நடுத்தர-எஸ்யூவி கார்கள் விற்பனையில் மீண்டும் முதலிடத்தில் கியா செல்டோஸ்!! க்ரெட்டா 2வது இடத்திற்கு சறுக்கல்!
குறைந்த விலையிலான எஸ்யூவி கார்கள் மட்டுமின்றி, சற்று விலைமிக்க நடுத்தர-அளவு & முழு-அளவு எஸ்யூவி கார்களும் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனாலேயே பெரும்பான்மையான மக்கள் வாங்கக்கூடிய சப்-காம்பெக்ட் மற்றும் காம்பெக்ட் எஸ்யூவி கார்களுடன் இத்தகைய அளவில் பெரிய எஸ்யூவி மாடல்களையும் குறைந்தது ஒன்றையாவது இந்தியாவில் விற்பனை செய்ய தயாரிப்பு நிறுவனங்கள் நோக்கமாக கொண்டுள்ளன.

விற்பனையில் உள்ள முழு-அளவு எஸ்யூவி கார்களின் எண்ணிக்கை பெரியதாக இல்லாவிடினும், நடுத்தர-அளவு எஸ்யூவி கார்கள் பிராண்டிற்கு ஒன்று சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கடந்த ஜனவரி மாதத்தில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

புதிய 2022ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட நடுத்தர-அளவு எஸ்யூவி காராக கியா செல்டோஸ் விளங்குகிறது. இதன் விற்பனை எண்ணிக்கை மட்டுமே கடந்த மாதத்தில் 10 ஆயிரம் யூனிட்கள் என்ற மைல்கல்லை இந்த பிரிவில் கடந்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தமாக 11,483 செல்டோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதுவே முந்தைய 2021ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் 9,869 செல்டோஸ் கார்களையே கியா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் இந்த தென்கொரிய எஸ்யூவி காரின் விற்பனை இந்தியாவில் வருடம்-வருடம் ஒப்பீடுகையில் கிட்டத்தட்ட 16.3% அதிகரித்துள்ளது. ஆனால் இதற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ள மற்றொரு தென்கொரிய எஸ்யூவி காரான ஹூண்டாய் க்ரெட்டாவின் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.

2021 ஜனவரி மாதத்தில் 12,284 யூனிட்கள் விற்கப்பட்டு, இந்த நடுத்தர-எஸ்யூவி கார்கள் விற்பனை லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்திருந்த ஹூண்டாய் க்ரெட்டா கடந்த மாதத்தில் 9,869 யூனிட்களே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் ஹூண்டாய் மோட்டார்ஸின் இந்த மிட்-சைஸ் எஸ்யூவி காரின் விற்பனை கிட்டத்தட்ட 19.6% கடந்த மாதத்தில் குறைந்துள்ளது.
3,725
| Rank | Mid-size SUVs | Jan 22 | Jan-21 | Growth (%) |
| 1 | Kia seltos | 11,483 | 9,869 | 16.3 |
| 2 | Hyundai creta | 9,869 | 12,284 | -19.6 |
| 3 | Mahindra XUV700 | 4,119 | - | - |
| 4 | Mahindra Scorpio | 3,370 | 3,725 | -9.5 |
| 5 | Hyundai Alcazar | 3,168 | - | - |
| 6 | Tata Harrier | 2,702 | 2,443 | 10.6 |
| 7 | Skoda Kushaq | 2,608 | - | - |
| 8 | VW Taigun | 2,432 | - | - |
| 9 | MG Hector | 2,039 | 3,003 | -32 |
| 10 | Tata Safari | 1,210 | - | - |

3வது மற்றும் 4வது இடங்களில் மஹிந்திராவின் நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களான எக்ஸ்யூவி700 மற்றும்ஸ்கார்பியோ உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 4,119 மற்றும் 3,370 யூனிட்களாகும். இதில் ஸ்கார்பியோ கார்களின் விற்பனை 2021 ஜனவரியை காட்டிலும் கிட்டத்தட்ட 9.5% கடந்த மாதத்தில் குறைந்துள்ளது.5வது இடத்தில் ஹூண்டாய் மோட்டார்ஸின் 2021 ஜனவரி மாதத்திற்கு பிந்தைய அறிமுகமான அல்கஸார் உள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 3,168 அல்கஸார் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. டாடா மோட்டார்ஸின் அதிக விற்பனையாகும் நடுத்தர-அளவு எஸ்யூவி காரான ஹெரியரின் கடந்த மாத விற்பனை குறிப்பிடத்தக்க 10.6% வளர்ச்சியை கண்டுள்ளது. ஏனெனில் 2021 ஜனவரியில் 2,443 ஹெரியர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 2,702 ஹெரியர்கள் விற்கப்பட்டுள்ளன.

இதற்கு அடுத்து 7வது மற்றும் 8வது இடங்களில் கடந்த ஆண்டின் புதிய நடுத்தர-அளவு எஸ்யூவி கார்களான ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் மாடல்கள் உள்ளன. கடந்த 2021 ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்த குஷாக் கடந்த மாதத்தில் 2,608 யூனிட்களும், இதனை தொடர்ந்து கூட்டணியில் இருந்து விற்பனைக்கு கொண்டுவர ஃபோக்ஸ்வேகன் டைகுன் 2,432 யூனிட்களும் கடந்த 2022 ஜனவரி மாதத்தில் விற்கப்பட்டுள்ளன.

9வது இடத்தில் எம்ஜி மோட்டாரின் முதல் இந்திய அறிமுகமான ஹெக்டர் எஸ்யூவி 2,039 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. இது 2021 ஜனவரியில் விற்பனை செய்யப்பட்ட ஹெக்டர் கார்களை காட்டிலும் 32% குறைவாகும். கடைசி பத்தாவது இடத்தில் டாடா மோட்டார்ஸின் சஃபாரி உள்ளது. ஹூண்டாய் அல்கஸாருக்கு போட்டியாக களமிறக்கப்பட்ட இதனை கடந்த மாதத்தில் மொத்தம் 1,210 யூனிட்கள் டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications








