எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முதலிடத்தில் டாடா மோட்டார்ஸ்!! இப்போதைக்கு, போட்டிக்கு எதுவுமில்லை!

கடந்த 2022 ஜூன் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்கள் குறித்த விபரங்களை, அவற்றின் விற்பனை எண்ணிக்கைகளுடன் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முதலிடத்தில் டாடா மோட்டார்ஸ்!! இப்போதைக்கு, போட்டிக்கு எதுவுமில்லை!

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை இந்தியாவில் கடந்த சில வருடங்களாக நன்கு வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக இருசக்கர வாகனங்களையும், அதிலிலும் குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் வாங்குவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முதலிடத்தில் டாடா மோட்டார்ஸ்!! இப்போதைக்கு, போட்டிக்கு எதுவுமில்லை!

ஆனால் கடந்த ஆண்டில் இதே ஜூன் மாதத்தில் 766 எலக்ட்ரிக் கார்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன. இதன்படி, நம் நாட்டில் கடந்த ஜூன் மாதத்தில் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை ஆனது கிட்டத்தட்ட 303.26% அதிகரித்துள்ளது. இந்திய சந்தையில் அதிகளவில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக தற்சமயம் டாடா மோட்டார்ஸ் விளங்குகிறது.

எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முதலிடத்தில் டாடா மோட்டார்ஸ்!! இப்போதைக்கு, போட்டிக்கு எதுவுமில்லை!

இந்த நிறுவனத்தின் நெக்ஸான் இவி மற்றும் டிகோர் இவி நம் நாட்டில் அதிகளவில் விற்பனையாகக்கூடிய எலக்ட்ரிக் கார்களாக விளங்குகின்றன. இவை இரண்டும் கடந்த மாதத்தில் மொத்தமாக 2,709 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2021 ஜூன் மாதத்தில் இவை இரண்டையும் வெறும் 582 யூனிட்கள் மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முதலிடத்தில் டாடா மோட்டார்ஸ்!! இப்போதைக்கு, போட்டிக்கு எதுவுமில்லை!

இந்த வகையில் பார்த்தோமேயானால், இந்த டாடா எலக்ட்ரிக் கார்களின் விற்பனை சுமார் 365.46% அதிகரித்துள்ளது. இவ்வாறு தனது எலக்ட்ரிக் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதினால் அவற்றின் வேரியண்ட்கள் வரிசையை விரிவுப்படுத்துவதையும், அவற்றை புதுப்பிப்பதையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முழு மூச்சாக கொண்டுள்ளது.

எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முதலிடத்தில் டாடா மோட்டார்ஸ்!! இப்போதைக்கு, போட்டிக்கு எதுவுமில்லை!

இதன்படி, சில மாதங்களுக்கு முன்னர் நெக்ஸான் இவி மாடலின் அதிக ரேஞ்ச் வெர்சனாக நெக்ஸான் மேக்ஸ் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, சமீபத்தில் நெக்ஸான் பிரைம் இவி என்ற புதிய கார் அப்டேட் செய்யப்பட்ட வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வரும் மாதங்களில் டாடா எலக்ட்ரிக் கார்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.

எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முதலிடத்தில் டாடா மோட்டார்ஸ்!! இப்போதைக்கு, போட்டிக்கு எதுவுமில்லை!

இந்த வரிசையில் இவற்றிற்கு அடுத்து இந்தியாவில் அதிகம் விற்பனையாகக்கூடிய எலக்ட்ரிக் காராக எம்ஜி மோட்டாரின் இசட்.எஸ் இவி உள்ளது. இந்த எம்ஜி எலக்ட்ரிக் கார் கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 232 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இசட்.எஸ் இவி-இன் 2021 ஜூன் மாத விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் 45% அதிகம் என்றாலும், கடந்த 2022 மே மாதத்தை காட்டிலும் 15 யூனிட்கள் குறைவாகும்.

எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முதலிடத்தில் டாடா மோட்டார்ஸ்!! இப்போதைக்கு, போட்டிக்கு எதுவுமில்லை!

3வது மற்றும் 4வது இடங்களில் ஹூண்டாய் கோனோ இவி-யும், பிஒய்டி இ6 எலக்ட்ரிக் காரும் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 52 மற்றும் 48 ஆகும். இதில் பிஒய்டி இ6 ஆனது கடந்த ஆண்டு நவம்பரில் தான் இந்தியாவில் அறிமுகமானது. இவற்றிற்கு அடுத்து கடந்த ஜூனில் இந்தியாவில் விற்பனையான எலக்ட்ரிக் கார்களை கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.

Rank Model Jun-22 Jun-21 Growth (%) YoY
1 Tata Nexon / Tigor 2,709 582 365.46
2 MG ZS EV 232 160 45
3 Hyundai Kona EV 52 12 333.33
4 BYD e6 48 0 -
5 Mahindra eVerito 20 8 150.00
6 Audi e-tron 14 1 1300.00
7 BMW iX/ i4 5 0 -
8 Porsche Taycan 3 0 -
9 Jaguar i-Pace 3 1 200.00
10 Mercedes-Benz EQC 1 2 -50.00
11 Others 2 0 -
- Total 3,089 766 303.26

More from DriveSpark

Article Published On: Thursday, July 28, 2022, 18:32 [IST]
English summary
Top 10 electric cars june 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+