இந்தியாவில் மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார்கள்... கெத்து காட்டிய மாருதி தயாரிப்பு!

இந்தியாவில் கடந்த மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார்கள்... கெத்து காட்டிய மாருதி தயாரிப்பு!

இந்தியாவில் நடப்பாண்டு மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி வேகன் ஆர் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 18,656 வேகன் ஆர் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 17,766 ஆக குறைந்துள்ளது. இது 5 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்தியாவில் மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார்கள்... கெத்து காட்டிய மாருதி தயாரிப்பு!

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி பலேனோ இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 16,384 பலேனோ கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 10,938 ஆக குறைந்துள்ளது. இது 33 சதவீத வீழ்ச்சியாகும். மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பாண்டில்தான் வேகன் ஆர் மற்றும் பலேனோ கார்களின் 2022 மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார்கள்... கெத்து காட்டிய மாருதி தயாரிப்பு!

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஆல்டோ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 17,303 ஆக இருந்த ஆல்டோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 10,443 ஆக குறைந்துள்ளது. இது 40 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவில் மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார்கள்... கெத்து காட்டிய மாருதி தயாரிப்பு!

கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 11,540 ஆக இருந்த ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 9,123 ஆக குறைந்துள்ளது. இது 21 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 18,316 ஆக இருந்த ஸ்விஃப்ட் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 8,898 ஆக குறைந்துள்ளது. இது 51 சதவீத சரிவாகும்.

இந்தியாவில் மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார்கள்... கெத்து காட்டிய மாருதி தயாரிப்பு!

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி செலிரியோ ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு மே மாதம் மாருதி சுஸுகி நிறுவனம் 7,066 செலிரியோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 367 ஆக இருந்தது. இதன் மூலம் மாருதி சுஸுகி செலிரியோ கார் விற்பனையில் 1,825 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார்கள்... கெத்து காட்டிய மாருதி தயாரிப்பு!

இந்த பட்டியலில் மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7,738 எஸ்-பிரெஸ்ஸோ கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 6,694 ஆக குறைந்துள்ளது. இது 13 சதவீத வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார்கள்... கெத்து காட்டிய மாருதி தயாரிப்பு!

இந்த பட்டியலில் டாடா டியாகோ எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு மே மாதம் 5,062 டியாகோ கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 6,656 ஆக இருந்தது. இதன் காரணமாக டாடா டியாகோ காரின் விற்பனை 24 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இந்தியாவில் மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார்கள்... கெத்து காட்டிய மாருதி தயாரிப்பு!

இந்த பட்டியலில் ஹூண்டாய் ஐ20 கார் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. ஹூண்டாய் இந்தியா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 5,002 ஐ20 கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு மே மாதம் இந்த எண்ணிக்கை 4,707 ஆக குறைந்துள்ளது. இது 6 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் பத்தாவது மற்றும் கடைசி இடத்தை ஹூண்டாய் ஐ20 காரின் நேர் எதிர் போட்டி மாடலான டாடா அல்ட்ராஸ் பிடித்துள்ளது.

இந்தியாவில் மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார்கள்... கெத்து காட்டிய மாருதி தயாரிப்பு!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பாண்டு மே மாதம் 4,266 அல்ட்ராஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 6,649 ஆக இருந்தது. இதன் காரணமாக டாடா அல்ட்ராஸ் காரின் விற்பனை 36 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த பட்டியலில் மாருதி சுஸுகி செலிரியோ தவிர மற்ற அனைத்து கார்களுமே விற்பனையில் வீழ்ச்சியைதான் பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் கார்கள்... கெத்து காட்டிய மாருதி தயாரிப்பு!

மாருதி சுஸுகி நிறுவனம் செலிரியோ காரின் புதிய தலைமுறை மாடலை கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதன் பின் அந்த காரின் விற்பனை தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இது இந்தியாவில் அதிக மைலேஜ் வழங்க கூடிய பெட்ரோல் இன்ஜின் கார்களில் ஒன்றாகும். இது இந்த காரின் பிரம்மாண்டமான வெற்றிக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, June 12, 2022, 12:07 [IST]
English summary
Top 10 hatchbacks in may 2022 maruti suzuki wagon r leads chart
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+