பலரின் உயிரை காப்பாத்தியிருக்கு... போட்டி நிறுவனங்களை வாய் பிளக்க வைத்த டாடா கார்... எறங்கி அடிச்சிருக்காங்க!
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பாதுகாப்பான கார் அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் நடப்பாண்டு ஜூலை மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 செடான் கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி டிசையர் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 10,470 டிசையர் கார்களை மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 13,747 ஆக உயர்ந்துள்ளது. இது 31.30 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த பட்டியலில் டாடா டிகோர் கார் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 1,636 டிகோர் கார்களை மட்டுமே டாடா விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 5,433 ஆக உயர்ந்துள்ளது. இது 232.09 சதவீத வளர்ச்சியாகும். இதன் மூலம் இந்த பட்டியலிலேயே விற்பனையில் அதிக வளர்ச்சி சதவீதத்தை பதிவு செய்த கார் என்ற பெருமையை டாடா டிகோர் பெற்றுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் காரின் சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன்களையும் விற்பனை செய்து வருகிறது. அத்துடன் இது பாதுகாப்பான கார்களில் ஒன்றும் கூட. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா டிகோர் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது. சாலை விபத்துக்களில் இருந்து பலமுறை பயணிகளின் உயிரை டாடா டிகோர் காப்பாற்றியுள்ளது.

இதற்கிடையே இந்த பட்டியலில் ஹூண்டாய் அவ்ரா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 4,034 ஆக இருந்த ஹூண்டாய் அவ்ரா காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 4,018 என சற்றே குறைந்துள்ளது. இது 0.40 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் ஹோண்டா சிட்டி நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 3,627 ஆக இருந்த சிட்டி காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 3,149 ஆக குறைந்துள்ளது. இது 13.18 சதவீத வீழ்ச்சியாகும். இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பதும் ஹோண்டா தயாரிப்புதான். அது அமேஸ் கார் ஆகும். கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 1,134 ஆக இருந்த அமேஸ் காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 2,767 ஆக உயர்ந்துள்ளது.

இது 144 சதவீத வளர்ச்சியாகும். சிட்டி கார் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், அமேஸ் காரின் விற்பனை வளர்ச்சி ஹோண்டா நிறுவனத்திற்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் இருப்பது ஸ்கோடா ஸ்லாவியா கார் ஆகும். இது இந்திய சந்தைக்கு புதுவரவு என்பது குறிப்பிடத்தக்கது.

நடப்பாண்டு ஜூலை மாதம் ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தையில் 1,895 ஸ்லாவியா கார்களை விற்பனை செய்துள்ளது. ஸ்கோடா ஸ்லாவியா கார் நடப்பு 2022ம் ஆண்டில்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையை கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிட இயலாது.

இந்த பட்டியலில் ஹூண்டாய் வெர்னா கார் ஏழாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 1,827 ஆக இருந்த ஹூண்டாய் வெர்னா காரின் விற்பனை எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 1,870 என சற்றே உயர்ந்துள்ளது. இது 2.35 சதவீத வளர்ச்சியாகும். இந்த பட்டியலில் மாருதி சுஸுகி சியாஸ் காருக்கு எட்டாவது இடம் கிடைத்துள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் 1,450 சியாஸ் கார்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 1,379 ஆக குறைந்துள்ளது. இது 4.90 சதவீத வீழ்ச்சியாகும். இதற்கிடையே இந்த பட்டியலில் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் கார் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரும் புதுவரவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் நடப்பாண்டு ஜூலை மாதம் இந்திய சந்தையில் 1,338 விர்டுஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரும் இந்திய சந்தையில் நடப்பாண்டுதான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. எனவே இதன் விற்பனை எண்ணிக்கையையும் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாததத்துடன் ஒப்பிட இயலாது.

இதற்கிடையே இந்த பட்டியலில் ஸ்கோடா ஆக்டேவியா கார் பத்தாவது மற்றும் கடைசி இடத்தை பிடித்துள்ளது. ஸ்கோடா நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய சந்தையில் 219 ஆக்டேவியா கார்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பாண்டு ஜூலை மாதம் 231 என சற்றே உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்த காரின் விற்பனை 5.48 சதவீதம் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications








