கடந்த மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மிட்சைஸ் எஸ்யூவி கார்கள்... ஹூண்டாய் தயாரிப்பிற்கு முதலிடம்!

இந்தியாவில் கடந்த மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 மிட்சைஸ் எஸ்யூவி கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மிட்சைஸ் எஸ்யூவி கார்கள்... ஹூண்டாய் தயாரிப்பிற்கு முதலிடம்!

இந்தியாவில் கடந்த மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 மிட்சைஸ் எஸ்யூவி கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹூண்டாய் க்ரெட்டா முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7,527 க்ரெட்டா கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 10,973 ஆக உயர்ந்துள்ளது. இது 46 சதவீத வளர்ச்சியாகும்.

கடந்த மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மிட்சைஸ் எஸ்யூவி கார்கள்... ஹூண்டாய் தயாரிப்பிற்கு முதலிடம்!

ஹூண்டாய் க்ரெட்டா காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. அதற்கு பிறகு இந்த காரின் விற்பனை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் கியா செல்டோஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் கியா நிறுவனம் 4,277 செல்டோஸ் கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 5,953 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மிட்சைஸ் எஸ்யூவி கார்கள்... ஹூண்டாய் தயாரிப்பிற்கு முதலிடம்!

இது 39 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் மஹிந்திரா எக்ஸ்யூவி700 மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் நடப்பாண்டு மே மாதம் 5,069 எக்ஸ்யூவி700 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த கார் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் விற்பனையில் இல்லை. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை, கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிட முடியாது.

கடந்த மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மிட்சைஸ் எஸ்யூவி கார்கள்... ஹூண்டாய் தயாரிப்பிற்கு முதலிடம்!

இந்த பட்டியலில் மஹிந்திரா ஸ்கார்பியோ நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 1,782 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 4,348 ஆக உயர்ந்துள்ளது. இது 144 சதவீத வளர்ச்சியாகும். மஹிந்திரா நிறுவனம் வெகு விரைவில் ஸ்கார்பியோ காரின் புதிய தலைமுறை மாடலை களமிறக்கவுள்ளது.

கடந்த மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மிட்சைஸ் எஸ்யூவி கார்கள்... ஹூண்டாய் தயாரிப்பிற்கு முதலிடம்!

அதற்கு பிறகு மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் விற்பனை எண்ணிக்கை கிடுகிடுவென உயர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. மஹிந்திரா ஸ்கார்பியோ-என் என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு வரவுள்ளது. வரும் ஜூன் 27ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பதை மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்து விட்டது.

கடந்த மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மிட்சைஸ் எஸ்யூவி கார்கள்... ஹூண்டாய் தயாரிப்பிற்கு முதலிடம்!

இதற்கிடையே இந்த பட்டியலில் டாடா ஹாரியர் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 1,360 ஹாரியர் கார்களை மட்டுமே மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 2,794 ஆக உயர்ந்துள்ளது. இது 105 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் டாடா நிறுவனத்தின் புதிய சஃபாரி 6வது இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மிட்சைஸ் எஸ்யூவி கார்கள்... ஹூண்டாய் தயாரிப்பிற்கு முதலிடம்!

கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 1,536 ஆக இருந்த இந்த காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 2,242 ஆக உயர்ந்துள்ளது. இது 46 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் எம்ஜி அஸ்டர் கார் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. நடப்பாண்டு மே மாதம் எம்ஜி மோட்டார் நிறுவனம் 2,022 அஸ்டர் கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் எம்ஜி அஸ்டர் காரும் விற்பனையில் இல்லை. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையையும் கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிட முடியாது.

கடந்த மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மிட்சைஸ் எஸ்யூவி கார்கள்... ஹூண்டாய் தயாரிப்பிற்கு முதலிடம்!

இந்த பட்டியலில் ஹூண்டாய் அல்கஸார் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் ஹூண்டாய் நிறுவனம் 1,360 அல்கஸார் கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 1,947 ஆக உயர்ந்துள்ளது. இது 43 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் ஸ்கோடா குஷாக் ஒன்பதாவது இடத்தை தன்வசமாக்கியுள்ளது. நடப்பாண்டு மே மாதம் 1,806 ஸ்கோடா குஷாக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மிட்சைஸ் எஸ்யூவி கார்கள்... ஹூண்டாய் தயாரிப்பிற்கு முதலிடம்!

கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் ஸ்கோடா குஷாக் காரும் விற்பனையில் இல்லை. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையையும் கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிட இயலாது. இந்த பட்டியலில் பத்தாவது மற்றும் கடைசி இடம் எம்ஜி ஹெக்டர் காருக்கு கிடைத்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் எம்ஜி மோட்டார் நிறுவனம் 1,231 ஹெக்டர் கார்களை விற்பனை செய்திருந்தது.

கடந்த மே மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மிட்சைஸ் எஸ்யூவி கார்கள்... ஹூண்டாய் தயாரிப்பிற்கு முதலிடம்!

இந்த எண்ணிக்கை நடப்பாண்டு மே மாதம் 1,633 ஆக உயர்ந்துள்ளது. இது 33 சதவீத வளர்ச்சியாகும். இந்தியாவின் கார் சந்தையில் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் ஏற்கனவே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த சூழலில் மேலும் பல்வேறு கார்களும் இந்த செக்மெண்ட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன. அப்போது போட்டி இன்னும் கடுமையாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

Most Read Articles
English summary
Top 10 midsize suv s may 2022 hyundai creta leads chart
Story first published: Monday, June 6, 2022, 17:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X