ஹூண்டாய், கியா எல்லாமே டவுன்... தனி ஆளாக கெத்து காட்டும் டாடா கார்... சேல்ஸ் சும்மா பிச்சு ஒதறுது!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனையான டாப்-10 மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய், கியா எல்லாமே டவுன்... தனி ஆளாக கெத்து காட்டும் டாடா கார்... சேல்ஸ் சும்மா பிச்சு ஒதறுது!

இந்தியாவில் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 மிட்-சைஸ் எஸ்யூவி கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹூண்டாய் கிரெட்டா முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரியில் 12,248 ஆக இருந்த ஹூண்டாய் கிரெட்டா காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரியில் 9,606 ஆக சரிந்துள்ளது. இது 22.7 சதவீத வீழ்ச்சியாகும்.

ஹூண்டாய், கியா எல்லாமே டவுன்... தனி ஆளாக கெத்து காட்டும் டாடா கார்... சேல்ஸ் சும்மா பிச்சு ஒதறுது!

தற்போது நிலவி வரும் செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை காரணமாக ஹூண்டாய் கிரெட்டா காரின் விற்பனை குறைந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதற்கிடையே இந்த பட்டியலில் ஹூண்டாய் கிரெட்டாவின் முக்கிய போட்டியாளரான கியா செல்டோஸ் கார் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரியில் 8,305 ஆக இருந்த கியா செல்டோஸ் காரின் விற்பனை நடப்பாண்டு பிப்ரவரியில் 6,575 ஆக குறைந்துள்ளது. இது 20.8 சதவீத வீழ்ச்சியாகும்.

ஹூண்டாய், கியா எல்லாமே டவுன்... தனி ஆளாக கெத்து காட்டும் டாடா கார்... சேல்ஸ் சும்மா பிச்சு ஒதறுது!

இந்த பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் மஹிந்திரா நிறுவனம் 4,138 எக்ஸ்யூவி700 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த கார் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை 2021ம் ஆண்டுடன் ஒப்பிட முடியாது.

ஹூண்டாய், கியா எல்லாமே டவுன்... தனி ஆளாக கெத்து காட்டும் டாடா கார்... சேல்ஸ் சும்மா பிச்சு ஒதறுது!

இந்த பட்டியலில் டாடா ஹாரியர் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரியில் 2,030 ஆக இருந்த டாடா ஹாரியர் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரியில் 2,619 ஆக உயர்ந்துள்ளது. இது 29 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

ஹூண்டாய், கியா எல்லாமே டவுன்... தனி ஆளாக கெத்து காட்டும் டாடா கார்... சேல்ஸ் சும்மா பிச்சு ஒதறுது!

கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரியில் 3,532 ஆக இருந்த மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரியில் 2,610 ஆக குறைந்துள்ளது. இது 26 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹூண்டாய் அல்கஸார் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரியில் 3,725 ஆக இருந்த ஹூண்டாய் அல்கஸார் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரியில் 2,516 ஆக குறைந்துள்ளது.

ஹூண்டாய், கியா எல்லாமே டவுன்... தனி ஆளாக கெத்து காட்டும் டாடா கார்... சேல்ஸ் சும்மா பிச்சு ஒதறுது!

இது 9.5 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு பிப்ரவரி மாதம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 2,388 டைகுன் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த கார் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையையும் கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிட முடியாது.

ஹூண்டாய், கியா எல்லாமே டவுன்... தனி ஆளாக கெத்து காட்டும் டாடா கார்... சேல்ஸ் சும்மா பிச்சு ஒதறுது!

இந்த பட்டியலில் ஸ்கோடா குஷாக் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு பிப்ரவரியில் ஸ்கோடா நிறுவனம் 2,307 குஷாக் கார்களை விற்பனை செய்துள்ளது. ஸ்கோடா குஷாக் கார் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையையும் கடந்தாண்டு பிப்ரவரியுடன் ஒப்பிட முடியாது.

ஹூண்டாய், கியா எல்லாமே டவுன்... தனி ஆளாக கெத்து காட்டும் டாடா கார்... சேல்ஸ் சும்மா பிச்சு ஒதறுது!

இந்த பட்டியலில் எம்ஜி அஸ்டர் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. எம்ஜி நிறுவனம் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 2,275 அஸ்டர் கார்களை விற்பனை செய்துள்ளது. எம்ஜி அஸ்டர் கார் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையையும் கடந்தாண்டு பிப்ரவரியுடன் ஒப்பிட முடியாது.

ஹூண்டாய், கியா எல்லாமே டவுன்... தனி ஆளாக கெத்து காட்டும் டாடா கார்... சேல்ஸ் சும்மா பிச்சு ஒதறுது!

இந்த பட்டியலில் கடைசி மற்றும் பத்தாவது இடத்தை எம்ஜி ஹெக்டர் பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3,662 ஆக இருந்த எம்ஜி ஹெக்டர் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு பிப்ரவரி மாதம் 2,102 ஆக குறைந்துள்ளது. இது 42.5 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் டாடா ஹாரியர் கார் மட்டுமே விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஹூண்டாய், கியா எல்லாமே டவுன்... தனி ஆளாக கெத்து காட்டும் டாடா கார்... சேல்ஸ் சும்மா பிச்சு ஒதறுது!

இதனுடன் கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விற்பனையில் இல்லாத கார்களை தவிர்த்து விட்டு பார்த்தால், எஞ்சிய அனைத்து கார்களுமே விற்பனையில் வீழ்ச்சியைதான் பதிவு செய்துள்ளன. இதற்கு செமி கண்டக்டர் சிப் பற்றாக்குறை ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. சிப் பற்றாக்குறையால் கார்களின் உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 10, 2022, 12:21 [IST]
English summary
Top 10 mid size suv s in february 2022 hyundai creta leads chart
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+