இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள்... டாடா நிறுவனம் செய்த தரமான சம்பவம்... என்னனு தெரியுமா?
இந்தியாவில் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் நடப்பாண்டு ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி வேகன் ஆர் முதல் இடத்தை பிடித்துள்ளது. இது ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 17,766 வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த எண்ணிக்கை 18,656 ஆக இருந்தது. இது 5 சதவீத வீழ்ச்சி என்றாலும், முதல் இடத்தை வேகன் ஆர் தன்வசப்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் மாருதி சுஸுகி எர்டிகா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது எம்பிவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 14,889 மாருதி சுஸுகி எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 8,644 ஆக மட்டுமே இருந்தது. இது 72 சதவீத வளர்ச்சியாகும். மாருதி சுஸுகி நிறுவனம் வெகு சமீபத்தில்தான் அப்டேட் செய்யப்பட்ட 2022 எர்டிகா காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த பட்டியலில் டாடா நெக்ஸான் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6,938 நெக்ஸான் கார்களை மட்டுமே டாடா விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 13,471 ஆக உயர்ந்துள்ளது. இது 94 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலிலேயே மிகப்பெரிய வளர்ச்சியை பதிவு செய்திருப்பது டாடா நெக்ஸான்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் ஹூண்டாய் க்ரெட்டா 4வது இடத்தை பிடித்துள்ளது. இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரலில் 12,463 ஆக இருந்த ஹூண்டாய் க்ரெட்டா காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரலில் 12,651 ஆக உயர்ந்துள்ளது. இது 2 சதவீத வளர்ச்சியாகும். ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் க்ரெட்டா காரின் நைட் எடிசனை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இதற்கிடையே இந்த பட்டியலில் மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரலில் 11,220 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரலில் 11,764 ஆக உயர்ந்துள்ளது. இது 5 சதவீத வளர்ச்சியாகும். மாருதி சுஸுகி நிறுவனம் வெகு விரைவில் விட்டாரா பிரெஸ்ஸா காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஈக்கோ ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11,469 ஆக இருந்த ஈக்கோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 11,154 ஆக குறைந்துள்ளது. இது 3 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் மாருதி சுஸுகி பலேனோ ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரலில் 16,384 ஆக இருந்த பலேனோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரலில் 10,938 ஆக குறைந்துள்ளது. இது 33 சதவீத வீழ்ச்சியாகும். மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட 2022 பலேனோ காரையும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. எனவே வரும் மாதங்களில் விற்பனை உயரலாம்.

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி டிசையர் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரலில் 14,073 ஆக இருந்த மாருதி சுஸுகி டிசையர் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரலில் 10,701 ஆக குறைந்துள்ளது. இது 24 சதவீத வீழ்ச்சியாகும். மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் டிசையர் காரில் புதிய சிஎன்ஜி மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஆல்டோ ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரலில் 17,303 ஆக இருந்த ஆல்டோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஏப்ரலில் 10,443 ஆக குறைந்துள்ளது. இது 40 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் பத்தாவது மற்றும் கடைசி இடத்தை டாடா பன்ச் பிடித்துள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் மாதம் 10,132 பன்ச் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

டாடா பன்ச் கார் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட முடியாது. பன்ச் கார் தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான கார்களில் ஒன்றாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications








