சிஎன்ஜி கார்களில் மைலேஜையும், லாபத்தையும் இரு மடங்காக்குவது எப்படி? இந்த டிப்ஸை மெக்கானிக்கூட சொல்ல மாட்டாங்க!

சிஎன்ஜி கார்கள் ஏற்கனவே அதிக லாபத்தைத் தரக் கூடியவை ஆகும். இதனை மேலும் பல மடங்கு இரடிப்பாக்க, அதாவது, சிஎன்ஜி வாகனங்களின் மைலேஜையும், அது வழங்கும் லாபத்தையும் இரட்டிப்பாக்குவதற்கான டிப்ஸையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

சிஎன்ஜி கார்களில் மைலேஜையும், லாபத்தையும் இரட்டிப்பாக்குவது எப்படி?.. இந்த டிப்ஸை மெக்கானிக்கூட சொல்ல மாட்டாங்க!

கடந்த காலங்களில் டீசல் வாகனங்களே இந்தியர்களின் ஃபோவரிட் வாகனமாக இருந்தது. தற்போது இது மாறிவிட்டது. டீசல் வாகனங்கள் பெட்ரோல் வாகனங்களைக் காட்டிலும் அதிக விலையில் விற்கப்படுகின்றன. இதன் விளைவாக பலர் தற்போது பெட்ரோல் வாகன பிரியர்களாக மாற தொடங்கியிருக்கின்றனர். அதேநேரத்தில் ஒரு சிலர் பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டையும் தவிர்த்துவிட்டு சிஎன்ஜி வாகன பயன்பாட்டிற்கு மாற தொடங்கியிருக்கின்றனர்.

சிஎன்ஜி கார்களில் மைலேஜையும், லாபத்தையும் இரட்டிப்பாக்குவது எப்படி?.. இந்த டிப்ஸை மெக்கானிக்கூட சொல்ல மாட்டாங்க!

பெட்ரோல், டீசல் இரண்டைக் காட்டிலும் குறைவான விலையில் சிஎன்ஜி விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் விளைவாக இந்தியர்கள் மத்தியில் சிஎன்ஜி வாகனங்களுக்கு டிமாண்ட் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. போதிய அளவு சிஎன்ஜி நிரப்பும் நிலையங்கள் ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே ஒரு சிலர் சிஎன்ஜி வாகனங்களை வாங்கத் தயக்கம் காட்டுகின்றனர்.

சிஎன்ஜி கார்களில் மைலேஜையும், லாபத்தையும் இரட்டிப்பாக்குவது எப்படி?.. இந்த டிப்ஸை மெக்கானிக்கூட சொல்ல மாட்டாங்க!

சிஎன்ஜி விற்பனையகங்களை அதிகரிக்கச் செய்யும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதால் அதிகளவில் சிஎன்ஜி வாகனங்களை மக்கள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் நாளுக்கு நாள் இந்த வாகனங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. அதிக லாபத்தைப் பெறும் நோக்கில் வணிக வாகன பயன்பாட்டாளர்கள் தொடங்கி தனி நபர் வாகன உரிமையாளர்களும் சிஎன்ஜி வாகனங்களைத் தொடங்கியிருக்கின்றனர்.

சிஎன்ஜி கார்களில் மைலேஜையும், லாபத்தையும் இரட்டிப்பாக்குவது எப்படி?.. இந்த டிப்ஸை மெக்கானிக்கூட சொல்ல மாட்டாங்க!

இந்த சிஎன்ஜி வாகனங்களை மேலும் லாபகரமானதாக மாற்ற என்ன எல்லாம் செய்யலாம் என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, சிஎன்ஜி வாகன பயன்பாட்டின்போது கூடுதலாக பணத்தை மிச்சப்படுத்துவது எப்படி என்பதற்கான டிப்ஸ்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

சிஎன்ஜி கார்களில் மைலேஜையும், லாபத்தையும் இரட்டிப்பாக்குவது எப்படி?.. இந்த டிப்ஸை மெக்கானிக்கூட சொல்ல மாட்டாங்க!

சிலிண்டரை முழுமையாக நிரப்ப வேண்டாம்:

என் பகுதியில் சிஎன்ஜி மையம் குறைவாக இருக்கின்றது, மேலும், சிஎன்ஜி-யை நிரப்ப பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது, இவ்வாறெல்லாம் நினைத்துக் கொண்டு சிலிண்டர் ஃபுல்லா சிஎன்ஜி-யை நிரப்ப வேண்டாம். சிஎன்ஜி என்பது வாயு. இது அதிகப்படியாக நிரப்பப்படும் எனில் தானாகவே வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

சிஎன்ஜி கார்களில் மைலேஜையும், லாபத்தையும் இரட்டிப்பாக்குவது எப்படி?.. இந்த டிப்ஸை மெக்கானிக்கூட சொல்ல மாட்டாங்க!

ஆகையால், அளவுக்கு அதிகமாக சிஎன்ஜி வாயுவை நிரப்புவது என்பது நம் காசை நாமே கரியாக்கும் செயலாகும். சிஎன்ஜி மட்டுமில்லைங்க பெட்ரோல், டீசலைகூட டேங்க் நிரம்பி வழும் அளவிற்கு நிரப்பக் கூடாது என்பதே பரிந்துரையாகும். அதிக எரிபொருள் வீண்விரையத்திற்கு மட்டுமல்ல, அவை தீ விபத்தை ஏற்படுத்தக் கூடியதும்கூட. ஆகையால், இதை முற்றிலுமாக தவிர்ப்பது மிக மிக நல்லது.

சிஎன்ஜி கார்களில் மைலேஜையும், லாபத்தையும் இரட்டிப்பாக்குவது எப்படி?.. இந்த டிப்ஸை மெக்கானிக்கூட சொல்ல மாட்டாங்க!

ஏசி அல்லது ஹீட்டரை பயன்படுத்துவதை தவிர்க்கவும்:

பெட்ரோல், டீசல் கார்களை போலவே சிஎன்ஜி கார்களும் அதிகப்படியான ஏசி அல்லது ஹீட்டர்களை பயன்பட்டின் காரணமாக செலவாகக் கூடியதாக இருக்கின்றது. எனவே, தேவையான அளவு மட்டுமே ஏசி அல்லது ஹீட்டர் எதுவாக இருந்தாலும் பயன்படுத்துவது மிக மிக நல்லது. இதன் வாயிலாக அதிக மைலேஜை நம்மால் சிஎன்ஜி வாகனங்களில் பெற்றுக் கொள்ள முடியும்.

சிஎன்ஜி கார்களில் மைலேஜையும், லாபத்தையும் இரட்டிப்பாக்குவது எப்படி?.. இந்த டிப்ஸை மெக்கானிக்கூட சொல்ல மாட்டாங்க!

அதேநேரத்தில், எரிபொருளை மிச்சப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு ஏசி-யை ஆஃப் செய்துவிட்டு கார் ஜன்னல்களை திறந்தவாறு பயணிக்க வேண்டாம். கார் ஜன்னலை முழுமையாக திறந்துவிட்டு பயணிக்கும்போது காரின் ஏரோடைனமிக்ஸில் பாதிப்பு ஏற்படும். அதாவது, காற்றைக் கிழித்துக் கொண்டு செல்லும் திறன் பாதிக்கப்படும். மேலும் காருக்குள் காற்று தேங்குவதால் அதன் வேகம் பாதிக்கப்படும். இந்த நிலை அதிக எரிபொருள் செலவிற்கு வழிவகுக்கும். எனவே குறைந்தபட்ச ஏசியை ஆன் செய்து சௌகரியமான பயணத்தை தாராளமாக மேற்கொள்ளலாம்.

சிஎன்ஜி கார்களில் மைலேஜையும், லாபத்தையும் இரட்டிப்பாக்குவது எப்படி?.. இந்த டிப்ஸை மெக்கானிக்கூட சொல்ல மாட்டாங்க!

சிஎன்ஜி நிரப்பிய பின்னர் கவனம் தேவை:

வீடுகளில் சிலிண்டரை கழட்டி மாட்டுபவர்கள் கட்டாயம் இந்த பிரச்னையைச் சந்திக்க நேரிட்டிருக்கும். முழுமையாக தீராதநிலையில் சிலிண்டரை அடுப்பில் இருந்து கழட்டி எடுக்கும்பட்சத்தில் சில நேரங்களில் உருளையில் இருந்து கேஸ் தானாக கசிய நேரிடும். இதற்கு அந்த வாய்ப்பகுதியில் ஏற்பட்டிருக்கும் கோளாறே முக்கிய காரணம் ஆகும். இதேபோல், சிஎன்ஜி வாகனங்களிலும் ஏற்படலாம். ஆகையால், ஒரு முறை வாயுவை நிரப்பிய உடன் மிக இருக்கமாக அதன் வாய் பகுதியை மூடி விட வேண்டும். இதன் வாயிலாக கேஸ் லீக்கேஜை முற்றிலுமாக தவிர்க்க முடியும். மேலும், நல்ல மைலேஜையும் பெற்றுக் கொள்ள முடியும்.

சிஎன்ஜி கார்களில் மைலேஜையும், லாபத்தையும் இரட்டிப்பாக்குவது எப்படி?.. இந்த டிப்ஸை மெக்கானிக்கூட சொல்ல மாட்டாங்க!

டயர் பிரஷ்ஷர்:

பெட்ரோல், டீசல் வாகனங்களைப் போலவே சிஎன்ஜி வாகனங்களுக்கும் டயர் பிரஷ்ஷர் மிக முக்கியமானதாக இருக்கின்றது. குறைந்த பிரஷ்ஷர் உள்ள டயரினால் எஞ்ஜினின் செயல் திறன் பாதிக்க நேரிடலாம். இதன் விளைவாக எரிபொருள் சிக்கனத்தில் பாதிப்பு ஏற்படும். மேலும், மைலேஜும் அடி வாங்கும். இதைத் தவிர்க்க எப்போதும் உங்கள் வாகனத்தின் டயர்களில் போதுமான காற்றை நிரப்பி வைத்திருப்பது அவசியமானதாக இருக்கின்றது.

சிஎன்ஜி கார்களில் மைலேஜையும், லாபத்தையும் இரட்டிப்பாக்குவது எப்படி?.. இந்த டிப்ஸை மெக்கானிக்கூட சொல்ல மாட்டாங்க!

எஞ்ஜின் ட்யூன்-அப்:

அவ்வப்போது எஞ்ஜினை ட்யூன்-அப் செய்வது நல்லது. இது எஞ்ஜினை ஆயுட்காலத்தை அதிகரிக்கச் செய்யும். இதுமட்டுமல்ல எரிபொருள் சிக்கனத்திற்கும் இது வழி வகுக்கும். எனவேதான் எந்த எரிபொருளில் இயங்கும் வாகனமாக இருந்தாலும் எஞ்ஜின் ட்யூன்-அப் அவசியம் என கூறப்படுகின்றது.

சிஎன்ஜி கார்களில் மைலேஜையும், லாபத்தையும் இரட்டிப்பாக்குவது எப்படி?.. இந்த டிப்ஸை மெக்கானிக்கூட சொல்ல மாட்டாங்க!

ஏர் ஃபில்டரை மாற்றவும்:

எஞ்ஜின் சீராக இயங்குவதில் ஏர் ஃபில்டர் முக்கிய பங்கினை வகிக்கின்றது. இதுவே வெளிப்புறத்தில் இருக்கும் மாசுற்ற காற்றை வடிகட்டி சுத்தமானதாக எஞ்ஜினுக்குள் செல்ல உதவுகின்றது. இந்த அம்சம் அசுத்தமான தூசிக்களால் பாதிக்கப்படும் எனில் எஞ்ஜினின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும். எனவே, அவ்வப்போது காற்று வடிகட்டிகளை ஆராய்ந்து, அதை சிறந்த முறையில் பராமரிப்பது மிக மிக நல்லது. அதேநேரத்தில், குறிப்பிட்ட இடைவெளிக்கு பின்னர் அதனை மாற்றிவிடுவது கூடுதல் நல்லது.

மேலே கண்ட டிப்ஸ்களை பின்பற்றுவதன் வாயிலாக சிஎன்ஜி வாகனங்களை கூடுதல் லாபகரமானதாக மாற்ற முடியும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 16, 2022, 8:30 [IST]
English summary
Tips for cng cars users
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+