் அழுத்த வேண்டும் என்ற சிக்கல் காரில் உருவாகியிருப்பதும் தெளிவாகத் தெரிகின்றது. இவற்றைக் காட்டிலும் மிக முக்கியமான பிரச்னையாக, காரில் உள்ள தானியங்கி டிரான்ஸ்மிஷன் செயலற்று போகியிருக்கின்றது. இதை சரிசெய்வதற்காக சர்வீஸ் மையம் சென்றபோதே கியர்பாக்ஸில் சிறிய ஸ்க்ரூ சிக்கியிருப்பது தெரிய வந்தது.

லட்ச கணக்கான ரூபாயை வாரி இறைப்பதற்கு இதற்குதானா?.. மாடிஃபிகேஷனுக்கு பின்னால் இப்படியும் சிக்கல்கள் ஏற்படுமா?

இந்த பிரச்னையால் கூடுதலாக ரூ. 13 ஆயிரம் அவருக்கு செலவாகியிருக்கின்றது. ஆனால், இதற்கும் எங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என கார் மாடிஃபிகேஷன் நிர்வாகம் கையை விரித்துவிட்டுள்ளது. இதனால், தார் எஸ்யூவி காரின் உரிமையாளர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றார்.

இதன் பின்னரே வாகனத்தை மாடிஃபிகேஷன் செய்வதன் பின்னால் இத்தனை பிரச்னைகள் ஏற்படும் என்பதை அவர் உணர்ந்திருக்கின்றார். இந்த பிரச்னை மட்டுமா?, இந்தியாவில் வாகனங்களை மாடிஃபை செய்வது என்பது மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றச் செயலாகும். அபராதம் மற்றும் வாகன பறிமுதல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் இந்த செயலுக்கு எடுக்கப்படுகின்றது. ஆகையால், வாகன மாடிஃபிகேஷன் என்பது மனம் கவரும் ஓர் அம்சமாக இருந்தாலும், அது பல்வேறு சிக்கல்களை வழங்கக் கூடியதாக இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 19, 2022, 19:39 [IST]
English summary
This mahindra thar shows dark side modification
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+