பாக்க அழகாதான் இருக்கும் ஆனா ஆபத்தானது... கார் கண்ணாடி மீது படரும் பனியை அகற்றுவது எப்படி?

கார் கண்ணாடி மீது படரும் மூடுபனியை அகற்றுவது எப்படி என்கிற தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

மழைக் காலத்தை போலவே பனி காலமும் வாகன ஓட்டிகளுக்கு சவால் நிறைந்த சீசனாகும். அதிக மழையின்போது எப்படி வாகனம் ஓட்டுவது கடினமானதோ அதேபோல், கடுமையான பனி மூட்டத்தின்போதும் வாகனங்களை இயக்குவது இயலாத ஒன்று.

பனி

குறிப்பாக, விண்ட்ஷீல்டில் உருவாகும் பனிதுளிகள் டிரைவிங்கை மிகவும் ஆபத்தானதாக மாற்றிவிடும். பார்ப்பதற்கு மிக அழகானதாக பனி துளிகள் தென்பட்டாலும், அவை மிக ஆபத்தானவை என்பதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். எனவேதான் மாடர்ன் கார்களில் பனி மூட்டத்தையும், பனி மூட்டத்தால் ஏற்படும் பனி துளிகளையும் சமாளிக்கும் கருவிகளை வாகன உற்பத்தியாளர்கள் வழங்குகின்றனர்.

"ஆனால், இந்த அம்சம் எங்கள் காரில் இல்லைங்க" என வறுத்தப்படுறீங்களா... கவலைய விடுங்க, இதனை கையாள்வதற்கு சில பிரத்யேக வழிகள் இருக்கின்றன. அவை என்ன என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் காண இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

பனி

பனி துளி பற்றிய சிறிய விளக்கம்:

விரிவான பதிவிற்குள் போகும் முன் பனி துளி பற்றி அறிந்துக்கொள்வது மிகவும் அவசியமானது. சிறு சிறு நீர் துளிகளே பனியாக வாகனத்தின் உட்பக்கம் மற்றும் வெளிப்புறங்களில் படர்கின்றன. வெளிப்புறம் மற்றும் உட்புற வெப்பநிலையைப் பொருத்தே இது படரும். இது விண்ட்ஷீல்டில் படரும்போதே ஆபத்தான சூழலை உருவாக்குகின்றது.

பார்வை திறனை அது குறைக்கச் செய்யும். இதனை அகற்றுவது சுலபம் என்றாலும், பனி அடிக்கடி படரும் தன்மைக் கொண்டதால் அதைத் தொடர்ச்சியாக செய்து கொண்டே இருக்க முடியாது. இதனால் கவன சிதறல் ஏற்படலாம். குறிப்பாக விண்ட்ஷீல்டின் உட்புறத்தில் அது படரும்பட்சத்தில் அதனை மேனுவலாக மட்டுமே போக்க முடியும்.

பனி படர்தல் வெளிப்புறத்தில் நடைபெறும்போது என்ன செய்யலாம்:

வெளிப்புறத்தைக் காட்டிலும் காரின் உட்பக்கம் அதிக குளிர்ச்சியாக இருக்கும் எனில் காரின் வெளிப்பக்க கண்ணாடி அல்லது விண்ட்ஷீல்டில் பனி படர வாய்ப்புகள் உள்ளன. விண்ட்ஷீல்டில் ஏற்படுவதை வைப்பர் கொண்டு அகற்றிக் கொள்ள முடியும் ஆனால் ஜன்னல் கண்ணாடிகளில் ஏற்படும் பனி துளியை மேனுவலாக மற்றுமே செய்ய முடியும். கண்ணாடியை இறக்குவதன் வாயிலாகவும் இதை போக்க முடியும். ஆனால், ஏசி போட்டிருக்கும் நேரத்தில் இதை செய்ய யாரும் விரும்ப மாட்டார்கள்.

காருக்குள் மூடிபனி ஏற்படும் என்ன செய்யலாம்:

மழை பெய்யும்போதும், பனி காலத்தின்போதும் காருக்குள் மூடுபனி ஏற்படும். நாம் சுவாசிக்கும் மூச்சு காற்றால் இது உருவாகும். காற்றுக்குள் இருக்கும் ஏர் வெண்டிலேசன் சிஸ்டத்தை இயக்குவதன் வாயிலாக காருக்குள் ஏற்படும் மூடுபனியை தவிர்க்க முடியும். நவீன கால கார்களில் இதற்காக டிஃபாக்கர் எனும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் விண்ட்ஷீல்டுக்கு கீழே இருக்கும் வெண்டுகளை ஆக்டிவேட் செய்து காற்றோட்டத்தை உறுதிப்படுத்தும். இதன் வாயிலாக பனி விலகும்.

ஹேக் செய்வது?

உட்புறம் வெளிப்புறம் எதுவாக இருந்தாலும் காரின் கண்ணாடிகளில் ஏற்படும் மூடுபனியை தவிர்க்க வேண்டும் என்றால் அவற்றை ஷேவிங் கிரீமைக் கொண்டு பூசி சுத்தம் செய்ய வேண்டும். இதன் வாயிலாக பனி படர்வதை நம்மால் தவிர்க்க முடியும். இது ஓர் பாதுகாப்பு அடுக்கை கண்ணாடிகள் மீது ஏற்படுத்துவதைப் போல் செயல்படும். குறிப்பாக கடும் பனி பொழிவின்போது படரும் பனிகளை இதன் வாயிலாக சுலபமாக அற்ற முடியும். இது தவரி நீரை விளக்கும் இராசயனங்களும் பிரத்யேகமாக சந்தையில் விற்கப்படுகின்றன. இவற்றை பயன்படுத்துவதனால் சிறு துளியளவு நீர்கூட கண்ணாடிகள் மீது தங்காது.

Most Read Articles
English summary
Tips to remove fog car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X