இந்தியாவில் 128% அதிகரித்த மஹிந்திரா பொலிரோ கார்களின் விற்பனை!! நம்பர்.01 இடத்தில் மாருதி சுஸுகி எர்டிகா!
அளவில் சிறிய 5 இருக்கை கார்களில் இருந்து இந்திய வாடிக்கையாளர்கள் மெதுவாக 7-இருக்கை கார்களின் பக்கம் சாய்ந்து வருகின்றனர். இதனை வெளிக்காட்டும் விதத்தில் வெளியாகியுள்ள கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 7-இருக்கை கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய காலாண்டர் ஆண்டின் இரண்டாவது மாதமான பிப்ரவரியில், இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட 7-இருக்கை எஸ்யூவி காராக மாருதி சுஸுகி எர்டிகா முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 11,649 எர்டிகா கார்களை உள்நாட்டு சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

அதுவே கடந்த ஆண்டு பிப்ரவரியில் 9,774 எர்டிகா எம்பிவி கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் மாருதி சுஸுகி எர்டிகா கார்களின் விற்பனை இந்தியாவில் 19 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கடுத்து 2வது இடத்தில் உள்ள மஹிந்திரா பொலிரோவும் எர்டிகாவிற்கு இணையாக 11,045 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் எர்டிகாவை காட்டிலும் பொலிரோவின் விற்பனை 2021 பிப்ரவரி உடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் சுமார் 128% அதிகரித்துள்ளது. ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 4,843 பொலிரோ கார்களையே மஹிந்திரா விற்பனை செய்து இருந்தது. கடந்த பிப்ரவரி மாத துவக்கத்தில் 2 காற்றுப்பைகள் உடன் இந்த எஸ்யூவி காரின் அப்டேட் வெர்சனை மஹிந்திரா அறிமுகப்படுத்தி இருந்தது. இதன் வாயிலாகவே பொலிரோவின் விற்பனை கடந்த மாதத்தில் ஒரேடியாக அதிகரித்துள்ளது.

இதற்கடுத்து 3வது இடத்தில் கியா கேரன்ஸ் உள்ளது. கியாவின் சமீபத்திய அறிமுகமான கேரன்ஸ் எம்பிவி கடந்த பிப்ரவரி மாத மத்தியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் கேரன்ஸிற்கான முன்பதிவுகள் கடந்த ஜனவரி மாதத்திலேயே துவங்கப்பட்டுவிட்டன. கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 5,109 கேரன்ஸ் எம்பிவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. முதல் 2022 ஜனவரி மாதத்திலும் ஏறக்குறைய 500 கேரன்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் விற்பனை செய்யப்படுகின்ற கேரன்ஸிற்கான முன்பதிவுகளின் எண்ணிக்கையில் 19,000 என்கிற மைல்கல்லை கடந்துள்ளதாக கியா சமீபத்தில் அறிவித்திருந்தது. மேலும் வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய கால அளவை சமீபத்தில்தான் கியா கணிசமாக குறைத்திருந்தது. ஆந்திர பிரதேசத்தில் உள்ள அனந்தப்பூர் தொழிற்சாலையில் உருவாக்கப்படும் கேரன்ஸின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.8.99 லட்சத்தில் இருந்து ரூ.16.99 லட்சம் வரையில் உள்ளன.

கேரன்ஸிற்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் நான்காவது இடத்தை இம்முறை டொயோட்டா இன்னோவா பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 4,318 இன்னோவா க்ரிஸ்ட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2021 பிப்ரவரியில் 6,018 இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் இந்தியாவில் இன்னோவா கார்களின் விற்பனை 28.2% குறைந்துள்ளது.
| Rank | Model | Feb'22 | Feb'21 | Growth (%) |
| 1 | Maruti Swift | 19,202 | 20,264 | -5 |
| 2 | Maruti WagonR | 14,669 | 18,728 | -22 |
| 3 | Maruti Baleno | 12,570 | 20,070 | -37 |
| 4 | Maruti Alto | 11,551 | 16,919 | -32 |
| 5 | Maruti Celerio | 9,896 | 6,214 | 59 |
| 6 | Hyundai Grand i10 | 8,552 | 10,270 | -17 |
| 7 | Maruti S-Presso | 8,140 | 7,040 | 16 |
| 8 | Hyundai i20 | 5,830 | 9,001 | -35 |
| 9 | Tata Altroz | 5,011 | 6,832 | -27 |
| 10 | Tata Tiago | 4,489 | 6,787 | -34 |

மஹிந்திராவின் சமீபத்திய அறிமுகங்களுள் ஒன்றான எக்ஸ்யூவி700 4,138 யூனிட்களின் விற்பனை உடன் இந்த லிஸ்ட்டில் 5வது இடத்தை பிடித்துள்ளது. இதனை தொடர்ந்து 6வது மற்றும் 7வது இடங்களில் முறையே மாருதி சுஸுகி எக்ஸ்.எல்6 மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் பிடித்துள்ளன. இவற்றின் கடந்த பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 3,304 மற்றும் 2,610 ஆகும்.

இதில் எக்ஸ்.எல்6 பிரீமியம் எம்பிவி காரின் விற்பனை 3,020 யூனிட்கள் விற்கப்பட்ட 2021 பிப்ரவரி மாதத்தை காட்டிலும் 9.4% அதிகமாகும். ஆனால் இந்தியாவில் நீண்ட வருடங்களாக விற்பனையில் உள்ள மஹிந்திரா ஸ்கார்பியோவின் விற்பனை கிட்டத்தட்ட 26% குறைந்துள்ளது. கிட்டத்தட்ட ஸ்கார்பியோவிற்கு இணையாக கடந்த மாதத்தில் 2,516 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள ஹூண்டாய் அல்கஸார் இந்த வரிசையில் 8வது இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications








