கார்கள் ஏற்றுமதியிலும் முன்னிலையில் மாருதி சுஸுகி!! எந்த கார் அதிகமாக எக்ஸ்போர்ட் ஆகுதுனு தெரியுமா?
கடந்த 2022 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட டாப்-10 கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

இந்தியா பல வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு உற்பத்தி மையமாக விளங்குவதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஏனெனில் நம் நாட்டில் கார் பாகங்களின் விலை மலிவானதாகவும், தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்திலும் கிடைக்கின்றனர். இதுவே பல கார் பிராண்ட்களை இந்தியாவை நோக்கி இழுக்கிறது.

அதுமட்டுமின்றி, சீனா, அமெரிக்காவிற்கு அடுத்து உலகளவில் இந்தியா மிக பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக விளங்குகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சந்தைகளுக்கு மொத்தம் 40,787 பயணிகள் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த 2021 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஏற்றுமதி எண்ணிக்கை கிட்டத்தட்ட 11.85% அதிகமாகும்.

ஏனெனில் 2021 ஜனவரியில் வெறும் 36,467 கார்களே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி, வெளிநாட்டு ஏற்றுமதியிலும் மாருதி கார்களே சிறப்பாக செயல்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் மாருதி சுஸுகியின் பலேனோ பிரீமியம் ஹேட்ச்பேக் மற்றும் டிசைர் கார்கள் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட கார்களாக முதல் இரு இடங்களை பிடித்துள்ளன.

கடந்த மாதத்தில் இவை இரண்டும் முறையே 4,574 மற்றும் 3,217 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றின் ஏற்றுமதி 2021 ஜனவரியை காட்டிலும் சுமார் 126.66% மற்றும் 158.39% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 2,018 பலேனோ கார்களும், 1,245 டிசைர் கார்களே ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன. இந்த இரு மாருதி கார்களுக்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் 3வது மற்றும் 4வது இடங்களை கியாவின் செல்டோஸ் & சொனெட் மாடல்கள் பிடித்துள்ளன.

இவற்றின் ஏற்றுமதி எண்ணிக்கையும் 2021 ஜனவரி உடன் ஒப்பிடுகையில் 62.10% மற்றும் 40.44% அதிகரித்துள்ளது. ஏனெனில் 2021 ஜனவரியில் 1,897 கியா செல்டோஸ் கார்களும், 1,721 சொனெட் கார்களும் ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இவற்றின் ஏற்றுமதி எண்ணிக்கை கடந்த மாதத்தில் 3,075 மற்றும் 2,417 யூனிட்களாக பதிவாகியுள்ளது. 5வது இடத்தில் மீண்டும் மாருதி சுஸுகி தயாரிப்பாக விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி உள்ளது.

கடந்த மாதத்தில் மொத்தம் 2,007 பிரெஸ்ஸா கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த காரின் ஏற்றுமதியும் 1,564 விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த 2021 ஜனவரியை காட்டிலும் 28.32% அதிகமாகும். ஆனால் இதற்கு அடுத்து 6வது மற்றும் 7வது இடங்களில் உள்ள கார்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டு ஜனவரியை காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளது.

6வது இடத்தில் ஹூண்டாய் வெர்னா பிரீமியம் செடான் கார் கடந்த மாதத்தில் 1,926 யூனிட்களும், 7வது இடத்தில் ஃபோக்ஸ்வேகன் வெண்டோ செடான் கார் 1,901 யூனிட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் இவற்றின் ஏற்றுமதி எண்ணிக்கை 2021 ஜனவரியில் இதனை காட்டிலும் முறையே 21.68% மற்றும் 14.94% அதிகமாக 2,459 மற்றும் 2,235 யூனிட்களாக பதிவாகியது.

ஆனால் இடையில், 8வது இடத்தில் உள்ள ஹூண்டாய் க்ரெட்டா மாடலின் கடந்த மாத ஏற்றுமதி 18.19% கடந்த மாதத்தில் அதிகரித்துள்ளது. 1,891 க்ரெட்டா கார்கள் கடந்த ஜனவரியில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த ஆண்டு ஜனவரியில் இந்த எண்ணிக்கை 1,600 யூனிட்கள் ஆகும். இதனை தொடர்ந்து மாருதி சுஸுகியின் எஸ்-பிரெஸ்ஸோ மற்றும் ஸ்விஃப்ட் கார்கள் இந்த வரிசையில் 9வது மற்றும் 10வது இடங்களில் உள்ளன.

இவற்றின் கடந்த மாத ஏற்றுமதி எண்ணிக்கை 1,810 மற்றும் 1,694 யூனிட்கள் ஆகும். ஆனால் இவற்றில் மாருதி எஸ்-பிரேஸ்ஸோ எஸ்யூவி 2021 ஜனவரியில் சுமார் 2,551 யூனிட்களுடன் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட காராக 2வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் எஸ்-பிரெஸ்ஸோவின் ஏற்றுமதி மட்டுமின்றி, ஸ்விஃப்ட் கார்களின் ஏற்றுமதியும் கடந்த ஜனவரியை காட்டிலும் கணிசமாக குறைந்துள்ளது.

ஆனால் 11வது இடத்தில் உள்ள ஹோண்டா சிட்டி கார்களை 2021 ஜனவரியை காட்டிலும் சுமார் 56.67% அதிகமாக தயாரிப்பு நிறுவனம் கடந்த மாதத்தில் ஏற்றுமதி செய்துள்ளது. 2021 ஜனவரியில் 1,080 சிட்டி கார்களை ஹோண்டா ஏற்றுமதி செய்து வைத்திருந்த நிலையில், கடந்த மாதத்தில் இந்த பிரபலமான செடான் காரின் ஏற்றுமதி எண்ணிக்கை 1,692 ஆக பதிவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications








