ஆனந்த் மஹிந்திராவை அசர வைத்த கீழடி இளைஞர்... 4 வீல் இயக்கம் கொண்ட எலெக்ட்ரிக் காரை உருவாக்கி அசத்தல்!

தமிழகத்தின் கீழடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நான்கு வீல் இயக்கம் கொண்ட எலெக்ட்ரிக் காரை வீட்டிலேயே வைத்து உருவாக்கி அசத்தியிருக்கின்றார்.

இளைஞரின் இந்த செயல் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவை வெகுவாக கவர்ந்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஆனந்த் மஹிந்திராவை அசர வைத்த கீழடி இளைஞர்... 4 வீல் இயக்கம் கொண்ட எலெக்ட்ரிக் காரை உருவாக்கி அசத்தல்!

வாகனம் தயாரிக்க ஆலையோ அல்லது மிகப் பெரிய கராஜோ தேவையில்லை திறமையும், சாமர்த்தியமும் இருந்தால் போதும் என தமிழகத்தின் கீழடியைச் சேர்ந்த ஓர் இளைஞர் வெளிக்காட்டியுள்ளார். இளைஞர் மஹிந்திரா நிறுவனத்தின் பழைய ஜீப் வாகனத்தை தன்னுடைய தனி திறமையால் மின்சாரத்தால் இயங்கும் வாகனமாக மாற்றியிருக்கின்றார். இளைஞரின் இந்த செயல் ஒட்டுமொத்த கிராமத்தினரையும் ஆச்சரியமடைச் செய்திருக்கின்றது.

ஆனந்த் மஹிந்திராவை அசர வைத்த கீழடி இளைஞர்... 4 வீல் இயக்கம் கொண்ட எலெக்ட்ரிக் காரை உருவாக்கி அசத்தல்!

அந்த கிராம மக்களை மட்டுமில்லைங்க ஒட்டுமொத்த இந்தியர்களையும் இளைஞரின் செயல் வியக்க வைத்திருக்கின்றது. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவையும்தான் இளைஞரின் செயல் கவர்ந்திருக்கின்றது. இதன் விளைவாக இளைஞர் பாராட்டியும், அவர் உருவாக்கியிருக்கும் எலெக்ட்ரிக் ஜீப்பின் வீடியோவையும் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார்.

ஆனந்த் மஹிந்திராவை அசர வைத்த கீழடி இளைஞர்... 4 வீல் இயக்கம் கொண்ட எலெக்ட்ரிக் காரை உருவாக்கி அசத்தல்!

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படும் நபரே தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா. கண்களில் படும் புதுமைகளை அவர் இதுவரை பாராட்டத் தவறியதில்லை என கூறலாம். குறிப்பாக, வாகன உலகம் சார்ந்து இணையத்தில் உலாவும் பதிவுகளுக்கு உடனடி புகழை அவர் சேர்த்துவிடுவார். இந்த மாதிரியான சூழலிலேயே அவர் தற்போது கீழடி இளைஞரின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் எலெக்ட்ரிக் காருக்கு பெருமிதம் சேர்க்கும் விதமாக சமூக வலைதளங்களில் அதை பாராட்டியிருக்கின்றார்.

ஆனந்த் மஹிந்திராவை அசர வைத்த கீழடி இளைஞர்... 4 வீல் இயக்கம் கொண்ட எலெக்ட்ரிக் காரை உருவாக்கி அசத்தல்!

இணையத்தில் வீடியோவை பகிர்ந்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் தன்னுடைய நிறுவனத்தின் மூத்த அதிகாரியை இளைஞரை தொடர்பு கொள்ளுமாறு கூறியிருக்கின்றார். ஆகையால், வரும் காலத்தில் மஹிந்திரா நிறுவனத்தில் இளைஞருக்கு வேலை கிடைத்தல் அல்லது மஹிந்திரா கார் பரிசளிப்பு செய்தல் இதில் ஏதேனும் ஒன்று நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனந்த் மஹிந்திராவை அசர வைத்த கீழடி இளைஞர்... 4 வீல் இயக்கம் கொண்ட எலெக்ட்ரிக் காரை உருவாக்கி அசத்தல்!

கீழடியைச் சேர்ந்த் கௌதம் எனும் நபரே இந்த சூப்பரான உருவாக்கத்திற்கு காரணமானவர் ஆவார். முன் வீல் மற்றும் பின் வீல் ஆகியவற்றை தனித் தனியாக கனட்ரோல் செய்யும் வகையில் இளைஞர் அவ்வாகனத்தை வடிவமைத்திருக்கின்றார். இதுவே இன்னும் பலரை ஈர்க்கும் வகையில் உள்ளது. இந்த சூப்பரான திறமையையும் காரின் வீடியோவையும் பார்த்த பின்னர் ஆனந்த் மஹிந்திரா, "இந்தியா மின் வாகன பிரிவில் முன்னணியில் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்" என்றார்.

மேலும், "அமெரிக்காவின் வாகன உலகம் பல புதுமைகளைக் கண்டிருப்பதற்கு அந்நாட்டு மக்கள் தங்களுக்கான வாகனங்களை அவர்களே அவர்களது கராஜில் வைத்து தொழில்நுட்பமிக்கதாக மாற்றிக் கொள்வதே காரணம்" எனவும் அந்த பதிவில் தெரிவித்திருக்கின்றார். இதை, இந்தியாவிலும் ஒரு சிலர் தங்களின் வாகனங்களை அவர்களே மாற்றியமைத்துக் கொண்டிருப்பதை முன் வைத்து அவர் கூறியிருக்கின்றார்.

ஆனந்த் மஹிந்திராவை அசர வைத்த கீழடி இளைஞர்... 4 வீல் இயக்கம் கொண்ட எலெக்ட்ரிக் காரை உருவாக்கி அசத்தல்!

இந்த கருத்துகளைத் தொடர்ந்தே இளைஞரின் வேண்டுகளின்படி தன் நிறுவனத்தின் மூத்த அதிகாரியை இளைஞர் கௌதமை தொடர்பு கொள்ள கூறியிருக்கின்றார். இளைஞர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஓர் குறும்வீடியோ ஆகும். ஆகையால், என்னமாதிரியான கைநுட்பத்தைக் கைப்படுத்தி அவர் 4வீல் இயக்கம் கொண்ட எலெக்ட்ரிக் ஜூப்பை உருவாக்கியிருக்கின்றார் என்பது தெளிவாக தெரியவில்லை. இளைஞரும் தான் கையாண்ட யுக்தியை வெளியிடவில்லை.

ஆனந்த் மஹிந்திராவை அசர வைத்த கீழடி இளைஞர்... 4 வீல் இயக்கம் கொண்ட எலெக்ட்ரிக் காரை உருவாக்கி அசத்தல்!

இந்தியாவில் ஆஃப் ரோடு பிரியர்கள் மத்தியில் 4 வீல் டிரைவ் இயக்கம் கொண்ட வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இவை அட்வென்சர் மற்றும் கரடு-முரடான பாதைகளில் பயணம் மேற்கொள்ள ஏதுவான வாகனங்கள் ஆகும். ஆகையால், இந்தியாவின் மலைப் பிரதேசங்களில் வாழும் மக்கள் பெரும்பாலானோர் 4 வீல் இயக்கம் கொண்ட காரை வாங்கி வருகின்றனர்.

ஆனந்த் மஹிந்திராவை அசர வைத்த கீழடி இளைஞர்... 4 வீல் இயக்கம் கொண்ட எலெக்ட்ரிக் காரை உருவாக்கி அசத்தல்!

இத்தகையோரை இளைஞர் கௌதமின் உருவாக்கம் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. இவரை போல் இன்னும் பல இந்திய இளைஞர்கள் வீட்டிலேயே வைத்து வாகனங்களை வடிவமைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், கேரளாவைச் சேர்ந்த ராகேஷ் பாபு என்பவர் இந்த செயல்களுக்கு பெயர்போனவராக இருக்கின்றார்.

ஆனந்த் மஹிந்திராவை அசர வைத்த கீழடி இளைஞர்... 4 வீல் இயக்கம் கொண்ட எலெக்ட்ரிக் காரை உருவாக்கி அசத்தல்!

இந்த இளைஞர் தன்னுடைய சொந்த கராஜில் வைத்தே ஃபோக்ஸ்வேகன் பீட்டில், சிறிய எலெக்ட்ரிக் மஹிந்திரா ஜீப், சிறுவர்களுக்கான ஷெல்பி கோப்ரா மற்றும் சிறிய யமஹா ஆர்எக்ஸ் 100 மோட்டார்சைக்கிள் உள்ளிட்டவற்றை உருவாக்கியிருக்கின்றார். இந்த உருவாக்கங்களுக்காக இவரும் கடந்த காலத்தில் ஆனந்த் மஹிந்திராவால் பாராட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 25, 2022, 10:56 [IST]
English summary
Tn youth made electric jeep at his home
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+