2022 மார்ச்சில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்...!! முதல் 3 இடங்களில் மாருதி சுஸுகி தயாரிப்புகள்

கடந்த 2022 மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 பயணிகள் கார்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

2022 மார்ச்சில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்...!! முதல் 3 இடங்களில் மாருதி சுஸுகி தயாரிப்புகள்

இந்தியாவில் பயணிகள் விற்பனை என்றாலே அதில் மாருதி சுஸுகியின் ஆதிக்கம்தான் அதிகமாக இருக்கும் என்பது நமக்கு தெரிந்த விஷயமே. வழக்கம்போல் தற்போதைய டாப்-10 லிஸ்ட்டையும் மாருதி சுஸுகியின் சுமார் 7 மாடல்களே ஆக்கிரமித்துள்ளன. வழக்கமாக முதல் 5 இடங்கள் மாருதியின் வசமே இருக்கும்.

2022 மார்ச்சில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்...!! முதல் 3 இடங்களில் மாருதி சுஸுகி தயாரிப்புகள்

ஆனால் இம்முறை டாடா நெக்ஸான் பெரிய அளவில் ஏற்றம் கண்டுள்ளதால், முதல் 3 இடங்களை மட்டுமே தொடர்ச்சியாக மாருதி சுஸுகியால் பிடிக்க முடிந்துள்ளது. கடந்த மாதத்தில் இருப்பதிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக முதலிடத்தில் மாருதியின் உயரமான ஹேட்ச்பேக் காரான வேகன்ஆர் உள்ளது. கடந்த 2022 மார்ச் மாதத்தில் மொத்தம் 24,634 வேகன்ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

2022 மார்ச்சில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்...!! முதல் 3 இடங்களில் மாருதி சுஸுகி தயாரிப்புகள்

அதுவே 2021 மார்ச்சில் 18,757 வேகன்ஆர் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தோமேயானால், இந்த உயரமான ஹேட்ச்பேக் காரின் விற்பனை கிட்டத்தட்ட 31% அதிகரித்துள்ளது. இதற்கடுத்து 2வது இடத்தில் மாருதி டிசைர் 18,623 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில் டிசைரின் விற்பனையும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 63 சதவீதம் குறைவாக பதிவாகி இருந்தது.

2022 மார்ச்சில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்...!! முதல் 3 இடங்களில் மாருதி சுஸுகி தயாரிப்புகள்

ஏனெனில் 2021 மார்ச்சில் 11,434 டிசைர் செடான் கார்களே விற்பனையாகி இருந்தன. ஆனால் 2021 மார்ச்சில் சுமார் 21,217 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த மாருதி பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் கார் கடந்த மாதத்தில் அதனை காட்டிலும் 32% குறைவாக 14,520 யூனிட்களின் விற்பனை உடன் 3வது இடத்திற்கு சறுக்கியுள்ளது. ஏற்கனவே கூறியதுபோல் முதல் 3 இடங்களில் உள்ள இவை மூன்றும் மாருதி சுஸுகியின் தயாரிப்புகளாகும்.

2022 மார்ச்சில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்...!! முதல் 3 இடங்களில் மாருதி சுஸுகி தயாரிப்புகள்

4வது இடத்தை அனைவரையும் கவரும் விதமாக, குறிப்பாக நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி கார் வாடிக்கையாளர்களை பெருமைப்படுத்தும் விதமாக டாடா நெக்ஸான் பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட நெக்ஸான் கார்களின் எண்ணிக்கை 14,315 ஆகும். இது 2021 மார்ச்சில் விற்கப்பட்ட நெக்ஸான் கார்களுடன் ஒப்பிடுகையில் சுமார் 65% அதிகமாகும். ஏனென்றால் அந்த மாதத்தில் வெறும் 8,683 நெக்ஸான் கார்களையே டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது.

2022 மார்ச்சில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்...!! முதல் 3 இடங்களில் மாருதி சுஸுகி தயாரிப்புகள்

பலேனோவை போன்று கடந்த ஆண்டு மார்ச்சில் 21 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த மாருதி ஸ்விஃப்ட் கடந்த மாதத்தில் பெரிய விற்பனை சரிவுடன் (37% குறைவு) 5வது இடத்தை தனதாக்கியுள்ளது. மாருதி ஸ்விஃப்ட்டின் கடந்த மார்ச் மாத விற்பனை எண்ணிக்கை 13,623 ஆகும். ஆனால் டாடா நெக்ஸானுக்கு போட்டியாக விளங்கும் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா காம்பெக்ட் எஸ்யூவியின் விற்பனை 2021 மார்ச்சை காட்டிலும் 10% அதிகரித்துள்ளது.

2022 மார்ச்சில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்...!! முதல் 3 இடங்களில் மாருதி சுஸுகி தயாரிப்புகள்
Rank Model Mar'22 Mar'21 Growth (%)
1 Maruti WagonR 24,634 18,757 31
2 Maruti Dzire 18,623 11,434 63
3 Maruti Baleno 14,520 21,217 -32
4 Tata Nexon 14,315 8,683 65
5 Maruti Swift 13,623 21,714 -37
6 Maruti Vitara Brezza 12,439 11,274 10
7 Hyundai Creta 10,532 12,640 -17
8 Tata Punch 10,526 0 -
9 Hyundai Grand i10 9,687 11,020 -12
10 Maruti Eeco 9,221 11,547 -20

இவற்றிற்கு அடுத்து 7வது மற்றும் 8வது இடங்களில் ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் டாடா பஞ்ச் எஸ்யூவி மாடல்கள் முறையே 10,532 மற்றும் 10,526 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளன. இதில் க்ரெட்டா தற்போதைய விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் 17% அதிகமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 12,640 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. டாடா பஞ்ச் கடந்த ஆண்டு இறுதியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

2022 மார்ச்சில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்...!! முதல் 3 இடங்களில் மாருதி சுஸுகி தயாரிப்புகள்

இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் 9,687 யூனிட்களுடனும், மாருதி ஈக்கோ 9,221 யூனிட்களுடனும் பெற்றுள்ளன. இவை இரண்டின் கடந்த மாத விற்பனை 2021 மார்ச்சை காட்டிலும் முறையே 12% மற்றும் 20% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் இந்த இரு கார்களின் விற்பனை எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்திருந்தது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 5, 2022, 10:31 [IST]
English summary
Top 10 car sales march 2022 wagon r baleno nexon swift brezza details
மேலும்... #விற்பனை #sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+