திருப்பூர் பனியனுக்குதானே ஃபேமஸு.. மின்சார கார எப்போ தயாரிக்க ஆரம்பிச்சாங்க! 150கிமீ செல்ல ரூ.60 மட்டுமே ஆகும்
திருப்பூர் நிறுவனம் ஒன்று விற்பனைக்கு வழங்கும் எலெக்ட்ரிக் கார் குறித்த முக்கிய தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

திருப்பூர் பனியனுக்கு தானே ஃபேமஸ். எப்போ அங்க மின்வாகனங்களை தயாரிக்க ஆரம்பிச்சாங்கனு பலரை ஆச்சரியமடைய செய்திருக்கின்றது தற்போது வெளியாகி இருக்கும் தகவல். திருப்பூரை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் நியூ எனர்ஜி வேகன் (New Energy Wagon). இந்த புதுமுக நிறுவனமே இந்திய சந்தையில் புதிதாக மின்சாரை கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜிஏஐஏ (GAIA) எனும் பயணிகள் எலெக்ட்ரிக் காரையே அது அறிமுகப்படுத்தியிருக்கின்றது. பார்ப்பதற்கு அட்டகாசமாக காட்சியளிக்கும் இந்த எலெக்ட்ரிக் காரை சீன நிறுவனமான ஜிஏஐஏ நிறுவனத்திடம் இருந்து உரிமைப் பெற்று, நியூ எனர்ஜி வேகன் இந்தியாவில் உற்பத்தி செய்யது வருகின்றது. இந்த கார் குறித்து வியூவ்ஸ் ஆஃப் ரித்திக் வெளியிட்டிருக்கும் வீடியோ மற்றும் எலெக்ட்ரிக் காரில் என்ன மாதிரியான சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஜிஏஐஏ மிக சிறிய எலெக்ட்ரிக் காராகும். மஹிந்திரா விற்பனைக்கு வழங்கிய ரெவா எலெக்ட்ரிக் காரின் தோற்றத்தில் அது காட்சியளிக்கின்றது. இந்த காரை அலங்கரிக்கும் வகையில் புரஜெக்டர் ரக ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லைட், டைமண்ட் கட் அலாய் வீல்கள், டர்ன் இன்டிகேட்டர் பொருத்தப்பட்ட ரியர் வியூ மிர்ரர் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.

காரின் வெளிப்புற தோற்றம் பெட்டி போன்று காட்சியளிக்கின்றது. இந்த சிறிய உருவமே இக்காரை மிகவும் நடைமுறைக்கு ஏற்ற காராக மாற்றியிருக்கின்றது. குறிப்பாக, நகர பயன்பாட்டிற்கு உகந்த வாகனமாக அது தென்பட செய்கின்றது. உருவத்தைப் போலவே மற்ற விஷயங்களையும் கஞ்சத் தனத்தைக் கொண்ட வாகனமாக இந்த எலெக்ட்ரிக் கார் காட்சியளிக்கின்றது.

இரண்டு கதவுகளை மட்டுமே இக்கார் கொண்டுள்ளது. முன் பக்கத்தில் இரு பெரியவர்களும், பின்பக்கத்தில் இரண்டு சிறுவர்கள் மட்டுமே அமரும் வகையில் இதன் இருக்கை அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகையால், சிறிய குடும்பத்திற்கு ஏற்ற கார் இது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த விஷயத்தில் மட்டும்தாங்க நியூ எனர்ஜி வேகன் ஜிஏஐஏ எலெக்ட்ரிக் கார் கஞ்சமானதாக காட்சியளிக்கின்றது. மற்றபடி சிறப்பு தொழில்நுட்ப விஷயத்தில் மிக தாரளமான வசதிகள் கொண்ட காராக அது இருக்கின்றது. எலெக்ட்ரிக் காரில் அமெரிக்க நிறுவனம் டெஸ்லா தயாரித்து வரும் மின்சார கார்களில் இடம் பெறுவதைப் போன்ற பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, காரின் வேகம், ஆர்பிஎம், ட்ரிப் மீடட்ர், ஓடோ மீட்டர் மற்றும் பேட்டரியின் சார்ஜ் அளவு ஆகிய முக்கிய தகவல்களை வழங்கக் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் கருவியும் இக்காரில் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று இன்னும் பல சிறப்பு அம்சங்கள் இக்காரில் உள்ளன.

ஜிஏஐஏ எலெக்ட்ரிக் கார் மோனோ சேஸிஸிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பாடி பேனல்கள் 90 சதவீதம் மெட்டல்களைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. மீதமுள்ள 10 சதவீதம் பேனல்கள் ஃபைபரால் உருவாக்கப்பட்டவை ஆகும். இக்கார், நீலம், வெள்ளை, கருப்பு, லைட் கிரே மற்றும் டார்க் கிரே ஆகிய நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இதன், டாப் ஸ்பீடு மணிக்கு 85 கிமீ ஆகும். இதற்காக 3000 ஆர்பிஎம்மை வெளியேற்றக் கூடிய டிசி மின் மோட்டார் இக்காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், சிறந்த ரேஞ்ஜ் திறனை வழங்குவதற்காக 72 வாட் லித்தியம் அயன் பேட்டரி பேக் ஜிஏஐஏ எலெக்ட்ரிக் காரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 6-7 மணி நேரங்கள் வரை ஆகும்.
150 கிமீ தூரம் வரை ஓர் முழுமையான சார்ஜில் பயணிக்க முடியும். இந்த 150 கிமீ பயணத்திற்கு வெறும் 60 ரூபாய் மட்டுமே செலவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஓர் ஆட்டோமேட்டிக் எலெக்ட்ரிக் காராகும். என், டி மற்றும் ஆர் ஆகிய மூன்று விதமான ரைடிங் மோட்களே காரில் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான கணிசமான சிறப்பு வசதிகளுடனேயே இந்தியாவில் ஜிஏஐஏ எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் விலை ரூ. 7.5 லட்சம் என கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








