இந்த கார்களை வாங்க இந்தியாவே காத்துக்கிடக்கிறது... எந்தெந்த காருக்கு எவ்வளவு காலம் தெரியுமா?
இந்தியாவில் புக் செய்துவிட்டு அதிக காலம் காத்திருக்க வேண்டிய டாப் 10 கார்களின் பட்டியலை கீழே காணுங்கள்

ரஷ்யா உக்ரைன் போரால் உலகம் முழுவதும் ஏற்பட்ட நியான் வாயு தட்டுப்பாட்டால் செமி கண்டெக்டர் சிப்கள் தயாரிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால உலகம் முழுவதும் வாகன உற்பத்திகள் முடங்கிப்போய் உள்ளன. இந்நிலையில் வாகனவ தயாரிப்பு நிறுவனங்கள் சரியான நேரத்தில் வாகனத்தை டெலிவரி செய்ய முடியாமல் திண்டாடி வருகின்றன. இந்த செய்தியில் நாம் இந்தியாவில் புக் செய்து அதிக காலம் காத்திருக்க வேண்டிய டாப் 10 கார்களை பற்றி காணலாம் வாருங்கள்

4 மாதம் காத்திருப்பு
இந்தியாவிலேயே புக் செய்து குறைவான காத்திருப்பு காலம் கொண்ட கார்கள் மாருதி சுஸூகி நிறுவனத்தின் பலேனோ மற்றும் ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லாவியா ஆகிய கார்கள்தான். இதில் மாருதி பலேனோ கார் இந்தியாவின் சிறப்பாக விற்பனையாகும் பிரிமியம் ஹெட்ச் பேக் காராக உள்ளது. அதிக மைலேஜ் தருவதால் இந்த காருக்கு ஏகப்பட்ட டிமாண்ட் உள்ளது. அதனால் இந்த கார் புக் செய்தால் 4 மாதத்திற்கு பிறகு தான் டெலிவரி கிடைக்கும்.

ஸ்கோடா ஸ்லாவியா காரை பொறுத்தவரை இந்தியாவில் குறைவான விற்பனையாகும் சி செக்மெண்ட் செடான் ரக காராக உள்ளது. இதனால் இதன் உற்பத்தி குறைவாக இருப்பதால் இந்த காருக்கும் 4 மாதம் வரை காத்திருப்பு இருக்கிறது. இந்த காலம் வேரியன்ட் மற்றும் டீலர் ஷிப்பை பொறுத்து மாறுபடும்.

6 மாதம் காத்திருப்பு
இந்தியாவில் சமீபதமாக காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்கள் அதிகம் விற்பனையாகின்றன. அந்த கேட்டகிரியில் உள்ள பல கார்கள் இந்த பட்டியலில் வருகிறது. முதலாவதாக வருவது எம்ஜி அஸ்டார் கார் உள்ளது. இந்த கார் எலெக்ட்ரிக் டிரைவர் எய்டு சிஸ்டம் இருப்பதால் பாதுகாப்பான காராக உள்ளது. அதனாலேயே இந்த காருக்கு டிமாண்ட் உள்ளது. வேரியன்ட் மற்றும் டீலர் ஷிப்பை பொறுத்து 6 மாதம் வரை இதற்கு காத்திருப்பு காலம் உள்ளது.

அடுத்ததாக இருப்பது ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா கார். இந்த கார் நீண்டகாலமாக அதிகம் விற்பனையாகும் காராக உள்ளது. இதற்கு முன்னர் இந்த காருக்கான காத்திருப்பு காலம் அதிகமாக இருந்தது. கடந்த ஓராண்டாக இது 6 மாதமாக குறைந்துள்ளது. இந்த காத்திருப்பு காலம் டீலர் ஷிப் மற்றும் வேரியன்டை பொறுத்து மாறுபடும்.

கியா சோனட் கார் இந்த பட்டியலில் அடுத்த காராக உள்ளது. இது 4 மீட்டருக்கும் குறைவான எஸ்யூவி கார்களின் மிகவும் பிரபலம் இந்த காருக்கும், இதே போல ஹோண்டா சிட்டி இ:எச்இவி ஹைபிரிட் காருக்கும் 3-6 மாதம்வரை காத்திருப்பு காலம் இருக்கிறது. இது டீலர் மற்றும் வேரியன்ட்டை பொறுத்து மாறுபடும்.

| Model | Waiting Period |
| Maruti Baleno | Up to 4 Months |
| Skoda Slavia | Up to 4 Months |
| Honda City e:HEV | Up to 6 Months |
| Hyundai Creta | Up to 6 Months |
| Kia Sonet | Up to 6 Months |
| MG Astor | Up to 6 Months |
| Maruti Ertiga | Up to 10 Months |
| Mahindra Thar | Up to 11 Months |
| Kia Carens | Up to 18 Months |
| Mahindra XUV700 | Up to 20 Months |

1 வருடம் காத்திருப்பு
மஹிந்திரா நிறுவனம் தார் என்ற காரை விற்பனை செய்கிறது. ஆஃப் ரோடு டிரைவிங் செய்யும் நபர்களுக்கு இந்த கார் பெரும் கவர்ச்சியை உண்டாக்கியுள்ளது. என்பதால் இந்த காருக்கு மார்கெட்டில் பயங்கரமான மவுசு உள்ளது. இந்த காரின் லுக்கிற்காக பலர் இந்த காருக்காக காத்திருக்க தயாராக உள்ளனர். இந்த காருக்கான காத்திருப்பு காலம் 11-12 மாதங்கள் வரை இருக்கிறது. டீலர்ஷிப் மற்றும் வேரியன்டை பொருத்து இந்த காலம் மாறுபடும்.

மாருதி எர்டிகா காருக்கும் இந்த ரகத்தில் வருகிறது. இந்த கார் 7 சீட்டர் சொகுசு, மற்றும் நல்ல லுக்கிற்காக இந்த காருக்கும் மக்கள் மத்தியில் நல்ல மவுசு உள்ளது. இந்த காருக்கான காத்திருப்பு காலம் 10-12 மாதங்கள் வரை இருக்கிறது. வேரியன்ட் மற்றும் டீலர் ஷிப்பை பொறுத்து இந்த காருக்கான காத்திருப்பு காலம் மாறுபடும்.

20 மாதம் காத்திருப்பு
கியா நிறுவனம் கேரன்ஸ் என்ற காரை அறிமுகப்படுத்தியபோது மார்கெட்டில் அந்த காருக்கு நல்ல வரவேற்ப்பு இருந்தது. ரூ8.99 லட்சம் முதல் இந்த கார் விற்பனையாகிறது. இந்த காரின் பெட்ரோல் வேரியன்ட்களான பிரிமியம் மற்றும் பிரஷ்டீஸ் கார்களுக்கு காத்திருப்பு காலம் 1.5 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. மற்ற வேரியன்ட்களுக்கு 3-8 மாதம் வரை காத்திருப்பு காலம் உள்ளது.

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி 700 என்ற காரை அறிமுகப்படுத்தியது. இது நவீன தொழிற்நுட்பம் மற்றும் பவர்புஃல் இன்ஜின் உடன் இந்தியர்களின் ரசனைக்கு ஏற்ப இருக்கிறது. இந்த காரின் ஒவ்வொரு வேரியன்டிற்கும் ஒவ்வொ காத்திருப்பு காலம் இருக்கிறது. இது டீலரை பொறுத்து கூட மாறுபடலாம் ஆனால் குறைந்தது 4 மாதம் முதல் 20 மாதம் வரை கூட இந்த காருக்கான காத்திருப்பு காலம் இருக்கிறது.

இந்தியர்கள் பலர் தங்களுக்கு பிடித்த கார்களை வாங்க 1.5 ஆண்டுகளுக்கும் மேல் கூட காத்திருக்க தயாராக இருக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. உங்களுக்கு படித்த கார் இந்த பட்டியலில் இருக்கிறதா? நீங்கள் உங்களுக்கு பிடித்த காரை வாங்க எவ்வளவு காலம் காத்திருப்பீர்கள்? கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








