மாருதி கிட்ட யாருமே நெருங்க முடியல... டாடாவும் தடுமாறிக்கிட்டே தான் இருக்குது...

கடந்த அக்டோபர் மாத கார் விற்பனையாளர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது. டாப் 10 கார்கள் நிறுவனங்கள் அதன் வளர்ச்சி மற்றும் மார்கெட் பங்கு குறித்த விபரங்களைக் காணலாம்.

மாருதி கிட்ட யாருமே நெருங்க முடியல . . . டாடாவும் தடுமாறிக்கிட்டே தான் இருக்குது . . .

நவம்பர் மாதம் பிறந்துவிட்டது, தற்போது கார் உற்பத்தியாளர்கள் எல்லாம் அக்டோபர் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளன. அதன்படி கடந்த மாதம் இந்தியாவில் அதிகமாக கார்களை விற்பனை செய்த டாப் 10 நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம்.

மாருதி கிட்ட யாருமே நெருங்க முடியல . . . டாடாவும் தடுமாறிக்கிட்டே தான் இருக்குது . . .

கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 3,36,298 கார்கள் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் மொத்தம் 2,60,162 கார்கள் விற்பனையாகியிருந்தது. ஒரே ஆண்டில் கார் விற்பனை 29.26 சதவீத வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

மாருதி கிட்ட யாருமே நெருங்க முடியல . . . டாடாவும் தடுமாறிக்கிட்டே தான் இருக்குது . . .

இதில் ரெனால்ட், நிஸான், மற்றும் ஜீப் ஆகிய நிறுவனங்கள் இரட்டை இலக்க வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இதுவே கடந்த செப்டம்பர் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது செப்டம்பர் மாதம் மொத்தம் 3,54,947 கார்கள் விற்பனையாகியிருந்தது. இது அக்டோபர் மாதத்தில் 5.25 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

பட்டியலில் முதலிடத்தில் இந்த மாதமும் வழக்கம் போல மாருதி நிறுவனம் தான் இருக்கிறது. மாருதி நிறுவனம் இந்தியாவில் உள்ள பயணிகள் கார் விற்பனையில் 41.73 சதவீத மார்கெட் பங்கை வைத்துள்ளது. இந்நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் மொத்தம் 1,40,337 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2021 அக்டோபர் மாதம் வெறும் 1,08,991 கார்கள் விற்பனையாகியுள்ளன. இது 28.76 சதவீத வளர்ச்சியாகும். ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் விற்பனையான 1,48,380 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 5.42 சதவீதம் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

மாருதி கிட்ட யாருமே நெருங்க முடியல . . . டாடாவும் தடுமாறிக்கிட்டே தான் இருக்குது . . .

இரண்டாவது இடத்தில் ஹூண்டாய் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் இந்தியாவில் 14.27 சதவீத மார்கெட் பங்கை வகித்துள்ளது. இந்த இடத்திற்கு அடிக்கடி ஹூண்டாயும், டாடாவும் சண்டையிட்டுவரும் நிலையில் கடந்த மாதம் ஹூண்டாய் சிறப்பான விற்பனையைப் பெற்றுள்ளனர். மொத்தம் 48,001 கார்கள் கடந்த அக்டோபர் மாதம் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெறும் 37,021 கார் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இது 29.66 சதவீத வளர்ச்சியாகும். ஆனால் கடந்த செப்டர் மாதம் மொத்தம் 49,700 கார்கள் விற்பனையாகியுள்ளது. இது 3.42 சதவீத விற்பனை வீழ்ச்சியாகும்.

மாருதி கிட்ட யாருமே நெருங்க முடியல . . . டாடாவும் தடுமாறிக்கிட்டே தான் இருக்குது . . .

டாடா நிறுவனம் இந்த மாதம் 13.45 சதவீத மார்கெட் பங்குடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 45,217 வாகனங்களைக் கடந்த அக்டோபர் மாதம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு அக்டோபர் மாதம் மொத்தம் 33,925 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. ஒரே ஆண்டில் 33.29 சதவீத வளர்ச்சியை இந்நிறுவனம் சந்தித்துள்ளது. இதுவே கடந்த செப்டம்பர் மாத விற்பனையை ஒப்பிடும் போது 5.11 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அப்பொழுது 47654 கார்கள் விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மாருதி கிட்ட யாருமே நெருங்க முடியல . . . டாடாவும் தடுமாறிக்கிட்டே தான் இருக்குது . . .

4வது இடத்தில் மஹிந்திரா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் 9.60 சதவீத மார்கெட் பங்கை வகித்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 32,298 வானகங்களை கடந்த அக்டோபர் மாதம் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்தாண்டு அக்டோபர் மாதம் மொத்தமே 20,130 வாகனங்களைத் தான் விற்பனை செய்திருந்தது. ஒரே ஆண்டில் 60.45 சதவீத வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. இதுவே கடந்த செப்டம்பர் மாத விற்பனையான 34,508 என்ற எண்ணிக்கையை ஒப்பிடும் போது 6.40 சதவீதம் விற்பனையில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

மாருதி கிட்ட யாருமே நெருங்க முடியல . . . டாடாவும் தடுமாறிக்கிட்டே தான் இருக்குது . . .

5வது இடத்தில் கியா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 23,323 கார்களை கடந்த அக்டோபர் மாதம் விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்தாண்டு இதே அக்டோபர் மாதத்தில் மொத்தம் 16,331 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இது 42.81 சதவீத வளர்ச்சியாகும். இதுவே கடந்த செப்டம்பர் மாத விற்பனையான 25,857 என்ற எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது 9.80 சதவீதம் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

மாருதி கிட்ட யாருமே நெருங்க முடியல . . . டாடாவும் தடுமாறிக்கிட்டே தான் இருக்குது . . .
Rank OEM Oct'22 Oct'21 Growth (%)
1 Maruti Suzuki 1,40,337 1,08,991 28.8
2 Hyundai 48,001 37,021 29.7
3 Tata 45,220 33,926 33.3
4 Mahindra 32,226 20,034 60.9
5 Kia 23,323 16,331 42.8
6 Toyota 13,143 12,440 5.7
7 Honda 9,543 8,108 17.7
8 Renault 7,778 8,910 -12.7
9 MG 4,367 2,863 52.5
10 Volkswagen 3,510 3,077 14.1
மாருதி கிட்ட யாருமே நெருங்க முடியல . . . டாடாவும் தடுமாறிக்கிட்டே தான் இருக்குது . . .

6வது இடத்தில் டொயோட்டா நிறுவனமும், 7வது இடத்தில் ஹோண்டா நிறுவனமும், 8வது இடத்தில் ரெனால்ட் நிறுவனமும், 9வது இடத்தில் எம்ஜி நிறுவனமும், 10வது இடத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனமும் இருக்கிறது. இந்நிறுவனங்கள் எல்லாம் ஓராண்டு விற்பனையில் வளர்ச்சியையே சந்தித்துள்ளன. ரெனால்ட் நிறுவனம் மட்டும் 12.7 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இது மட்டுமல்ல டாப் 10 பட்டியலில் இல்லாத நிஸான் மற்றும் ஜீப் ஆகிய நிறுவனங்களும் முறையே 21.77 மற்றும் 14.20 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

மாருதி கிட்ட யாருமே நெருங்க முடியல . . . டாடாவும் தடுமாறிக்கிட்டே தான் இருக்குது . . .

கடந்தாண்டு பட்டியலை ஒப்பிடும் போது சிட்ரோன் நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்நிறுவனம் கடந்தாண்டு அக்டோபரில் வெறும் 64 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தாலும், கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 1195 கார்களை விற்பனை செய்து 1767 சதவீத வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. ஒரே ஆண்டில் சிட்ரோன் கார்கள் வளர்ச்சி பெற்றதற்கு அந்நிறுவனத்தின் சி3 கார் முக்கியமான காரணமாக இருக்கிறது.

மாருதி கிட்ட யாருமே நெருங்க முடியல . . . டாடாவும் தடுமாறிக்கிட்டே தான் இருக்குது . . .

இதுவே கடந்த செப்டம்பர் மாத விற்பனையை ஒப்பிடும் போது மாருதி, ஹூண்டாய், டாடா, மஹிந்திரா, கியா, டொயோட்டா, ஃபோக்ஸ்வேகன், ஸ்கோடா, நிஸான், சிட்ரோன், ஆகிய நிறுவனங்கள் எல்லாம் விற்பனையில் வீழ்ச்சியே சந்தித்துள்ளன. ஹோண்டா, ரெனால்ட், எம்ஜி, ஜீப் ஆகிய நிறுவனங்கள் மட்டும் வளர்ச்சியைச் சந்தித்துள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, November 3, 2022, 12:01 [IST]
English summary
Top 10 car manufacturers in India October 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+