கார்கள் ஏற்றுமதியிலும் கலக்கும் மாருதி சுஸுகி!! டாப்-10 எக்ஸ்போர்ட்ஸ் கார்கள் - 2022 மார்ச்

கடந்த மாதத்தில் மொத்தம் 61,270 பயணிகள் கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த ஏற்றுமதி எண்ணிக்கையானது கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 54.75% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 39,592 கார்களே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன.

இத்தனைக்கும் டாடா மோட்டார்ஸின் வெளிநாட்டு ஏற்றுமதி எண்ணிக்கைகள் குறித்த விபரங்கள் கிடைக்க பெறவில்லை. அப்படி இருந்தும், கடந்த மாதத்தில் 61 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள் இங்கு தயாரிக்கப்பட்டு வெளிநாட்டு சந்தைகளை சென்றடைந்துள்ளன. இருப்பதிலேயே அதிக யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட காராக இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை மாருதி சுஸுகியின் டிசைர் செடான் மாடல் பிடித்துள்ளது.

கார்கள் ஏற்றுமதியிலும் கலக்கும் மாருதி சுஸுகி!! டாப்-10 எக்ஸ்போர்ட்ஸ் கார்கள் - 2022 மார்ச்

மாருதியின் பிரபலமான, மலிவான விலை கொண்ட காம்பெக்ட் செடான் காரான இது கடந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 6,578 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு மார்ச்சில் வெறும் 1,223 டிசைர் கார்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் டிசைர் கார்களின் ஏற்றுமதி சுமார் 437.86% அதிகரித்துள்ளது. கடந்த மாத மொத்த ஏற்றுமதியில் டிசைரின் பங்கு மட்டுமே 10.74% ஆகும்.

கார்கள் ஏற்றுமதியிலும் கலக்கும் மாருதி சுஸுகி!! டாப்-10 எக்ஸ்போர்ட்ஸ் கார்கள் - 2022 மார்ச்

டிசைருக்கு அடுத்து இந்த லிஸ்ட்டில், உள்நாட்டில் மாருதியின் மற்றொரு பிரபலமான காரான ஸ்விஃப்ட் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 4,962 ஸ்விஃப்ட் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2021 மார்ச்சில் ஸ்விஃப்ட்டின் ஏற்றுமதி எண்ணிக்கை வெறும் 1,367 ஆகும். இந்த வகையில் ஸ்விஃப்ட்டின் ஏற்றுமதியும் கடந்த ஆண்டு மார்ச் உடன் ஒப்பிடுகையில் 2022 மார்ச்சில் கிட்டத்தட்ட 262.98% அதிகரித்துள்ளது.

கார்கள் ஏற்றுமதியிலும் கலக்கும் மாருதி சுஸுகி!! டாப்-10 எக்ஸ்போர்ட்ஸ் கார்கள் - 2022 மார்ச்

3வது இடத்தை ஃபோக்ஸ்வேகனின் வெண்டோ செடான் மாடல் பிடித்துள்ளது. இந்திய சந்தையில் வெண்டோவின் விற்பனை பெரிய அளவில் சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை என்றாலும், பல வெளிநாட்டு சந்தைகளில் இந்த ஃபோக்ஸ்வேகன் செடான் கார் சிறந்த விற்பனை மாடலாக விளங்குகிறது. அத்தகைய நாடுகளுக்கெல்லாம் இந்தியாவில் இருந்துதான் வெண்டோ கார்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

கார்கள் ஏற்றுமதியிலும் கலக்கும் மாருதி சுஸுகி!! டாப்-10 எக்ஸ்போர்ட்ஸ் கார்கள் - 2022 மார்ச்

இந்த வகையில் கடந்த மார்ச்சில் 4,484 வெண்டோ கார்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் ஏற்றுமதி எண்ணிக்கையும் தற்போதைய ஏற்றுமதி எண்ணிக்கையை காட்டிலும் 201.95% குறைவாக 2021 மார்ச்சில் 1,485 என்கிற அளவிலேயே இருந்தது. நிஸான் சன்னி 4வது இடத்தை தொடர்கிறது. இந்தியாவில் விற்பனையில் இல்லாத இந்த ஜப்பானிய செடான் மாடல் பெரும்பாலான மாதங்களில் இந்தியாவில் இருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

கார்கள் ஏற்றுமதியிலும் கலக்கும் மாருதி சுஸுகி!! டாப்-10 எக்ஸ்போர்ட்ஸ் கார்கள் - 2022 மார்ச்

இதன்படி கடந்த மாதத்திலும் மொத்தம் 4,280 நிஸான் சன்னி கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டு சந்தைகளை அடைந்துள்ளன. ஆனால் உண்மையில் 2021 மார்ச் உடன் ஒப்பிடுகையில் சன்னி கார்களின் ஏற்றுமதி 13.38% குறைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அந்த மாதத்தில் 4,941 சன்னி கார்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தன.

கார்கள் ஏற்றுமதியிலும் கலக்கும் மாருதி சுஸுகி!! டாப்-10 எக்ஸ்போர்ட்ஸ் கார்கள் - 2022 மார்ச்

இவற்றை தொடர்ந்து கியாவின் முதல் இந்தியாவிற்கான காரான செல்டோஸ் 3,330 யூனிட்களின் ஏற்றுமதி உடன் 5வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் செல்டோஸ் கார்களின் ஏற்றுமதி இந்தியாவில் இருந்து இந்த அளவிலேயே இருந்தது. மாருதியின் சிறிய அளவிலான ஹேட்ச்பேக் காரான எஸ்-பிரெஸ்ஸோ 2021 மார்ச்சில் 2,678 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதத்தில் 3,050 யூனிட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கார்கள் ஏற்றுமதியிலும் கலக்கும் மாருதி சுஸுகி!! டாப்-10 எக்ஸ்போர்ட்ஸ் கார்கள் - 2022 மார்ச்

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக எர்டிகாவின் ஏற்றுமதி சுமார் 600.26% அதிகரித்துள்ளது. ஏனெனில் 2021 மார்ச்சில் வெறும் 388 யூனிட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த எர்டிகா கடந்த மாதத்தில் சுமார் 2,717 யூனிட்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், எர்டிகாவின் சமீபத்திய புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனே ஆகும். எர்டிகாவிற்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் 8வது, 9வது மற்றும் 10வது இடங்களில் முறையே ஹூண்டாய் வெர்னா, கியா சொனெட் மற்றும் ரெனால்ட் கிகர் மாடல்கள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, April 25, 2022, 11:21 [IST]
English summary
Top 10 car exports march 2022 details
மேலும்... #ஏற்றுமதி #exports
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+