இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை... டாடா உடன் போட்டிக்கு யாருமே இல்ல!! மஹிந்திரா டஃப் கொடுக்குமா?

கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் அதிகளவில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த கார் பிராண்ட்களை அட்டவணையுடன் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை... டாடா உடன் போட்டிக்கு யாருமே இல்ல!! மஹிந்திரா டஃப் கொடுக்குமா?

இந்தியா, உலகின் மிக பெரும் ஆட்டோமொபைல் சந்தை என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இதனால் எதிர்காலத்திலும் எலக்ட்ரிக் கார்களுக்கு நம் நாடு பெரிய மார்க்கெட்டாக விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை... டாடா உடன் போட்டிக்கு யாருமே இல்ல!! மஹிந்திரா டஃப் கொடுக்குமா?

இதனாலேயே மஹிந்திரா போன்ற முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் வரும் ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. சரி, தற்போதைக்கு இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை எந்த அளவிற்கு உள்ளது என்று பார்த்தால், கடந்த 2022 ஆகஸ்ட் மாத விற்பனையில் வழக்கம்போல் டாடா மோட்டார்ஸின் கையே ஓங்கியுள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை... டாடா உடன் போட்டிக்கு யாருமே இல்ல!! மஹிந்திரா டஃப் கொடுக்குமா?

கடந்த மாதத்தில் மொத்தமாக 3,237 எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆயிரத்திற்கும் ஒரு யூனிட் குறைவாக 999 எலக்ட்ரிக் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது கடந்த 1 வருடத்தில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை ஆனது இந்தியாவில் 224.02% அதிகரித்துள்ளது.

Rank Electric Car Aug-22 Aug-21 Growth (%) YoY
1 Tata Nexon / Tigor EV 2,747 575 377.74
2 MG ZS EV 311 377 -17.51
3 Hyundai Kona EV 69 12 475.00
4 BYD e6 44 0 -
5 BMW iX / i4 25 0 -
6 Mahindra eVerito 17 16 6.25
7 Auto etron 13 10 30.00
8 Porsche Taycan 7 0 -
9 Mercedes-Benz EQC 4 2 100.00
10 Others 0 7 -100.00
இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை... டாடா உடன் போட்டிக்கு யாருமே இல்ல!! மஹிந்திரா டஃப் கொடுக்குமா?
Rank Electric Car Aug-22 Jul-22 Growth (%) MoM
1 Tata Nexon / Tigor EV 2,747 2,878 -4.55
2 MG ZS EV 311 263 18.25
3 Hyundai Kona EV 69 58 18.97
4 BYD e6 44 44 0.00
5 BMW iX / i4 25 5 400.00
6 Mahindra eVerito 17 26 -34.62
7 Auto etron 13 7 85.71
8 Porsche Taycan 7 7 0.00
9 Mercedes-Benz EQC 4 2 100.00
10 Others 0 5 -100.00

கடந்த 2022 ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போதும், கடந்த ஆகஸ்ட்டில் 148 எலக்ட்ரிக் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போதைக்கு இந்தியாவின் நம்பர்.01 எலக்ட்ரிக் கார்கள் பிராண்டாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் கடந்த மாதத்தில் மொத்தமாக 2,747 எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை... டாடா உடன் போட்டிக்கு யாருமே இல்ல!! மஹிந்திரா டஃப் கொடுக்குமா?

2021 ஆகஸ்ட்டில் விற்பனை செய்யப்பட்ட 575 டாடா எலக்ட்ரிக் கார்களுடன் ஒப்பிடுகையில் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை கிட்டத்தட்ட 377.74% அதிகம் என்றாலும், 2022 ஜூலையில் இதனை காட்டிலும் 131 யூனிட்கள் அதிகமாக மொத்தம் 2,878 டாடா எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை... டாடா உடன் போட்டிக்கு யாருமே இல்ல!! மஹிந்திரா டஃப் கொடுக்குமா?

தற்சமயம் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மொத்த எலக்ட்ரிக் கார்களில் டாடா மோட்டார்ஸின் பங்கு தான் மிக அதிகமாகும். எந்த அளவிற்கு என்றால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மொத்த எலக்ட்ரிக் கார்களில் சுமார் 84.86% டாடா எலக்ட்ரிக் கார்களாகும். டாடா பிராண்டில் இருந்து தற்போதைக்கு நெக்ஸான் இவி & டிகோர் இவி என இரு எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை... டாடா உடன் போட்டிக்கு யாருமே இல்ல!! மஹிந்திரா டஃப் கொடுக்குமா?

டாடா மோட்டார்ஸுக்கு அடுத்து மிக பெரும் இடைவெளியுடன் எம்ஜி மோட்டார் 2வது இடத்தில் உள்ளது. எம்ஜி பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படும் ஒரேயொரு எலக்ட்ரிக் காரான இசட்.எஸ் இவி கடந்த மாதத்தில் 311 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாகவே எம்ஜி எலக்ட்ரிக் கார்களின் விற்பனை ஆனது இந்த அளவில் தான் உள்ளது.ஹூண்டாய் மோட்டார்ஸின் கோனா இவி 69 யூனிட்களின் விற்பனை உடன் 3வது இடத்தை பிடித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 14, 2022, 11:04 [IST]
English summary
Top 10 electric car sales august 2022 tata nexon ev mg zs ev hundai kona ev and more
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+