எஸ்யூவி கிங்! மஹிந்திரா ஸ்கார்பியோ சேல்ஸ் கிடுகிடு! புது மாடல் வந்ததுக்கு அப்புறம் இன்னும் தூள் கௌப்ப போகுது!

கடந்த மார்ச் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 மிட்-சைஸ் எஸ்யூவி கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எஸ்யூவி கிங்! மஹிந்திரா ஸ்கார்பியோ சேல்ஸ் கிடுகிடு! புது மாடல் வந்ததுக்கு அப்புறம் இன்னும் தூள் கௌப்ப போகுது!

இந்தியாவில் நடப்பாண்டு மார்ச் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 மிட்-சைஸ் எஸ்யூவி கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஹூண்டாய் கிரெட்டா முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 12,640 ஆக இருந்த ஹூண்டாய் கிரெட்டாவின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மார்ச் மாதம் 10,532 ஆக குறைந்துள்ளது. இது 17 சதவீத வீழ்ச்சியாகும்.

எஸ்யூவி கிங்! மஹிந்திரா ஸ்கார்பியோ சேல்ஸ் கிடுகிடு! புது மாடல் வந்ததுக்கு அப்புறம் இன்னும் தூள் கௌப்ப போகுது!

இந்த பட்டியலில் கியா செல்டோஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 10,557 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மார்ச் மாதம் 8,415 ஆக குறைந்துள்ளது. இது 20 சதவீத வீழ்ச்சியாகும். ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார்களின் வருகை, கிரெட்டா மற்றும் செல்டோஸ் கார்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்யூவி கிங்! மஹிந்திரா ஸ்கார்பியோ சேல்ஸ் கிடுகிடு! புது மாடல் வந்ததுக்கு அப்புறம் இன்னும் தூள் கௌப்ப போகுது!

இந்த பட்டியலில் மஹிந்திரா ஸ்கார்பியோ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 2,331 ஆக இருந்த ஸ்கார்பியோ காரின் விற்பனை, நடப்பாண்டு மார்ச் மாதம் 6,061 ஆக உயர்ந்துள்ளது. இது 160 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலிலேயே மிக அதிக வளர்ச்சி சதவீதத்தை பதிவு செய்திருப்பது ஸ்கார்பியோதான் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்யூவி கிங்! மஹிந்திரா ஸ்கார்பியோ சேல்ஸ் கிடுகிடு! புது மாடல் வந்ததுக்கு அப்புறம் இன்னும் தூள் கௌப்ப போகுது!

மஹிந்திரா நிறுவனம் தற்போது புதிய தலைமுறை ஸ்கார்பியோ காரை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. புதிய மாடல் வந்தபின் ஸ்கார்பியோ காரின் விற்பனை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த பட்டியலில் மஹிந்திராவின் மற்றொரு தயாரிப்பான எக்ஸ்யூவி700 நான்காவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதம் 6,040 எக்ஸ்யூவி700 கார்களை மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

எஸ்யூவி கிங்! மஹிந்திரா ஸ்கார்பியோ சேல்ஸ் கிடுகிடு! புது மாடல் வந்ததுக்கு அப்புறம் இன்னும் தூள் கௌப்ப போகுது!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை 2021ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட முடியாது. இந்த பட்டியலில் ஹூண்டாய் அல்கஸார் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதம் 2,502 அல்கஸார் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

எஸ்யூவி கிங்! மஹிந்திரா ஸ்கார்பியோ சேல்ஸ் கிடுகிடு! புது மாடல் வந்ததுக்கு அப்புறம் இன்னும் தூள் கௌப்ப போகுது!

ஹூண்டாய் நிறுவனம் அல்கஸார் காரை கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையையும் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட இயலாது. இந்த பட்டியலில் ஸ்கோடா குஷாக் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதம் 2,499 குஷாக் கார்களை ஸ்கோடா விற்பனை செய்துள்ளது.

எஸ்யூவி கிங்! மஹிந்திரா ஸ்கார்பியோ சேல்ஸ் கிடுகிடு! புது மாடல் வந்ததுக்கு அப்புறம் இன்னும் தூள் கௌப்ப போகுது!

ஸ்கோடா குஷாக் கார் கடந்த 2021ம் ஆண்டு ஜூன் மாதம்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பட்டியலில் டாடா ஹாரியர் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 2,284 ஆக இருந்த டாடா ஹாரியர் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மார்ச் மாதம் 2,491 ஆக உயர்ந்துள்ளது. இது 9 சதவீத வளர்ச்சியாகும்.

எஸ்யூவி கிங்! மஹிந்திரா ஸ்கார்பியோ சேல்ஸ் கிடுகிடு! புது மாடல் வந்ததுக்கு அப்புறம் இன்னும் தூள் கௌப்ப போகுது!

இந்த பட்டியலில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதம் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 2,380 டைகுன் கார்களை விற்பனை செய்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் டாடா சஃபாரி ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.

எஸ்யூவி கிங்! மஹிந்திரா ஸ்கார்பியோ சேல்ஸ் கிடுகிடு! புது மாடல் வந்ததுக்கு அப்புறம் இன்னும் தூள் கௌப்ப போகுது!

கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 2,148 ஆக இருந்த சஃபாரி காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மார்ச் மாதம் 2,277 ஆக உயர்ந்துள்ளது. இது 4 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் எம்ஜி அஸ்டர் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதம் எம்ஜி நிறுவனம் 2,248 அஸ்டர் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த கார் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்யூவி கிங்! மஹிந்திரா ஸ்கார்பியோ சேல்ஸ் கிடுகிடு! புது மாடல் வந்ததுக்கு அப்புறம் இன்னும் தூள் கௌப்ப போகுது!

இந்தியாவின் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் தொடர்ச்சியாக பல்வேறு புதிய கார்கள் களமிறக்கப்பட்டு வருகின்றன. வாடிக்கையாளர்கள் மத்தியில் கிடைத்து வரும் அமோக வரவேற்புதான் இதற்கான மிக முக்கியமான காரணம். வரும் காலங்களிலும் நிறைய புதிய கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுவதால், மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டி அனல் பறக்க போகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 9, 2022, 22:34 [IST]
English summary
Top 10 midsize suv cars in march 2022 creta leads chart
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+